“நீங்க இந்த வீட்டுக்கு ஓனர் இல்லை“… வனிதாவை அசிங்கப்படுத்திய பாலா!
சென்னை: டிஸ்னி பிளாஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் 3வது ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில், வனிதாவை பங்கமாக கலாய்க்கிறார் பாலா.
இந்த ப்ரோமோவை பார்த்த நெட்டிசன்ஸ் வனிதாவை திட்டத்திட்டத்தான் அவர் வளர்ந்து கொண்டே இருக்கிறார். அதனால் அவரை விட்டுவிடுங்கள் என்று கூறியுள்ளனர்.
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் ஹைலைட் இரவு 9 மணிக்கு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாக உள்ளது.

வனிதா விஜயகுமார்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் அறிமுகமாகி ஏற்கனவே ரசிகர்கள் பலரையும் மிரட்டிய வனிதா தற்போது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் தன்னுடைய திறமையை வெளிக்காட்ட மீண்டும் அறிமுகமாகியிருக்கிறார். வாழ்க்கையிலும், சினிமாக்களிலும் திறந்த புத்தகமாக இருந்து வருகிறார் வனிதா விஜயகுமார.

அடாவடி வனிதா
வனிதாவின் அடாவடியான கேரக்டரை ரசிகர்கள் பலர் வெறுத்து கொண்டிருந்தாலும், அவருடைய தீவிரமான ரசிகர்கள் அவருக்கு ஆதரவு கொடுத்துக் கொண்டுதான் இருக்கின்றனர். இதற்கு முன்பு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்கள் கொடுத்த ஆதரவினால் தான் இவரால் பல நாட்கள் தாக்குப் பிடிக்க முடிந்தது. அதேபோல குக் வித் கோமாளியிலும் சிறப்பாக சமைத்து வெற்றி பெற்றார்.

மக்கள் முடிவு பண்ணட்டும்
தற்போது பிக் பாஸ் அல்டிடேட் நிகழ்ச்சியிலும் பிக்பாஸ் வனிதா கலந்து கொண்டுள்ளார். முதல் நாளே தனது வேலையை வனிதா போட்டியாளர்களிடம் காட்டி வருகிறார். காலையில் வெளியான ப்ரோமோவில் இது சரியா... தப்பா என்பதை நீங்க முடிவு பண்ண முடியாது மக்கள் முடிவு பண்ணணும். இந்த டாஸ்கிலிருந்து நான் வெளியில போறேன் என்று கூறியுள்ளார்.

நீங்க ஓனர் இல்லை
இதையடுத்து, தற்போது வெளியாகி உள்ள 3வது ப்ரோமோவில், நான் டாஸ்க் விளையாட இந்த வீட்டுக்குள்ள வரல, நான் நானா இருக்க மட்டும் தான் வீட்டுக்குள் வந்தேன் என்று கராராக கூறுகிறார் வனிதா. உடனே, ஷாரிக் நான் கேப்டன் நான் செல்வதைத்தான் நீ கேட்கவேண்டும் என்று கூறுகிறார். நீ சொல்வதை எல்லாம் என்னால் கேட்கமுடியாது போடா... என்று கூறினார். இதையடுத்து, பேசிய பாலா, உங்க சொந்த வீடுனு நினைச்சிக்கிட்டீங்க நீங்க ஓனர் இல்லை ஹவுஸ்மெட் என்று வனிதாவுக்கு சரியான நோஸ்கட் கொடுத்தார். இதற்கு முன்பும் பாலா அர்ச்சனாவை பார்த்து இதேபோல கூறியிருந்தார்.


Click it and Unblock the Notifications











