பக்கா கேம் ஃபிளான்... கவனமாக விளையாடும் போட்டியாளர்கள்.. மவுனம் காக்கும் ஜூலி !

சென்னை : பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் இந்தவாரக் கேப்டனாக ஷாரிக் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

நேற்று கமலின் முன்பு ஆஹோ ஓஹோ என்று பேசியவர்கள், வாய திறந்தால்தானே பிரச்சினை என்று, அனைவரும் இருக்கும் இடம் தெரியாமல் இருக்கிறார்கள்.

அடாவடி அக்கா வனிதா கூட பல நேரத்தில் அமைதியாகவே இருக்கிறார்கள். லிவ்விங் ஏரியாவில் அமர்ந்து கொண்டு ஒருவரின் முகத்தை ஒருவர் பார்த்து வருகின்றனர்.

பிக் பாஸ் அல்டிமேட்

பிக் பாஸ் அல்டிமேட்

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி நேற்று கோலாகலமாக தொடங்கியது. இதில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் அனைவருமே ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்தவர்கள் என்பதால், விளையாட்டின் நுணுக்கங்களை நன்று அறிந்து இருக்கிறார்கள். நேற்று கமலின் முன்பு நான் யார் என்று காட்டுவேன் என்று கூறிய அனைவரும் அமைதியாக இருக்கிறார்கள்.

ஷாரிக் கேப்டன்

ஷாரிக் கேப்டன்

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் முதல் கேப்டனாக ஷாரித் தேர்வு செய்யப்பட்டுள்ளார். முதல் நாளே போட்டியாளர்கள் மிகவும் கவனமாக விளையாடுகின்றனர். தேவை இன்றி பேசாமல், அளவுடன் பேசி வருகிறார்கள். வழக்கமாக அனைத்து பிரச்சினைகளுக்கும் கொம்பு சுத்தும் சுரேஷ் சக்ரவத்தி கொஞ்சம் அடக்கிவாசிப்பது போல தெரிகிறது. அதேபேலே , படபடவென பேசி சர்ச்சையில் சிக்கிக்கொள்ளும் ஜூலியும் மௌனம் காத்து வருகிறார்

அமைதியான ஜூலி

அமைதியான ஜூலி

ரேஷன் பொருட்கள் வந்தது, அனைத்து வேலைகளையும் இழுத்துப்போட்டு பொறுப்பான நபர் போல நடந்து கொண்டார் நிரூப். ஒவ்வொரு சமயமும் வார்த்தையால் விளையாடும் தாடிபாலாஜி கமல் கூறியது போல அனைவரையும் சிரிக்கவைக்க முயற்சி செய்கிறார் ஆனால், அது எடுபடவில்லை. அவரின் காமெடிகள் மொக்கையாகவே சிரிக்கமுடியாமல் இருக்கிறார். அதேபோல சினேகனும் தாமரை இலையில் தண்ணீர் போல யாரிடமும் ஒட்டாமலே இருக்கிறார்

Recommended Video

Abhirami Kannamma கடைசி Video | உங்க Love எனக்கு வேணும், BB Ultimate
வனிதா நாமினேசன்

வனிதா நாமினேசன்

வழக்கமாக ஒருவாரம் கழித்துத்தான் நாமினேஷன் நடக்கும் ஆனால், பிக் அல்டிமேட் நிகழ்ச்சியின் முதல் நாளான இன்றே நாமிஷேன் நடைபெற்றது. இதில், பெரும்பாலான போட்டியாளர்கள் வனிதாவின் பெயரை நாமினேட் செய்தனர். தான் சொல்வதைத்தான் வீட்டில் இருப்பவர்கள் கேட்க வேண்டும் என நினைப்பதாக கூறி அவரை நாமினேட் செய்தனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X