வனிதா முதல் சினேகன் வரை.. பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 14 போட்டியாளர் இவங்க தான்!

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 5 முடிந்து இரு வாரங்களே ஆன நிலையில், மீண்டும் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ரசிகர்களை 24 மணி நேரமும் என்டர்டெயின் பண்ண வந்து விட்டது.

ஒரு மணி நேர ஷோவுக்காக தினமும் கொஞ்ச நேரம் ஷூட்டிங் நடத்திட்டு மத்த நேரம் ரெஸ்ட் கொடுத்து விடுவார்கள் என்றும் முழுக்க முழுக்க ஸ்க்ரிப்டட் ஷோ என்றும் விமர்சனங்கள் எழுந்து வந்த நிலையில், 24 மணி நேர நிகழ்ச்சியை ஒளிபரப்பும் முயற்சியில் பிக் பாஸ் குழு இறங்கி உள்ளது.

கமல்ஹாசன் தொகுத்து வழங்க டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் 70 நாட்கள் இந்த ஷோ ஒளிபரப்பாக உள்ளது.

முதலாவது வனிதா விஜயகுமார்

முதலாவது வனிதா விஜயகுமார்

பிக் பாஸ் சீசன் 3ல் கலந்து கொண்டு கலக்கிய வனிதா விஜயகுமார் பிக் பாஸ் அல்டிமேட்டின் முதல் போட்டியாளராக பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்தார். இதற்கு முன் செய்த சிறிய தவறுகளை சரி செய்து விட்டு இந்த முறை வெற்றியை நோக்கி பயணிப்பேன் என சொன்னார். தேன் பாட்டிலை கமல் அவருக்கு பரிசாக கொடுத்து உள்ளே அனுப்பினார்.

2வது நிரூப்

2வது நிரூப்

ஜனவரி 16ம் தேதி வரை பிக் பாஸ் வீட்டுக்குள் இருந்த நிரூப் முழுசா வீட்டுக்கு கூட போயிருப்பாரா? அல்லது பிக் பாஸ் அல்டிமேட் குவாரண்டைனுக்கு வந்து விட்டாரா என்றே தெரியவில்லை. எப்படியாவது டைட்டிலை தட்டித் தூக்க வேண்டும் என்கிற முயற்சியோடு இரண்டாவது போட்டியாளராக கலந்து கொண்ட நிரூப்புக்கு கமல் மிளகு கொடுத்து அனுப்பினார்.

3வது ஜூலி

3வது ஜூலி

பிக் பாஸ் முதல் சீசன் போட்டியாளரான ஜூலி பிக் பாஸ் அல்டிமேட்டில் 3வது போட்டியாளராக கலந்து கொள்ள ரிக்‌ஷாவில் வந்து கலக்கலாக இறங்கினார். அவருக்கு சிகப்பு கம்பளம் விரிக்க.. ஐயோ கார்ப்பெட்டே வேண்டாம் என பழசை மறக்காமல் கடந்து சென்ற ஜூலி கமல் சாருக்கு நன்றி கூறிய ஜுலி வெங்காயத்தை வாங்கிக் கொண்டு வீட்டிற்குள் நுழைந்தார்.

4வது அபிராமி

4வது அபிராமி

பிக் பாஸ் சீசன் 3ல் தொட்டா சிணுங்கியாக இருந்த அபிராமி இந்த பிக் பாஸ் அல்டிமேட்டில் 4வது போட்டியாளராக கலந்து கொண்டார். அபிநயத்துடன் நடனமாடி ரசிகர்களை மகிழ்வித்த அபிராமிக்கு மங்களகரமாக மஞ்சள் கொடுத்து உள்ளே அனுப்பி வைத்தார் கமல்ஹாசன். ஒவ்வொரு பொருளுக்கும் உள் அர்த்தம் வேறு இருக்கிறதாம். காயின் டாஸ்க் போல மசாலாவை வைத்து டாஸ்க் நடக்கும் என தெரிகிறது.

5வது தாமரை

5வது தாமரை

பிக் பாஸ் சீசன் 5ல் கடைசி வாரம் வரை இருப்போம் என நம்பிக்கையுடன் பெட்டியை தூக்காமல் இருந்த நிலையில், வெளியேற்றப்பட்டார். பிக் பாஸ் வீட்டில் இருக்க ரொம்பவே பிடித்திருக்கிறது என சொன்ன நிலையில், மறுபடியும் ஒரு 70 நாட்கள் இருக்க வாய்ப்பு கிடைத்திருக்கு இந்த முறை கடைசி வரை இருப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். தாமரைக்கு அரிசி வழங்கப்பட்டது.

6வது தாடி பாலாஜி

6வது தாடி பாலாஜி

பிக் பாஸ் சீசன் 2ல் போட்டியாளராக பங்கேற்ற தாடி பாலாஜி பிக் பாஸ் அல்டிமேட்டில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார். பிரிந்த மனைவியுடன் சென்ற முறை பிக் பாஸ் வீட்டிற்கு வந்த தாடி பாலாஜி இந்த முறை குடும்ப சுமை இன்றி வந்துள்ளதாக தெரிவித்தார். அவர் சைஸுக்கு முருங்கைக் காயை கொடுத்து உள்ளே அனுப்பினார் கமல்.

7வது பாலாஜி முருகதாஸ்

7வது பாலாஜி முருகதாஸ்

இந்த சீசனில் தாடி பாலாஜியை தொடர்ந்து இன்னொரு பாலாஜியாக பாலாஜி முருகதாஸ் 7வது போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார். பிக் பாஸ் சீசன் 4ல் ஆரி இருந்த நிலையில், டைட்டில் இவருக்கு கிடைக்காமல் ரன்னர் அப் ஆனார். இந்த முறை டைட்டிலை வென்றே தீருவேன் என்கிற வெறியுடன் வந்துள்ளார். பாலாஜிக்கு கீரை வழங்கப்பட்டது.

8வது அனிதா சம்பத்

8வது அனிதா சம்பத்

பாலாஜி முருகதாஸ் உடனே நடனமாடிய படி பிக் பாஸ் வீட்டுக்குள் வந்தார் அனிதா சம்பத். ஸ்பேஸ் இல்லை என்கிற பிரச்சனை இனி உங்களுக்கு இருக்காது. 24 மணி நேரமும் ஸ்பேஸ் இருக்கு நீங்க என்ன பண்ணப் போறீங்க என பார்க்க மக்கள் காத்திருக்கின்றனர் என கமல் கூறினார். பால் உடன் வீட்டிற்குள் நுழைந்தார் அனிதா சம்பத்.

9வது சுஜா வருணி

9வது சுஜா வருணி

பிக் பாஸ் முதல் சீசனில் வைல்டு கார்டாக வீட்டிற்குள் ஆகாய மார்கமாக நுழைந்த சுஜா வருணி இப்போ அம்மா சுஜா வருணியாக அடக்கமாக ஆட்டம் பாட்டம் இல்லாமல் என்ட்ரி கொடுத்துள்ளார். இந்த சுஜா வருணியின் ஆட்டம் எப்படி இருக்கும் என்று பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். சுஜா வருணிக்கு பூண்டு வழங்கப்பட்டது.

உப்மாவுடன் வந்த சுரேஷ் தாத்தா

உப்மாவுடன் வந்த சுரேஷ் தாத்தா

காரில் இருந்து இறங்கியதும் கையில் சுடச் சுட சிறுதானிய உப்மாவை எடுத்துக் கொண்டு கமல் சாருக்கு வழங்கியபடியே அறிமுகமானார் சுரேஷ் சக்கரவர்த்தி. சீசன் 4ல் முடிக்காத பல கணக்குகளை இந்த முறை முடிக்க காத்திருக்கிறார். அவருக்கும் தாமரைக்கும் தான் முட்டிக்கப் போகுது என்றும் சுரேஷ் சக்கரவர்த்தி, தாமரை மற்றும் வனிதா இடையே கடும் போட்டி இருக்கும் எனக் கூறப்படுகிறது. உப்பு டப்பாவுடன் 10வது போட்டியாளராக உள்ளே நுழைந்தார்.

11வது ஷாரிக்

11வது ஷாரிக்

அனிதா சம்பத் உடன் இணைந்து பிக் பாஸ் ஜோடிகளில் நடனமாடி டைட்டில் வென்ற ஷாரிக் 11வது போட்டியாளராக பிக் பாஸ் அல்டிமேட்டில் கலந்து கொண்டார். அனிதா சம்பத் மற்றும் ஷாரிக் உள்ளேயும் ஜோடி போட்டு ஆடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

12வது அபிநய்

12வது அபிநய்

பிக் பாஸ் தமிழ் சிசன் 4ல் கலந்து கொண்ட நடிகர் ஜெமினி கணேசனின் பேரன் அபிநய் வாடி பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார். இந்த முறை எந்தவொரு கருத்தையும் முகத்துக்கு நேராக சொல்லப் போகிறேன் என சபதம் செய்துள்ளார். பாவனி இல்லை என்றாலும் அபிநய்க்கு பிடிக்காத நிரூப் மற்றும் தாமரை உள்ளே இருப்பது குறிப்பிடத்தக்கது. அபிநய்க்கு நெய் கொடுத்து அனுப்பினார் கமல்.

13வது சுருதி

13வது சுருதி

மீண்டும் சுருதிக்கும் தாமரைக்கும் மோதல் ஏற்படுமா என ரசிகர்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு 13வது போட்டியாளராக பிக் பாஸ் அல்டிமேட்டில் கலந்து கொண்டுள்ளார் சுருதி. இளைஞர்களின் இதயங்களை கவரும் போட்டியாளராக இவர் மட்டுமே இந்த சீசனில் இருக்கிறார் என்று ஏகப்பட்ட கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன. இந்த முறை எத்தனை நாட்கள் இருக்கிறார் என பார்க்கலாம்.

கடைசியாக சினேகன்

கடைசியாக சினேகன்

பிக் பாஸ் முதல் சீசனில் ரன்னர் அப் ஆன கவிஞர் சினேகன் பிக் பாஸ் அல்டிமேட்டில் 14வது போட்டியாளராக பங்கேற்றுள்ளார். இரண்டு புத்தகங்களை கமல் சாருக்கு பரிசளித்த சினேகன், தனது மனைவி கன்னிகா ரவிக்கு பிரியா விடை கொடுத்து அனுப்பிய காட்சிகள் இடம்பெற்றன. இந்த முறை யாரையும் அதிகமாக கட்டிப்பிடிக்கக் கூடாது என மனைவி சொல்லி அனுப்பி இருப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். சினேகனுக்கு வாழைக்காய் பரிசளித்தார் கமல்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X