சரியா, தப்பா மக்கள் சொல்லட்டும்.. டாஸ்கிலிருந்து வெளியேறிய வனிதா.. இப்பவே இப்படி பண்ணா எப்படி?
சென்னை : பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் ஆரம்பமே அமர்களமாக உள்ளது. வழக்கமாக ஒருவாரம் கழித்துதான் நாமினேஷன் நடைபெறும் ஆனால், முதல் நாளான இன்றே நாமினேஷன் தொடங்கி உள்ளது.
தற்போது வெளியாகி உள்ள 2வது ப்ரோமோவில் வனிதா விஜயகுமார் கோபித்துக்கொண்டு டாஸ்கிலிருந்து வெளியேறுகிறார்.
இதைப்பார்த்த, ரசிகர்கள் வனிதா அக்கா வந்ததும் வேலையை ஆரம்பிச்சிட்டாங்களா என கேட்டு வருகின்றனர்.

நாமினேஷன்
பிக் பாஸ் அல்டிமேட்டில் நிகழ்ச்சியின் முதல் நாளே நாமினேசனை ஆரம்பித்து போட்டியாளர்களிடையே கொளுத்துப்போட்டு தன் வேலையை சிறப்பாக ஆரம்பித்துள்ளார் பிக் பாஸ். இதில் பல போட்டியாளர்கள் வனிதாவையை நாமினேட் செய்தனர். குறிப்பாக அனிதா சம்பத், வனிதா, தான் சொல்வதைத்தான் வீட்டில் இருப்பவர்கள் கேட்க வேண்டும் என நினைப்பதாக கூறி அவரை நாமிடேட் செய்தார்.

ஆமானா குடி... இல்லனா கடி
இதையடுத்து, தற்போது பிக் பாஸ் அல்டிமெட் நிகழ்ச்சியின் 2ப்ரோமோ டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் வெளியிட்டுள்ளது. இதில், ஆமானா குடி... இல்லனா கடி என்ற வித்தியாசமான டாஸ்க்கை கொடுக்கப்பட்டுள்ளது. இதில், போட்டியாளர்களுக்கு இடையே சுவாரசியமான கேள்வி கேட்கப்படுகிறது. இதற்கு ஆம் என்றால் பாவக்காய் ஜூசை குடிக்க வேண்டும் இல்லை என்றால் ஸ்னேக்சை சாப்பிட வேண்டும்.

டாஸ்கிலிருந்து வெளியேறினார்
இந்த டாஸ்கில் வனிதாவிடம் ஏதோ ஒரு எடக்கு முடக்கான கேள்வி கேட்க கடுப்பான வனிதா, பிக்பாஸ் இதற்கு பதில் உங்களுக்கும் தெரியும் உலகத்திற்கே தெரியும் என்று கூறுகிறார். உடனே சினேகன் யாருக்கும் தெரியாது என்று கூற, இது சரியா... தப்பா என்பதை நீங்க முடிவு பண்ண முடியாது மக்கள் முடிவு பண்ணணும். இந்த டாஸ்கிலிருந்து நான் வெளியில போறேன் என்று கூறியுள்ளார்.
Recommended Video

ஆரம்பமே இப்படியா
வனிதாவின் பழக்கமே இதுதான் என்றாலும் முதல் நாளே நீலாம்பரியாக மாறியுள்ளார். ஆரம்பமே இப்படினா இனிமே தான் ஆட்டம் களை கட்டப்போது. பிக் பாஸ் அல்டிடேட் பற்றி எரியபோகுது. இந்த கண்கொள்ளக் காட்சியை காண பிக் பாஸ் ரசிகர்கள் டிஸ்னிபிளாஸ் ஹாட்ஸ்டாரை சப்க்ரைப் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











