கடைசி நேரத்தில் கண் விழித்த வனிதா ஆர்மி.. பிக் பாஸ் அல்டிமேட்டில் முதல் எலிமினேஷன் இவர் தானா?
சென்னை: பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் ஓட்டுக்கள் ஒரே மாதிரி இல்லாமல் ஒவ்வொரு நாளும் உள்ளே நடக்கும் நிகழ்வுகளுக்கு ஏற்ப மாறி வருகின்றன.
ஆரம்பத்தில் ஜூலி குறைவான ஓட்டுக்களுடன் கடைசி இடத்தில் இருந்த நிலையில், அவரது பிரஸ் மீட் டாஸ்க்கிற்கு பிறகு கிடுகிடுவென மேலே உயர்ந்தார்.
ஜூலி மேலே ஏறியதும் வனிதா விஜயகுமார் கடைசி இடம் பிடித்து இந்த வாரம் எலிமினேட் ஆகும் சூழ்நிலையில், இருந்த நிலையில், தற்போது அவரும் முன்னேறியுள்ளார்.

டஃப் போட்டியாளர்கள்
14 பேருமே ஒவ்வொரு விதத்தில் டஃப் போட்டியாளர்களாகவே உள்ளனர். அதில் கொஞ்சம் வீக்கென பார்த்தால் விரல் விட்டு ஒரு நான்கு போட்டியாளரை மட்டும் தான் இப்போதைக்கு சொல்ல முடியும் அந்த அளவுக்கு ஒவ்வொரு போட்டியாளர்களும் கன்டென்ட் கொடுப்பதிலும் தங்களை எப்படி இந்த ஷோவில் தக்க வைப்பது என்பதிலும் ரொம்பவே புத்திசாலித்தனமாக செயல்பட்டு வருகின்றனர்.

முன்னேறிய ஜூலி
பிக் பாஸ் அல்டிமேட் முதல் வாரத்திலேயே முதல் சீசன் போட்டியாளரான ஜூலி எவிக்ட் ஆகி விடுவாரோ என ரசிகர்கள் பயந்த நிலையில், பிரஸ் மீட் டாஸ்க்கை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு நெகட்டிவிட்டிகளை எப்படி சமாளித்தேன் என செம மெச்சூரிட்டியாக பேசி ஓட்டுக்களை அள்ளினார். அவருக்கு இந்த அளவுக்கு ஓட்டுக்களும் ஆதரவும் குவிய தாடி பாலாஜி கேட்ட சில கேள்விகளும் காரணம்.

கிரேட் எஸ்கேப் வனிதா
நாமினேட் செய்யப்பட்ட 8 பேரில் ஜூலி கடைசி இடத்தில் இருந்து மேலே ஏறியதும், வனிதா விஜயகுமார் அந்த இடத்தில் சிக்கித் தவித்தார். வியாழக் கிழமை வரை வனிதா விஜயகுமாருக்கு ஓட்டுக்களே அதிகமாக கிடைக்காத நிலையில், பிக் பாஸ் வீட்டில் எதார்த்தமாக நடந்து கொள்ள வனிதா ஆரம்பித்ததில் இருந்து அவருக்கு ஓட்டுக்கள் குவியத் தொடங்க ஆரம்பித்து தற்போது எவிக்ஷனில் இருந்து கிரேட் எஸ்கேப் ஆகி விட்டார்.

டேஞ்சர் ஜோனில் இருவர்
ஜூலி மற்றும் வனிதா விஜயகுமார் முன்னேறிய நிலையில், கடைசி இடத்தில் தற்போது சுரேஷ் தாத்தா மற்றும் அபிநய் வாடி இருவரும் உள்ளனர். பிக் பாஸ் சீசன் 5ல் எப்பவோ வெளியேறி இருக்க வேண்டிய அபிநயை ஏகப்பட்ட சித்து வேலைகளை செய்து பல நாட்கள் காப்பாற்றினார் கமல் என சமூக வலைதளங்களில் குற்றச்சாட்டுக்கள் கிளம்பிய நிலையில், இப்பவும் அவர் காப்பாற்றப்படுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

எவிக்ஷன் இருக்குமா?
இந்த வாரம் கடைசி இடத்தில் மிகவும் குறைவான ஓட்டுக்களுடன் அபிநய் தான் உள்ளார். அபிநயை சேவ் செய்யும் முயற்சியில் தான் தற்போது சுத்தியல் டாஸ்க் கொடுக்கப்பட்டு இருப்பதாக நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும், சிலர் முதல் வாரம் என்பதால் இந்த வாரம் எவிக்ஷன் இருக்காது என்றும் எதிர்பார்க்கின்றனர். அப்படியொருவேளை எவிக்ஷன் இருந்தால் அபிநய் அல்லது சுரேஷ் சக்கரவர்த்தி இருவரில் ஒருவர் வெளியேறுவார்கள்.
Recommended Video

லீக் ஆகிவிடும்
பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் வார இறுதி ஷூட்டிங் நாளை நடைபெறும் நிலையில், நாளை மாலை யார் எலிமினேட் ஆனார்கள் என்பதும் எலிமினேஷனே இல்லையா? என்கிற தகவலும் லீக் ஆகிவிடும். முதல் வாரமே அதிரடி ஆரம்பம் இருக்குமா? இல்லை இரண்டாவது வாரத்தில் தான் எலிமினேஷனா என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











