டிராமா பண்றேனா? பாலாஜி முருகதாஸிடம் எகிறிய ஜூலி.. வெடித்தது சண்டை.. கண்ணீர் காட்சிகள் ஆரம்பம்!

சென்னை: பிக் பாஸ் அல்டிமேட்டின் 6வது நாளுக்கான 4வது புரமோ தற்போது வெளியாகி உள்ளது.

ஜூலி மற்றும் பாலாஜி முருகதாஸ் இடையே சண்டை நடக்கும் பரபரப்பான காட்சிகள் இதில் இடம்பெற்றுள்ளன.

அடுத்த வார கேப்டனாக யார் வரவேண்டும் என்கிற போட்டியில் தான் இப்படியொரு பிரச்சனை நடந்திருக்கிறது.

சுரேஷ் தாத்தா கேப்டனா

சுரேஷ் தாத்தா கேப்டனா

சுத்தியல் கொண்டு டைல்ஸ் உடைக்கும் போட்டி கேப்டன் டாஸ்க்கிற்காக நடைபெற்றது. இருவரை தேர்வு செய்து நிரூப் நந்தகுமார் பல மணி நேரங்களை எடுத்ததை பார்த்து வனிதா மட்டும் அல்ல ரசிகர்களும் கடுப்பாகி விட்டனர். அதனை தொடர்ந்து டோலி தூக்குவது போல சுரேஷ் தாத்தா மற்றும் பாலாவை போட்டியாளர்கள் தூக்கிச் சென்றனர். அதில் அப்செட்டான பாலா அவரே கீழே இறங்கி விட்டார்.

விட்டுக் கொடுத்த பாலா

விட்டுக் கொடுத்த பாலா

சுரேஷ் தாத்தாவுக்காக பாலா விட்டுக் கொடுத்தாரா இல்லையா? என்பதை ஷோ பார்த்தால் தான் தெரியும். பாலா கீழே இறங்கிய நிலையில், சுரேஷ் தாத்தா தான் அடுத்த வார கேப்டன் ஆகவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வாரம் சுரேஷ் தாத்தா குறைவான ஓட்டுக்களுடன் வெளியேறினால் அடுத்த வார கேப்டன் பதவி வேஸ்ட் ஆகி விடுமே என்கிற நினைப்பும் பாலாவுக்கு உள்ளது.

கேள்வி கேட்ட ஜூலி

கேள்வி கேட்ட ஜூலி

பாலாவை தூக்கி சுமந்த ஜூலி அவர் திடீரென இறங்கி வந்தது ஏன் என்கிற கேள்வியை எழுப்ப உனக்கு நான் கேப்டனாக வேண்டும் என்றே முதலில் விருப்பமில்லாமல் தானே என்னோட டைல்ஸை சுத்தியலால் உடைச்ச.. இப்போ நான் இறங்கி வந்ததும் ஏன் டிராமா பண்ற என பாலா ஜூலியிடம் பதிலுக்கு எகிறினார்.

டிராமா பண்றேனா

டிராமா பண்றேனா

ஏற்கனவே வயித்த வலிக்குதுன்னு ஜூலி முதல் சீசனில் டிராமா போட்டதாக பெரும் பஞ்சாயத்தே ஏற்பட்டது. இந்நிலையில், பாலா டிராமா பண்ணாத என சொன்னதும் கொதித்த ஜூலி டிராமா பண்றேன் நீ எப்படி சொல்லலாம் என வெளுத்து வாங்கிவிட்டார். இருவருக்கும் இடையே பலத்த மோதல் வெடிக்கும் புரமோ ரசிகர்களை ஷோவை பார்க்க தூண்டியுள்ளது.

Recommended Video

Julie -ஐ Target செய்கிறாரா Balaji?? | Bigg Boss Ultimate Tamil
ஜூலி அழுகை

ஜூலி அழுகை

பிக் பாஸ் தமிழ் சீசன் 5ல் அக்‌ஷரா மற்றும் பாவனி ஆரம்பம் முதல் கடைசி வரை அழுது சீன் போட்ட நிலையில், இந்த சீசனில் போட்டியாளர்கள் செம ஸ்ட்ராங்காக உள்ளனரே என நினைத்த நிலையில், பாலா பேசியது ஜூலியை மிகவும் ஹர்ட் ஆக்கிய நிலையில், அவர் அழுது கொண்டிருக்கும் காட்சிகள் இந்த புரமோவில் இடம்பெற்றுள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X