சாப்பாட்டை குப்பையில் கொட்டிய வனிதா.. டென்ஷனான தாமரை !
சென்னை : வனிதா எங்கெல்லாம் இருக்கிறாரோ அங்கெல்லாம் பிரச்சனைகளுக்கு பஞ்சமே இருக்காது.
இன்றைய நிகழ்ச்சியில் தாமரை சமைத்த சாப்பாடு சரியில்லை என கூறி குப்பையில் கொட்டி பிரச்சினையை தொடங்கி உள்ளார் வனிதா.
இதைப்பார்த்த நெட்டிசன்ஸ் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

குறைந்த மார்க்
பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில், கேப்டனாக இருந்த வனிதாவின் செயல்பாடுக்கு மதிப்பெண் அளிக்கும்படி கமல் கூறினார். இதற்கு போட்டியாளர்கள் அனைவரும் ஒன்று, இரண்டு என மதிப்பெண் அளித்து, வனிதாவை கடுமையாக விமர்சித்தனர். இதனால், கடுப்பான வனிதா, மிகவும் சோர்ந்து காணப்பட்டார்.

உங்களுக்கு தகுதி இல்லை
நேற்றைய எபிசோடில், எந்த டாஸ்கிலும் கலந்த கொள்ளாமலும், அனைவர் இடத்திலும் பேசாமலே இருந்தார். நிரூப் டாஸ்கில் கலந்து கொள்ளுங்கள் என்று பல முறை கேட்டும் அவரை ஒருமையில் பேசி, போடா உன் வேலையை பாரு, எனக்கு மார்க் போட உங்களுக்கு என்ன தகுதி இருக்கு என கண்டபடி திட்டிதீர்த்துவிட்டார்.

கதறி அழுத வனிதா
இந்த வார கேப்டனாக தாமரை இருக்கும் நிலையில், கிச்சன் டீம், கிளினிங் டீம் என எந்த டீமிலும், வனிதா வேலை செய்யவில்லை. இதையடுத்து, பிக் பாஸிடம் பேசிய வனிதா, இந்த வீட்டில் அனைவரும் பொய்யாக இருக்கிறார்கள், நடிக்கிறார்கள் இவர்களுடன் என்னால் இருக்க முடியாது ப்ளீஸ் என்னை வீட்டுக்கு அனுப்புங்க என்று கதறி கதறி அழுதார். வனிதாவுக்கு ஆறுதல் கூறிய பிக் பாஸ், இந்த வீட்டில் இருப்பவர்களை நம்பி நீங்கள் இல்லை, இதனால் நம்பிக்கையுடன் விளையாடுங்கள் என்று ஆறுதல் கூறினார்.

வனிதா தாமரை சண்டை
கிச்சன் கேப்டனாக இருக்கும் தாமரை செய்த சமையல் சரியில்லை என்று கூறி வனிதா அவரிடம் சண்டை போடுகிறார். நீங்களும் இப்படித்தான் சமைப்பீங்க என்று தாமரை கூற, என்னை பத்தியும் என் சமையல் பத்தியும் நீ பேசாதே என்று அவரிடம் பாய்கிறார் வனிதா. இதையடுத்து, நீங்களும் தவறான வார்த்தையை பயன்படுத்தாதீங்க என்று கூற இருவருக்குள் வாக்குவாதம் முற்றி கொள்கிறது.

மரியாதைக்குறைவாக
இந்த வீட்டில் நிம்மதியா சாப்பிடக்கூட முடியல எப்போ பாரு எதாவது கத்திக்கிட்டே இருக்குறீங்க என கூறிவிட்டு, இது எல்லாம் ஒரு சாப்பாடா என்று, சாப்பாட்டை குப்பையில் கொட்டி விடுகிறார் வனிதா. வீட்டில் இருப்பவர்களிடம் மிகவும் மரியாதைக் குறைவான வகையிலே வனிதா பேசி வருகிறார். ஆனால், இதை கமல் கண்டுக்கொள்வதே இல்லை

திருப்பி கொடுங்க
வனிதா தாமரையின் சண்டையைப் பார்த்த நெட்டிசன்ஸ், தாமரை அக்கா, செமத்தியாக திருப்பி கொடுக்கனும். இதெல்லாம் பத்தாது. அத்தனை பேரும் குறைத்து மார்க் போட்டீங்களா, இப்ப பாருங்க வனிதா என்ன பண்றாங்கனு கேட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











