புதிய வியூகத்துடன் களமிறங்கும் போட்டியாளர்கள்.. பிக் பாஸ் அல்டிமேட் மாஸ் ப்ரோமோ!
சென்னை: பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி கோலாகலமாக இன்னும் சற்று நேரத்தில் ஒளிபரப்பாக உள்ளது.
டிஸ்னி பிளாஸ் ஹாட் ஸ்டாரில் 24 மணிநேரமும் ஒளிபரப்பாக உள்ள இந்த நிகழ்ச்சியைக்காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர்.
இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். முந்தைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் இதில் கலந்து கொள்ள உள்ளனர்.

பிக் பாஸ் அல்டிமேட்
பிக் பாஸ் சீசன் 5 கிராண்டு ஃபினாலே அரங்கத்திலேயே பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி குறித்த அறிவிப்பை கமல்ஹாசன் வெளியிட்டார். இதனால், பிக் பாஸ் ரசிகர்கள் ஏகத்திற்கும் மகிழ்ச்சியாகி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரை போட்டிப் போட்டுக்கொண்டு சப்ஸ்க்ரைப் செய்து வருகின்றனர். இதனால், ஹாட்ஸ்டார் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை கணிசமாக கூடியுள்ளது.

வியூகம் புதிது
இதில் பழைய போட்டியாளர்களான சினேகன், வனிதா, ஜுலி, சுரேஷ் சக்ரவர்த்தி, அபிராமி, தாடி பாலாஜி, அனிதா சம்பத் போன்றவர்கள் அதிகாரப்பூர்வ போட்டியாளர்களாக ப்ரோமோக்களுடன் அறிமுகப்படுத்தப்பட்டனர். இவர்கள் அனைவருமே முந்தைய சீசன் போட்டியாளர்கள். நடிகர் கமல்ஹாசன், போட்டியாளர்கள் புதியவர்கள் அல்ல என்றாலும், அவர்களின் வியூகம் புதிது என்றும் கூறியிருந்தார்.

மாஸ் ப்ரோமோ
பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி சற்று நேரத்தில் தொடங்க உள்ள நிலையில் மாஸ் ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில், ஒவ்வொரு போட்டியாளர்களிடம் அவர்களின் வியூகம் குறித்தும், நிகழ்ச்சியில் வெற்றி பெற வைத்து இருக்கும் திட்டம் குறித்தும் கேட்கிறார் கமல். அதில் சினேகன் முந்தைய சீசனில் சில தவறுகளை செய்து இருக்கிறேன் என்று கூறுகிறார். அனிதா சம்பத் நம்பிக்கையோட ஸ்ட்ராங்கா நான் ஒரு வெற்றியாளர் போல உணருகிறேன் என்றார்.

வெற்றி பெறுவாரா ?
இந்த நிகழ்ச்சியில் பாலாஜி முருகதாஸ் மற்றும் ஷாரிக் ஆகியோர் கலந்து கொள்ள இருக்கிறார்கள். பாலாஜி முருகதாஸ் போன சீசனில் ஏராளமான ரசிகைகளை கொண்டிருந்தார். பிக் பாஸ் வீட்டில் ஆரியுடன் கடுமையான சண்டைப் போட்டாலும் இரண்டாவது இடத்தை பிடித்தார். இந்த முறை அவர் வெற்றி பெற்றாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை .


Click it and Unblock the Notifications











