போடுறா வெடிய.. பிக் பாஸ் அல்டிமேட் கிராண்ட் லாஞ்சை விஜய் டிவியிலும் பார்க்கலாமா? ஹைலைட்ஸ் எதில்?

சென்னை: பிக் பாஸ் அல்டிமேட்டின் அட்டகாசமான ஆரம்ப விழா நிகழ்ச்சி வெறும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் மட்டுமின்றி விஜய் டிவியிலும் ஒளிபரப்பாக போகிறதாம்.

ஒடிடியில் 24 மணி நேரமும் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி வரும் ஜனவரி 30ம் தேதி முதல் துவக்க விழா நிகழ்ச்சியுடன் ஆரம்பமாகிறது.

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் பக்கம் விஜய் டிவி ரசிகர்களை கவர இப்படியொரு ஏற்பாடை பிக் பாஸ் அல்டிமேட் டீம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கோடிக் கணக்கில் பார்ப்பார்கள்

கோடிக் கணக்கில் பார்ப்பார்கள்

விஜய் டிவியில் வெளியாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிகளை உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்கள் கண்டு மகிழ்வார்கள். ஆனால், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் அந்த அளவுக்கு ரசிகர்கள் கூட்டம் இருக்குமா? என்பது சந்தேகம் தான். அதன் காரணமாகவே பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் அறிமுக விழாவை விஜய் டிவியிலும் ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளனர்.

எத்தனை மணிக்கு

எத்தனை மணிக்கு

வரும் ஞாயிற்றுக்கிழமை அதாவது ஜனவரி 30ம் தேதி மாலை 6.30 மணிக்கு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மற்றும் விஜய் டிவியில் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ஆரம்பமாகிறது. உலக நாயகன் கமல்ஹாசன் ஹோஸ்ட் செய்ய ரசிகர்களுக்கு பிடித்தமான போட்டியாளர்கள் மீண்டும் அறிமுகமாகவுள்ள நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

புகழ் கலந்துக்குறாரா

புகழ் கலந்துக்குறாரா

குக் வித் கோமாளி மூலம் பிரபலமான புகழ் சினிமாவில் அடுத்த யோகி பாபு ரேஞ்சுக்கு மாறி வருகிறார். இந்நிலையில், பிக் பாஸ் அல்டிமேட் துவக்க விழா நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொள்ளப் போகிறார் என்கிற தகவல்களும் கசிந்துள்ளன. ஆனால், அவர் போட்டியாளராக பங்கேற்கிறாரா? இல்லையா? என்பது சஸ்பென்ஸ்.

24 மணி நேரம் பார்க்காதவர்களுக்கு

24 மணி நேரம் பார்க்காதவர்களுக்கு

24 மணி நேரமும் பிக் பாஸ் போட்டியாளர்கள் சாப்பிடுவது, உறங்குவது, சண்டை போடுவது என எல்லாவற்றையும் யாராலும் பார்க்க முடியாது. அதற்காக ஸ்பெஷல் ஹைலைட்ஸ் என தினசரி எபிசோடு போட வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில், தினமும் 9 மணிக்கு டெய்லி எபிசோடையும் போடுவதாக அறிவித்துள்ளனர்.

விஜய் டிவியில் இல்லை

விஜய் டிவியில் இல்லை

ஆனால், அந்த ஒரு மணி நேர எபிசோடு விஜய் டிவியிலோ அல்லது விஜய் மியூசிக்கிலோ ஒளிபரப்பப்படாது. டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் மட்டுமே ஒளிபரப்பாகும். மேலும், 24 மணி நேரம் பிக் பாஸ் நிகழ்ச்சியும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் கண்டுகளிக்கலாம். ஓவியாவின் க்யூட்னஸையும் வனிதா விஜயகுமாரின் வெறித்தன ஆட்டத்தையும் பார்க்க ஏகப்பட்ட பேர் இப்போதே டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரை சப்ஸ்கிரைப் பண்ண ஆரம்பித்து இருப்பார்கள்.

Recommended Video

Anbesivam Serial-ல் இருந்து விலக இது தான் காரணம் | வருந்திய Raksha Holla
டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சப்ஸ்க்ரிப்ஷன்

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சப்ஸ்க்ரிப்ஷன்

நீங்கள் ஜியோ வாடிக்கையாளராக இருந்தால் ரீசார்ஜ் உடன் கூடிய ஒரு வருடத்திற்கான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் சப்ஸ்க்ரிப்ஷன் செய்து கொள்ள முடியும். தனியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரை சப்ஸ்கிரைப் செய்ய வேண்டுமென்றால் ரூ. 899க்கு சூப்பர் பேக்கை போட்டு பார்க்கலாம். 4K கிளாரிட்டியில் பார்க்க ரூ. 1499க்கு ப்ரீமியம் பிளானை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X