நானே எதிர்பார்க்கல...இனி பிக்பாஸ் அல்டிமேட் ஹோஸ்ட் இவர் தான்...ஹாட் அறிவிப்பு வெளியிட்ட ஹாட்ஸ்டார்
சென்னை : பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து கமல் விலகுவதாக சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதனால் அடுத்து பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க போவது யார் என அனைவரும் கேட்டு வந்தனர். இந்நிலையில் புதிய ஹோஸ்ட் யார் என்ற அறிவிப்பை ஹாட்ஸ்டார் இன்று புதிய வீடியோவுடன் வெளியிட்டுள்ளது.
பிக்பாஸ் சீசன் 5 முடிந்த சில நாட்களிலேயே ஓடிடி வெர்சனான பிக்பாஸ் அல்டிமேட் டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் துவங்கப்பட்டது. ஜனவரி இறுதி வாரத்தில் துவங்கிய பிக்பாஸ் அல்டிமேட்டை கமல் தொகுத்து வழங்க வருவாரா என ஆரம்பம் முதலே அனைவரும் கேட்டு வந்தனர். இந்த கேள்விக்கு நிகழ்ச்சியின் துவக்கத்திலேயே, மக்களை சந்திக்க வாய்ப்பளிக்கும் பிக்பாஸ் எந்த ரூபத்திற்கு போனாலும் நான் வருவேன். வாட்ச் ரூபத்திற்கே சென்றாலும் அங்கும் நான் வருவேன் என்றார்.

கமல் விலக காரணம்
ஆனால் நிகழ்ச்சி துவங்கிய மூன்றாவது வாரத்திலேயே பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாகவும், சிறு இடைவேளைக்கு பிறகு பிக்பாஸ் சீசன் 6 மீண்டும் வருவேன் என அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். விக்ரம் படத்தின் ஷுட்டிங் தொடர்ந்து தாமதமாகி வருவதால் தனது சொந்த காரணத்திற்காக மற்றவர்கள் பாதிக்கப்பட கூடாது என்பதற்காக இந்த முடிவை எடுத்ததாக கமல் கூறி இருந்தார்.

புதிய ஹோஸ்ட் யார்
கமலின் இந்த அறிவிப்பால் ரசிகர்கள், போட்டியாளர்கள் என அனைவரும் அப்செட் ஆகினர். கமல் பாதியில் சென்று விட்டதால் அடுத்து நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்குவார் என அனைவரும் கேட்க துவங்கி விட்டனர். சரத்குமார், சிம்பு, ரம்யா கிருஷ்ணன் என பல பிரபலங்களின் பெயர்கள் கூறப்பட்டது. கடைசியாக சிம்பு தான் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க போகிறார் என தகவல் வெளியானது. சிம்பு, ஷு லேஸ் கட்டி பிக்பாஸ் அல்டிமேட்டை தொகுத்து வழங்க தயாராகி வரும் போட்டோ ஒன்றும் வெளியாகி செம டிரெண்டிங் ஆனது.

இவர் தான் அந்த புது ஹோஸ்ட்
இந்நிலையில் இன்று புதிய வீடியோவுடன், சிம்பு தான் நிகழ்ச்சியை இனி தொகுத்து வழங்க போகிறார் என்பதை ஹாட்ஸ்டார் அறிவித்துள்ளது. அந்த வீடியோவில், வெள்ளை நிற கோட் போட்டு செம ஸ்டைலாக தயாராகி வரும் சிம்பு, எதிர்பார்க்கல. நானே எதிர்பார்க்கல. சந்திப்போம் என்கிறார். மாஸா லுக்கில், மாஸ் பீஜிஎம் உடன் வெளியிடப்பட்டுள்ள இந்த வீடியோ அனைவரின் வரவேற்பையும் பெற்றுள்ளது. குறிப்பாக சிம்பு ரசிகர்களை செம குஷியாக்கி உள்ளது. வேற லெவல் தலைவா. தலைவன் வந்துட்டாலே மாஸ் தான் என புகழ்ந்து வருகின்றனர்.
Recommended Video

ஓ...இதுவேற நடக்க போகுதா
இதற்கிடையில் பிக்பாஸ் அல்டிமேட்டில் இதுவரை வனிதாவோடு சேர்த்து 5 பேர் வெளியேறி உள்ளனர். மீதம் 9 பேர் மட்டுமே போட்டியாளர்களாக உள்ளே உள்ளனர். இந்நிலையில் முதல் வைல்ட்கார்டு என்ட்ரி இந்த வாரம் நடைபெறும் என கூறப்படுகிறது. சுரேஷ் சக்கரவர்த்தி தான் வைல்ட்கார்டு என்ட்ரி என சிலர் கூறுகிறார்கள். அதே சமயம் ஓவியா அல்லது வேறு யாராவது நிகழ்ச்சிக்கு சுவாரஸ்யம் கூட்ட உள்ளே அழைத்து வரப்படுவார் என கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











