பிராங்க் செய்த பாலாஜிக்கு அதிர்ச்சி கொடுத்த பிக்பாஸ்... வாயைக்கொடுத்து மூக்குடைப்பட்ட வனிதா!
சென்னை : பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி சுவாரசியமாக 4வது வாரத்தில் நுழைந்துள்ளது.
இதில் இந்த வாரத்தில் டபிள் எவிக்ஷன் என்பதால் தாரிக் மற்றும் அபிநய் இந்த வாரம் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
16 போட்டியாளர்களுடன் தொடங்கி பிக்பாஸ் வீட்டில் தற்போது 12 போட்டியாளர்கள் இருக்கிறார்கள்.

பிக்பாஸ் அல்டிடேட்
பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் போட்டியாளர்களிடையே நேற்று கமல்ஹாசன் கலந்துரையாடினார். இதில் வனிதா , கேப்டனாக இருந்த போது செயல்பட்ட விதம் குறித்து , வனிதாவை வீட்டிற்குள் அனுப்பிவிட்டு மற்ற போட்டியாளர்களை மதிப்பெண் அளிக்கும்படி கூறினார். பலரும் வனிதா கேப்டனாக இருந்து எதையும் செய்யவில்லை. அவர்கள் மற்றவர்களை குற்றம் சொல்வதிலேயே குறியாக இருக்கிறார்கள் என்றனர்.

பாலா அதிர்ச்சி
அதேபோல, பாலா பிராங் செய்தது குறித்து மற்ற போட்டியாளர்களிடம் கேட்டார். பலரும் பாலா பிராங் செய்ததில் உடன்பாடு இல்லை. அவர் வேற எதிலாவது பிராங்க் செய்து இருக்கலாம், எவிக்ஷன் பெயரில் செய்தது தவறு என்று பலரும் கருத்து கூறினர். உடனே, இந்த வாரம் டபிள் எபிக்ஷன் இருக்கும் என்று முன்பே கூறியிருந்தேன் என்று கூறி பாலாவின் பெயரை காட்டி வெளியே வருமாறு கூறினார்.

பாலாவை பிராங் செய்த பிக்பாஸ்
இதையடுத்து, பாலா வெளியே வருவதற்கு தயாரானார். அப்போது வனிதா தமக்கு வெளியில் நிறைய ரசிகைகள் இருக்கிறார்கள் என்பதற்காக ஆட்டம் போட்டால் இப்படித்தான் நடக்கும். இதனால் நான் பலமுறை அவனை எச்சரித்தேன் என்று கூறிக்கொண்டே இருந்தார் வனிதா. வெளியே போக தயாராக இருந்த பாலாவைப் பார்த்து என்ன கிளப்பியாச்சா என்று கேட்டு இது பிராங்க் என்றார் கமல்.

நக்கலடித்த கமல்
இதனால், மற்ற போட்டியாளர்கள் மகிழ்ச்சியில் குதிக்க வனிதா மட்டும் செம கடுப்பாகிப் போனார். முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு பாலாஜிக்கு வாழ்த்துக்கூட சொல்லாமல் கோபமாக வனிதா உள்ளே வந்தார். பின் அனைவரையும் உள்ளே அழைத்த கமல், வனிதாவை பார்த்து என்ன வனிதா சோகமா இருக்கீங்க? உங்களுக்கு இந்த பிராங்க் பிடிக்கவில்லையா என நக்கலாக கேட்டார்.பின்னர் நானும் சிகப்புக்கண்ணாடியைத்தான் போட்டுக்கொள்வேன் என்று ( பிராங்கை பிடிக்கும் என்றவர்கள் சிகப்புக் கண்ணாடி அணியலாம், பிடிக்காதவர்கள் வெள்ளைக்கண்ணாடி அணியலாம் என்று முன்னர் பிக்பாஸ் சொல்லியிருந்தார் ) கூறி பாலாஜியின் செயலுக்கு தானும் ஆதரவு என்று சிரிக்க வைத்தார்.

யார் தொகுத்து வழங்குவார்கள்
விக்ரம் படத்தின் இறுதிக்கட்ட பணிகளை முடித்துக் கொடுக்க வேண்டிய நிலைக்கு கமல் ஆளாகி இருப்பதால், பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை இனி அவர் தொகுத்து வழங்கமாட்டார். இதனால், பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்குவார்கள் என்ற சர்ச்சை எழுந்துள்ளது. இதில் சரத்குமார் மற்றும் ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











