Don't Miss!
- Lifestyle
உங்க உடல் எடையை குறைக்க இந்த விரத வழிமுறைகளை ஃபாலோ பண்ணுன்னா போதுமாம் தெரியுமா?
- Technology
"இது எல்லாமே ரொம்ப பெருமையா இருக்கு"- பிரமாண்ட ட்ரோன் திருவிழாவில் பிரதமர் மோடி பேச்சு!
- News
அண்ணாமலையின் பேச்சு அரைவேக்காட்டுத்தனமானது.. கொலுபொம்மை விழாவா நடந்தது? கே.பாலகிருஷ்ணன் ஆவேசம்!
- Finance
ஆன்லைன் ஷாப்பிங் பிரியரா நீங்க.. மிந்த்ராவின் சூப்பர் அறிவிப்ப பாருங்க?
- Sports
இலங்கை வீரர் கையில் ஆர்சிபி விதி.. ஐபிஎல்-ல் யாரும் கவனிக்காத சுவாரஸ்யம்.. தப்பிக்குமா ராஜஸ்தான் அணி
- Automobiles
இந்தியாவில் வெறும் 2% தான் தேசிய நெடுஞ்சாலை, ஆனால் டோல்கேட் வசூலில் இது தான் நம்பர் 1
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பிக் பாஸ் அல்டிமேட்… பிரம்மாண்டமாக தயாராகும் வீடு… இணையத்தில் வலம் வரும் வீடியோ !
சென்னை : விஜய் டிவியில் பிக் பாஸ் 5 ஷோ முடிவடைந்து இருக்கும் இந்த நேரத்தில் அடுத்து பிக் பாஸ் அல்டிமேட் ஷோ மீதான எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. அதில் இதற்கு முந்தைய சீசன் போட்டியாளர்கள் தான் வரப்போகிறார்கள்.
இந்த முறை 100 நாட்கள் ஷோ நடக்காது என்றாலும் போட்டியாளர்கள் வீட்டில் செய்வதை ரசிகர்கள் 24 மணி நேரமும் ஹாட்ஸ்டாரில் பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது
இந்த நிகழ்ச்சிக்காக பிக் பாஸ் வீடுபிரம்மாண்டமாக தயாராகி வருகிறது. விரைவில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பு குறித்த அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாஸ்ன்னா
இதுதான்
மாஸ்...டிரெண்டிங்கில்
அஜித்திசம்...இது
தான்
காரணமா

ராஜூ வின்னர்
பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாக முடிந்தது இதில் ராஜூ டைட்டில் வின்னரானார். பிரியங்காவுக்கு இரண்டாவது இடமும், பாவனி 3வது இடத்தையும், அமீர் மற்றும் நிரூப் 4 மற்றும் 5வது இடத்தையும் பிடித்தனர்.

எதிர்பார்க்கும் ரசிகர்கள்
விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டு இருந்த இந்த நிகழ்ச்சி முடிந்ததை அடுத்து பிக் பாஸ் அல்டிமேட் ஷோ ஓடிடியில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கான முதல் ப்ரோமோ வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

வனிதா
பிக் பாஸ் அல்டிமேட் போட்டியாளர்கள் பட்டியலின் நடிகை வனிதா மற்றும் நகைச்சுவை நடிகர் பரணி. பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் வந்து தற்போது மாடலாக வலம் வரும் ஜூலி கலந்து கொள்வார் என்பது போல் தெரிகிறது. அதேபோல சுரேஷ் சக்ரவர்த்தி, கவிஞர் சினேகன், அபிராமி, சுஜா வருணி, ஷாரிக், நகைச்சுவை நடிகர் தாடி பாலாஜி, அனிதா சம்பத், பாலாஜி முருகதாஸ் மற்றும் ஷெரின் உள்ளிட்ட பழைய பிக் பாஸ் போட்டியாளர்கள் பிக் பாஸ் அல்டிமேட் போட்டியிலும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரம்மாண்டமான வீடு
இந்நிலையில், பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்காக புதுப்பொலிவுடன் பிக் பாஸ் வீடு தயாராகி வருகிறது. ப்ரோமோவில் கமல் சுவற்றை மட்டும் தூக்கி கட்டுங்க என்றார் அதேபோல, சுவற்றின் வேலைகளும் நடந்து வருகிறது. லிவ் ஏரியாவிலும், கார்டன் ஏரியாவிலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. வீடு தயாராகும் வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது,