யாரு ஃபிராடு...தாமரையிடம் வசமாக சிக்கிக் கொண்ட வனிதா

சென்னை : பிக்பாஸ் அல்டிமேட்டில் இன்று மற்றவர்களை போல் தாமரையிடமும் வாய் விட்டு மாட்டிக் கொண்டுள்ளார் வனிதா விஜயக்குமார். வனிதாவை எதிர்த்து வாக்குவாதம் செய்ததால் தாமரைக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

24 மணி நேர நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சியாக பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. 14 போட்டியாளர்களடன் துவங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் இதுவரை சுரேஷ் சக்கரவர்த்தி மற்றும் சுஜா வருணி ஆகியோர் எவிக்ஷன் மூலம் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

ஆரம்ப முதலே வனிதாவிற்கும் மற்ற போட்டியாளர்களுடன் மோதல், வாக்குவாதம் என நடைபெற்று வருகிறது. தினம் ஒருவர் என வனிதா சண்டை போடாத ஆளே இல்லை என சொல்லும் அளவிற்கு வனிதா மற்ற போட்டியாளர்களை ஆதிக்கம் செலுத்தி வருகிறார். இதற்கிடையில் இந்த வார கேப்டனாகவும் வனிதா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Bigg boss ultimate...fans appriciate thamarai oppose vanitha

80 களின் கல்லூரி டாஸ்க்கை போட்டியாளர்கள் சொதப்பியதை அடுத்து, வேதாள விளக்கு டாஸ்க் வனிதாவிற்கு வழங்கப்பட்டது. இதையும் பாலாவை பழிவாங்குவதற்காக வனிதா பயன்படுத்தினார். ஆனால் அதே விளக்கை பாலா, வனிதாவிடம் திருப்பி கொடுத்த போது, பழிவாங்கும் எண்ணம் கொண்டவர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கவே தகுதியில்லாதவர் என விமர்சித்தார்.

இந்நிலையில் அடுத்த டாஸ்காக கார்டன் ஏரியாவில் வைக்கப்பட்டுள்ள தொட்டிலில் ஒவ்வொருவரும் தங்களுக்கு வழங்கப்பட்ட பொம்மையை வைக்க வேண்டும். மியூசிக் சேர் போன்று யாருக்கு தனது பொம்மை போட தொட்டில் இடமில்லையோ அவர் போட்டியில் இருந்து வெளியேற்றப்படுவார் என பிக்பாஸ் தெரிவித்தார். இதிலும் வனிதாவிற்கும் மற்ற போட்டியாளர்களுக்கும் மோதல் ஏற்பட்டது.

மற்றவர்களை போல் வனிதா, தாமரையை பார்த்து ஃபிராடு...உன்னுடைய பொம்மை காப்பாற்ற இப்படி செய்தாய் என்றார். இதனால் கொந்தளித்த தாமரை, வனிதாவை லெஃப் அண்ட் ரைட் வாங்கினார். தன்னை அப்பாவி என காட்டி கொள்ள தாமரை இப்படி செய்வதாக வனிதா மற்றவர்களிடம் ஆங்கிலத்தில் கூறியதற்கும் தாமரை பதிலடி கொடுத்தார். அவர் குறும் படம் போட்டு காண்பித்தால் முகத்தை எங்கே கொண்டு போய் வைத்துக் கொள்வார் என கேட்டதும் வனிதா அப்படியே அமைதியாகி விட்டார்.

இந்த வாக்குவாதத்தை பார்த்த ரசிகர்கள், தாமரையை பாராட்டி வருகின்றனர். தாமரை ஃபயர். வனிதாவையே அடங்க வைத்து விட்டாரே என வியந்து பாராட்டி வருகின்றனர். இது லைவ் என்று போட்டு வந்தவர்கள் தற்போது இந்த காட்சி இத்தனை மணிக்கு ஒளிபரப்பாக உள்ளதை என்பதை குறிப்பிட்டு ப்ரோமோ வெளியிட்டுள்ளதையும் ரசிகர்கள் பாராட்டி உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X