எரிச்சது பத்தாதுன்னு இப்போ சுத்தியலா.. போட்டியாளர்களின் முகங்களை இப்படி அடித்து நொறுக்குறாங்களே!
சென்னை: பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி முதல் வார இறுதியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. பிக் பாஸ் அல்டிமேட் வீட்டில் 5வது நாளில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதற்கான முதல் புரமோ தற்போது வெளியாகி உள்ளது.
ஏற்கனவே கலந்து கொண்ட போட்டியாளர்கள் என்பதால் சிலர் கன்டென்ட்டுக்காக ஆரம்பத்தில் சண்டை போடுவது போல முயற்சி பண்ணதெல்லாம் சீக்கிரமே சப்பென சால்வ் ஆகி விட்டன.
அதனால், போட்டியாளர்கள் மத்தியில் ரியல் ஃபைட்டை கொண்டு வர சுத்தியலை கொடுத்துள்ளார் நாரதர் பிக் பாஸ்.

முதல் வார கேப்டன்
பிக் பாஸ் அல்டிமேட் வீட்டின் முதல்வார கேப்டனாக போனை ஓடிச் சென்று எடுத்ததால் ஷாரிக் ஆனார். இந்நிலையில், தலைவர் போட்டியில் பங்கு பெறாத போட்டியாளர்களுக்கு இடையே போட்டி நடைபெறும் புரமோ தற்போது வெளியாகி உள்ளது. அதுக்கு நீ சரிப்பட்டு வர மாட்ட என்கிற வடிவேலு வசனத்துடன் கொண்ட டாஸ்க் நிச்சயம் போட்டியாளர்களிடம் சண்டையை கொளுத்திப் போடும் என்பதில் சந்தேகமே இல்லை.

சுத்தியலால் அடிக்கணும்
பாலாஜி முருகதாஸ், அனிதா சம்பத், சுரேஷ் தாத்தா என பல போட்டியாளர்களின் முகம் பதித்த டைல்ஸை சுத்தியல் கொண்டு அடித்து நொறுக்க வேண்டும் என்கிற போட்டி தான் இது. மொத்தம் 10 டைல்ஸில் யாருடைய டைல்ஸ் அதிகம் உடையாமல் காக்கப்படுகிறதோ அவர் தான் இதில் ஜெயிப்பார்.

புகைப்படங்களை எரித்து
ஏற்கனவே கடந்த சீசன்களில் போட்டியாளர்களில் கோபத்தை தூண்ட உருவ புகைப்படங்களை எரிப்பது, பானையை உடைப்பது போன்ற வன்மங்களை தூண்டும் டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டன. இந்நிலையில், தற்போது பெரிய சுத்தியல் கொடுத்து டைல்ஸ்களை உடைக்க சொல்லி உள்ளனர். யாராவது கடுப்பாகி அடுத்தவர் மண்டையை உடைக்காமல் இருந்தால் சரி.

தாத்தா ஏற்கனவே
பிக் பாஸ் 4 சீசனில் செங்கோல் வைத்து சனம் ஷெட்டியின் தலையில் சுரேஷ் தாத்தா அடித்து விட்டார் என்பது பெரும் பிரச்சனையாக மாறியது. இந்நிலையில், சக போட்டியாளர்கள் யாரும் அப்படியொரு சீனை க்ரியேட் பண்ணி விடக் கூடாது என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர். சில நெட்டிசன்கள், டைல்ஸை எல்லாம் வேண்டாம் பிடிக்காதவங்கள் மூஞ்சியிலே அடிங்க என்றும் கமெண்ட்டுகளை போட்டுத் தாக்கி வருகின்றனர்.
Recommended Video

கமலுக்கான கன்டென்ட்டா
வனிதாவின் காபி பிரச்சனையை தவிர இந்த வாரம் பெரிதாக பேச எதுவும் இல்லாததால், கமலுக்கான கன்டென்ட்டாக இந்த டாஸ்க் மாறுமா? என்றும் ரசிகர்கள் கணித்து வருகின்றனர். மேலும், முதல் வாரத்தில் யார் எலிமினேட் ஆகப் போகிறார் என்கிற எதிர்பார்ப்புடனும் தொடர்ந்து பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை ரசிகர்கள் பார்த்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











