தாமரைக்கு எல்லாத் தகுதியும் இருக்கு… பாலாவா இது… என்னென்ன கதை சொல்றாரு பாருங்க!
சென்னை : பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் தாமரைச்செல்வி மீண்டும் கலந்து கொண்டுள்ளார். சீசன்5ல் நிச்சயம் வெற்றி பெறுவார் என்று நாம் அனைவரும் எதிர்பார்த்த நிலையில் திடீரென குறைந்த வாக்குகளை பெற்று வெளியேறினார்.
தாமரைச்செல்வி வெளியேறியது கமலுக்கே அதிர்ச்சியாக இருந்தது என்று கூறினார். இதையடுத்து விட்ட இடத்தை பிடிக்க மீண்டும் போட்டியில் களமிறங்கி உள்ளார் தாமரை.
இந்த வாரம் சிறப்பாக செயல்பட்ட போட்டியாளர்கள் தேர்வு நடைபெறுகிறது. இதில், பாலா தாமரை சிறப்பாக செயல்பட்டதாக கூறுகிறார்.

ஷாரிக் கேப்டன்
பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தொடங்கி முதல் வாரத்திலேயே ஷாரிக் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். வழக்கமாக ஏதாவது ஒரு டாஸ்க் வைத்தே கேப்டனுக்கான தேர்வு நடைபெறும். ஆனால், முதல் கேப்டன் தேர்வவோ வித்தியாசமாக நடைபெற்றது. கார்டன் ஏரியாவிலிருந்த டெலிபோன் மணி அடித்ததும் ஓடிவந்து எடுத்த ஷாரிக் இந்த வாரக் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டடார்.

நிரூப் சிறப்பாக செயல்பட்டார்
இதையடுத்து, இந்த வாரம் முழுவதும் சிறப்பாக செயல்பட்டவர்கள் இரண்டு பேரை தேர்வு செய்து அறிவிக்குமாறு பிக் பாஸ் கூறுகிறார். அது குறித்து தற்போது 3வது ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில், பேசிய சுரேஷ், நிரூப் சிறப்பாக செயல்பட்டார் மேலும், அவர் கடந்த சீசனில் கேப்டனாக சிறப்பாக இருந்தார். இதனால் அவரின் ஆளுமையை பார்க்க விரும்புவதாக கூறினார்.

தாமரைக்கு தகுதி இருக்கு
இதையடுத்து, பேசிய பாலாஜி முருகதாஸ், தாமரை இந்த வீட்டில் சிறப்பாக இருக்கிறார். பாத்திரம் விலக்கும் இடத்திலும் சரி, சமையல் செய்யும் போதும் சரி, அம்மி அரைக்கும் போது இப்படி எல்லா இடத்திலும் தாமரை இருக்கிறார்கள். ஆனால், யாருமே அவங்க பெயரை சொல்லவில்லை. அடுத்த வாரம் கேப்டனாகும் அனைத்து தகுதியும் தாமரைக்கு இருக்கு என்று பாலாஜி முருகதாஸ் கூறினார்.

அதே யுக்தி
பிக் பாஸ் சீசன் 5ல் தாமரை மேல் பிரியங்கா வைத்த முதல் குற்றச்சாட்டே இதுதான், சமையல் செய்தே ஜெயிக்கலானு ஜெயிக்கலாம் என்று நினைக்கிறார் என்று கூறிவந்தார். அதே யுக்தியை பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் கையில் எடுத்துள்ளார் தாமரைச்செல்வி. போன முறை நழுவவிட்ட டைட்டிலை இந்த முறை கைப்பற்றுவாரா என்று பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











