Don't Miss!
- News
உயரப் போகுது விலை! தங்கம், வெள்ளி, வைரம், பிளாட்டினம் இறக்குமதிக்கு வரி அதிகரிப்பு
- Finance
7 லட்சம் வரையில் ஜீரோ வருமான வரி.. முழு விபரம்..! யாருக்கெல்லாம் நன்மை..!
- Sports
அடுத்த விக்கெட்டும் காலி.. ஆஸி,டெஸ்ட் தொடரில் இந்தியாவுக்கு பெரும் அடி.. என்ன செய்யப்போகிறார் ரோகித்
- Lifestyle
உங்களுக்கு இந்த கலர்ல சிறுநீர் வருதா? அது புற்றுநோயோட அறிகுறியா கூட இருக்கலாமாம்...ஜாக்கிரதை!
- Technology
மலிவு விலையில் 28 நாட்கள் வேலிடிட்டி உடன் புதிய திட்டத்தை அறிமுகம் செய்து அதிரடி காட்டிய Vodafone Idea!
- Automobiles
இந்த மாதிரி டபுள்-டக்கர் பேருந்து எல்லாம் வந்தா நம்ம சென்னை வேற லெவல் ஆயிடும்!! அதுவும் எலக்ட்ரிக் தரத்தில்...
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
ப்ளீஸ்… என்னை வீட்டுக்கு அனுப்புங்க... பிக்பாஸிடம் கதறி அழுத வனிதா !
சென்னை : பிக் பாஸ்அல்டிமேட் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடில், என்னை வீட்டுக்கு அனுப்பி விடுங்கள் என்று வனிதா கதறி அழுதார்
பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இதுவரை சுரேஷ் சக்கரவர்த்தி, சுஜா, அபிநய், தாரிக் ஆகியோர் வெளியேறி உள்ளனர்.
தற்போது பிக் பாஸ் வீட்டில் 10 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர்.
தூக்கங்களை தூக்கி சென்றாய்... பீலிங் காட்டிய தர்ஷா குப்தா

பிக் பாஸ் அல்டிமேட்
பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் போட்டியாளர்களிடையே நேற்று கமல்ஹாசன் கலந்துரையாடினார். இதில் வனிதா , கேப்டனாக இருந்த போது செயல்பட்ட விதம் குறித்து , வனிதாவை வீட்டிற்குள் அனுப்பிவிட்டு மற்ற போட்டியாளர்களை மதிப்பெண் அளிக்கும்படி கூறினார். பலரும் வனிதா கேப்டனாக இருந்து எதையும் செய்யவில்லை. அவர்கள் மற்றவர்களை குற்றம் சொல்வதிலேயே குறியாக இருக்கிறார்கள் என்றனர்.

கதறி அழுதார்
மேலும், பாலாவின் பிராங்க் விஷயத்திலும் கமல், வனிதாவை நக்கலடிக்கும் விதத்தில் பேசினார். இதனால், முகத்தை தூக்கி வைத்துக்கொண்டே இருந்தார் வனிதா. இன்று பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில், நாமினேஷன் பிராசஸ் நடைபெற்றது. அப்போது, பேசிய வனிதா, ஏன் கோபப்படுகிறேன் என்றே எனக்கு தெரியவில்லை , இந்த வீட்டில் என்னால இருக்க முடியாது ப்ளீஸ் என்னை வெளியில் அனுப்பி விடுங்கள் என்று கதறி அழுதார்.

ஆறுதல் கூறிய பிக் பாஸ்
கிட்டத்தட்ட ஒரு மணிநேரத்திற்கும் மேலாக, வனிதா பிக் பாஸிடம் கதறி அழுதார். அவரை பிக் பாஸ் சமாதானப்படுத்தி நீங்கள் ஒரு தைரியமான பெண் இந்த வீட்டிற்கு நீங்கள் யாரை நம்பியும் வரவில்லை என்பதை புரிந்து கொண்டு விளையாடுங்கள். உங்களுக்கு எப்போதெல்லாம் என்னிடம் பேச வேண்டும் என்று தோன்றுகிறதோ தயங்காமல் என்னிடம் பேசுங்கள் என்று கூறினார். இதையடுத்து வனிதா சமாதானம் ஆனார்.

நாமினேஷனில் 8 பேர்
வனிதா அழுததைப் பார்த்த நெட்டிசன்ஸ் பலர் யாருடா வனிதா அக்காவை அழவைத்தது என்று கேட்டு கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர் . இதையடுத்து, இன்றைய நிகழ்ச்சியில், தாமரை , பாலாவைத்தவிர மற்ற 8 போட்டியாளர்களான அபிராமி, ஸ்ருதி, பாலாஜி,வனிதா, நிரூப், ஜூலி,சினேகன், அனிதா ஆகியோர் நாமினேஷன் ப்ராசஸில் இடம் பிடித்துள்ளனர்.