ஓட்டுனதும் போதும்.. ஒளிஞ்சதும் போதும்.. இனி எல்லாரையும் ஓட விடுறேன்.. தில்லாக வரும் ஜூலி!

சென்னை: பாலாஜி முருகதாஸ், வனிதா விஜயகுமார் எல்லாம் வராங்கன்னு தெரிஞ்சு இருந்தும் எல்லாரையும் ஓட விடுறேன்னு ஜூலி சொல்வதை பார்த்தால் இந்த முறை செம தில்லோடு களமிறங்கப் போகிறார் என்றே தெரிகிறது.

கவிஞர் சினேகனை தொடர்ந்து அடுத்த பிக் பாஸ் அல்டிமேட் போட்டியாளர் யார் என்கிற புரமோ வெளியாகி விட்டது.

குக் வித் கோமாளி புகழை வைத்து ஏன் ஜூலிக்கு புரமோ போடவில்லை என்கிற குற்றச்சாட்டுகளும் கூடவே கிளம்பி உள்ளன.

மீண்டும் ஜூலி

மீண்டும் ஜூலி

பிக் பாஸ் வீட்டில் மீண்டும் ஜூலியின் ஆட்டத்தை ரசிகர்கள் காண காத்திருக்கின்றனர். முதல் போட்டியாளராக சினேகன் வருகிறார் என்கிற அறிவிப்பு நேற்று வெளியான நிலையில், இன்று ஜூலி இரண்டாவது போட்டியாளராக பங்கேற்கிறார் என்பதை புதிய புரமோவுடன் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் அறிவித்துள்ளது. இதற்கு முன் ஜூலியின் முகம் தெரியாத புகைப்படத்தை போட்டு கெஸ் செய்ய சொல்லும் போதே ரசிகர்கள் சரியாக கண்டுபிடித்து விட்டனர்.

குறும்படத்தில் நடிக்கிறீங்களா ஜூலி

குறும்படத்தில் நடிக்கிறீங்களா ஜூலி

புரோமோவிலேயே ஜூலியை கலாய்த்தத்தால் தான் ரசிகர்கள் பார்ப்பார்கள் என்பதை நன்கு அறிந்து கொண்ட பிக் பாஸ் டீம் ஜூலிக்கு போன் செய்து குறும்படத்தில் நடிக்கிறீங்களா? எனக் கேட்டதும் ஏன் ஷார்ட் ஃபிலிம்னு சொல்ல மாட்டீங்களா என ஜூலி எரிந்து விழுவதுமாக இந்த புரமோ அமைந்துள்ளது.

ஓட்டுனது போதும்

ஓட்டுனது போதும்

பிக் பாஸ் முதல் சீசனில் ஜூலி அழுது நாடகமாடியதை பார்த்த ரசிகர்கள் 5வது சீசன் வரை எந்த போட்டியாளர் அழுதாலும் உடனே ஜூலியுடன் கம்பேர் பண்ணி மீம் போட்டு விடுவார்கள். இந்நிலையில், இந்த புரமோவில் பிக்பாஸ் அல்டிமேட்டில் கலந்து கொள்ளப் போவதாக ஜூலி அறிவித்துள்ள நிலையில், ஓட்டுனதும் போதும் ஒளிஞ்சதும் போதும் என செம தில்லாக பஞ்ச் வேற பேசுகிறார்.

ஓட விடுறேன்

ஓட விடுறேன்

கடைசியாக எல்லாரையும் இனிமே ஓட விடுறேன் என ஜூலி சொன்னதை கேட்ட ரசிகர்கள் பிக் பாஸ் அல்டிமேட்டில் வனிதா விஜயகுமார், பாலாஜி முருகதாஸ்ன்னு ஏகப்பட்ட டெரர் பார்ட்டிகள் எல்லாம் வராங்க.. அதையெல்லாம் மனசுல வச்சிக்கிட்டு இப்படி பஞ்ச் பேசுமா ஜூலி என ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

Recommended Video

Bigg Boss OTT Tamil Promo Shoot Begins!! | Bigg Boss Ultimate tamil Start date
இரிடேட் ஆகுது

இரிடேட் ஆகுது

அய்யோ மறுபடியும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜூலியா? அந்த குரலை கேட்டாலே இரிடேட் ஆகுது என ஏகப்பட்ட ரசிகர்கள் இப்பவே ஜூலிக்கு எதிராக களமிறங்கி விட்டனர். இந்த பிக் பாஸ் அல்டிமேட்டில் அவர் எப்படி கேம் ஆடுகிறார் என்பதை பார்த்து விட்டு அவரை பற்றிய முடிவை எடுங்க என ஜூலியின் ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X