திடீரென நிறுத்தப்பட்ட பிக் பாஸ் லைவ் ஸ்ட்ரீம்.. உள்ளே ஏதாவது பிரச்சனையா? என குழம்பும் ரசிகர்கள்!

சென்னை: பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி 24 மணி நேரமும் எந்தவொரு ஒளிவு மறைவுமின்றி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் கண்டு களிக்கலாம் என்கிற அறிவிப்புடன் கடந்த ஜனவரி 30ம் தேதி தொடங்கியது.

வெள்ளிக்கிழமையான இன்று பிக் பாஸ் வீட்டுக்குள் என்ன நடக்கப் போகிறது என்பதை காண ரசிகர்கள் ஆர்வத்துடன் பார்த்து வரும் நிலையில், தற்போது திடீரென அதன் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பிக் பாஸ் வீட்டுக்குள் ஏதாவது பிரச்சனையா? என்கிற கேள்வியை ரசிகர்கள் கிளப்பி உள்ளனர்.

லைவ் ஸ்ட்ரீம் நிறுத்தம்

லைவ் ஸ்ட்ரீம் நிறுத்தம்

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் 24 மணி நேர லைவ் ஸ்ட்ரீம் திடீரென நிறுத்தப்பட்டுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இதுவரை நல்லாத்தானே போய்க் கொண்டிருந்தது இப்போது என்ன திடீரென இப்படியொரு பிரச்சனை வந்து விட்டது என ரசிகர்கள் மீண்டும் மீண்டும் அந்த லிங்கிற்குள் சென்று பார்த்து வருகின்றனர்.

தொழில்நுட்ப கோளாறு

தொழில்நுட்ப கோளாறு

தொழில்நுட்ப கோளாறு காரணமாக தற்காலிகமாக இந்த 24 மணி நேர லைவ் ஸ்ட்ரீமிங் நிறுத்தப்பட்டுள்ளதாக பிக் பாஸ் குழு அந்த லைவ் ஸ்ட்ரீம் வீடியோவிலேயே அறிவித்துள்ளது. ஒடிடி தளம் என்பதால் இதுபோன்ற பிரச்சனை வருவது சாதாரண விஷயம் என்றும் சிலர் கூறி வருகின்றனர்.

ஒரிஜினல் லைவ் இல்லை

ஒரிஜினல் லைவ் இல்லை

ஆனால், பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி அப்படியே அங்கே நடப்பதை இங்கே காட்டுவது இல்லை என்றும் ஒரு நாள் அல்லது ஒரு சில மணி நேர இடைவெளியில் தான் நிகழ்ச்சி ரன் ஆகும் என்றும் deferred live வீடியோ தான் ஒளிபரப்பாகி வருகிறது என்றும் கூறுகின்றனர். அப்படி இருக்க என்ன பிரச்சனை என்றும் கேள்விகள் எழுந்து வருகின்றன.

உள்ளே ஏதாவது பிரச்சனையா

உள்ளே ஏதாவது பிரச்சனையா

உள்ளே போட்டியாளர்களுக்கு இடையே ஏதாவது பிரச்சனையா அல்லது சண்டை ஏற்பட்டு விட்டதா? திடீரென பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை வார இறுதியில் நிறுத்தி விட்டு யாரையாவது வெளியே அனுப்ப போகிறார்களா? என ஏகப்பட்ட கேள்விகளை நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து எழுப்பி வருகின்றனர்.

Recommended Video

Yashika WILDCARD Entry in Bigg Boss Ultimate | உண்மை உடைத்த Vanitha, Abhi Vs Niroop Vs Yashika
நமீதா மாரிமுத்து பிரச்சனை

நமீதா மாரிமுத்து பிரச்சனை

திருநங்கை போட்டியாளர் நமீதா மாரிமுத்துவை அப்படித்தானே வெள்ளிக்கிழமை நடந்த சண்டையில் வெளியே அனுப்பினார்கள். அந்த காட்சிகளை ஒளிபரப்பவே இல்லையே என்றும் நெட்டிசன்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். விரைவில் இதற்கான விளக்கத்தை பிக் பாஸ் குழு கொடுக்கும் அல்லது உடல் நலம் சரியில்லாமல் யாராவது வெளியேற்றப்படுவார்கள் என்றும் விளாசி வருகின்றனர். முதல் வாரத்திலேயே தொழில் நுட்பக் கோளாறு என்றால் 70 நாட்கள் பிக் பாஸ் ஒடிடி தாக்குபிடிக்குமா? என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X