ஜெயிக்க இன்னும் ஒரு சான்ஸ்...நாளை அனல் பறக்கும் பிக்பாஸ் அல்டிமேட் Grand Launch
சென்னை : பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் பிரம்மாண்ட துவக்க விழா நாளை மாலை 6.30 மணிக்கு நடைபெற உள்ளது. இதற்கான ப்ரோமோக்கள் வெளியிடப்பட்டுள்ளன.
ரசிகர்களின் ஃபேவரைட் நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்து சீசன்கள் நிறைவடைந்து விட்டது. ஐந்தாவது சீசன் முடிந்த கையோடு பிக்பாஸ் அல்டிமேட் என்ற ஓடிடி வெர்சனை துவக்க உள்ளார்கள். இதில் ஐந்து சீசன்களிலும் பங்கேற்ற போட்டியாளர்கள் கலந்து கொள்ள போகிறார்கள்.

14 போட்டியாளர்கள்
மொத்தம் 14 போட்டியாளர்கள் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பங்கேற்க போகிறார்கள். 24 மணி நேர நிகழ்ச்சியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பு செய்யப்பட உள்ள இந்த நிகழ்ச்சி, விஜய் டிவியில் ஒரு மணி நிகழ்ச்சியாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.

இவர்கள் தான் போட்டியாளர்கள்
போட்டியாளர்கள் பற்றிய அறிமுக ப்ரோமோக்கள் கடந்த ஒரு வாரமாக வெளியிடப்பட்டன. இதில் சினேகன், வனிதா விஜயக்குமார், ஜுலி, அனிதா சம்பத், அபிராமி, சுரேஷ் சக்கரவர்த்தி, தாடி பாலாஜி, பாலாஜி முருகதாஸ் போன்றோர் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளனர். முக்கியமான 5 போட்டியாளர்கள் சஸ்பென்சாக வைக்கப்பட்டுள்ளனராம்.

நாளை கிராண்ட் லாஞ்ச்
இந்நிலையில் இன்று, ஜெயிக்க இன்னும் ஒரு சான்ஸ். இன்னும் ஒரே ஒரு மட்டுமே என கமல் பேசும் ப்ரோமோ வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து, ஏற்கனவே களம் கண்டவர்கள். உங்களுக்கு தெரிந்த போட்டியாளர்கள். ஆனால் அவர்களின் வேகமும் புதிது, வியூகமும் புதிது, போட்டியும் புதிது. பிக்பாஸ் அல்டிமேட் கிராண்ட் லாஞ்ச் நாளை மாலை 6.30 மணிக்கு என்ற புதிய ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது.

ஓவியா ரசிகர்கள் கவலை
இதனால் ரசிகர்கள் இந்த நிகழ்ச்சியை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். மீதமுள்ள போட்டியாளர்கள் யார் என்பதை தெரிந்து கொள்ளவும் ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதற்கிடையில் ஓவியா பங்கேற்கவில்லை என்ற தகவல் வேறு வெளியாகி உள்ளதால் அவரின் ரசிகர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











