ஜூலியை ஆபாசமாக திட்டினாரா நிரூப்.. சிம்பு இதையெல்லாம் கேட்க மாட்டீங்களா என கொதிக்கும் ரசிகர்கள்!

சென்னை: பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ரொம்பவே படுமோசமாக மாறிவிட்டதாக நேற்று தான் வனிதா விஜயகுமார் ட்வீட் போட்டு விளாசி இருந்தார்.

இந்நிலையில், ஜூலியை நிரூப் படு ஆபாசமாக திட்டியுள்ளார் என பிக் பாஸ் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொதித்தெழுந்துள்ளனர்.

நிரூப்புடன் கடும் கோவத்தில் ஜூலி சண்டை போடும் புதிய புரமோவும் வெளியாகி பரபரப்பை கிளப்பி இருக்கிறது.

கமல் போனதும்

கமல் போனதும்

பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியை இதுவரை தொகுத்து வழங்கி வந்த கமல்ஹாசனே வெளியேற காரணமே அதன் தரன் முற்றிலும் குறைந்ததால் தான் என்கின்றனர். அதே போல வனிதா விஜயகுமாரும் அதிரடியாக வீட்டை விட்டு வெளியேறவும் உள்ளே நடக்கும் சில்மிஷமான விஷயங்கள் தான் காரணம் என்றார்.

மோசமா போகுது

மோசமா போகுது

ஓடிடி பிக் பாஸ் என்பதால் சென்சார் எதுவுமே இல்லை என்கிற தைரியத்தால் நிகழ்ச்சி வரம்பு மீறி செல்வதாக தொடர்ந்து பார்வையாளர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். ஏகப்பட்ட தவறான விஷயங்களும் பிக் பாஸ் வீட்டுக்குள் நடந்து வருவதாகவும் சிம்பு எதையுமே கண்டு கொள்ள மாட்டேங்கிறார் என்றும் ட்ரோல்கள் பறந்து வருகின்றன.

ஆபாச பேச்சு

ஆபாச பேச்சு

பிக் பாஸ் சீசன் 5 முடிந்த கையோடு தொடங்கிய பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொண்ட நிரூப் இந்த வாரம் நடந்து வரும் லக்சரி பட்ஜெட் டாஸ்க்கின் போது ஜூலியை மிகவும் மோசமான கெட்ட வார்த்தையை பயன்படுத்தி ஆபாசமாக திட்டினார் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொதித்து எழுந்துள்ளனர்.

ரெட் கார்டு கொடுக்கணும்

ரெட் கார்டு கொடுக்கணும்

இப்படி நிகழ்ச்சியில் கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாமல் அதிலும், ஒரு பெண் போட்டியாளரை அந்த கெட்ட வார்த்தையை பயன்படுத்தி திட்டிய நிரூப்பை உடனடியாக ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்ப வேண்டும் என ரசிகர்கள் வெளுத்து வாங்கி வருகின்றனர். டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் மற்றும் சிம்பு இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பிக் பாஸ் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

வெடித்து சிதறிய ஜூலி

வெடித்து சிதறிய ஜூலி

எப்படிடா என்னை பார்த்து அப்படி நீ பேசலாம் என ஜூலி வெடித்து சிதறி நிரூப்புக்கு எதிராக கத்தும் வீடியோவையும் தற்போது புரமோவாக போட்டு நிகழ்ச்சியின் மைலேஜை கூட்டி வருகின்றனர் பிக் பாஸ் குழு. லைவ் வீடியோ இல்லாத நிலையில், அப்படி ஒரு வார்த்தையை நிரூப் பேசியதை நீக்கி விட்டு பிக் பாஸ் அட்வைஸ் பண்ணியிருக்கலாமே? ஜூலிக்கு மட்டும் கன்ஃபெஷன் ரூமில் அட்வைஸ் கொடுத்த பிக் பாஸ் நிரூப்பை ஏன் கண்டிக்கவில்லை என்றும் கேள்விகளை எழுப்பி உள்ளனர்.

நிரூப்புக்கு ஜால்ரா

நிரூப்புக்கு ஜால்ரா

ஜூலிக்கு இப்படியொரு அநியாயம் நடந்துள்ள நிலையில், ஜூலி பக்கம் நிற்காமல் அனிதா சம்பத் நிரூப்புக்கு ஜால்ரா தட்டுவது கொஞ்சம் கூட சரியில்லை என்றும் இருவரையும் உடனே வெளியே அனுப்ப வேண்டும் என்றும் ரசிகர்கள் திட்டித் தீர்த்து வருகின்றனர். ஆரிக்கு எதிராக அப்படி சவால் விட்ட அனிதா இப்போ ஏன் நிரூப்புக்கு எதிராக குரல் கொடுக்காமல் அவருக்கு சப்போர்ட் செய்து வருகிறார் என்றும் டபுள் ஸ்ட்ராண்டட் கேம் ஆடி வருகிறார் அனிதா சம்பத் என்றும் ரசிகர்கள் விளாசி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X