Don't Miss!
- News
ஆஆ என பார்த்த "ஆர்ஆர்" பவுலர்! ஸ்டன் ஆகி போக மைதானம்.. குறுக்கே வந்த பட்லர்! கடைசியில் செம ட்விஸ்ட்
- Sports
ராஜஸ்தான் தோல்விக்கு முக்கிய காரணம் என்ன? எங்கே சொதப்பினார் கேப்டன் சஞ்சு சாம்சன்?
- Finance
எல்.ஐ.சி பங்குகள் வீழ்ந்தாலும் லாபத்தை கொடுக்கும் டெல்லிவரி மற்றும் ஜொமைட்டோ : எப்படி தெரியுமா?
- Automobiles
இந்த பைக் வாங்கும் விலையில் 4 கார் வாங்கலாம் ஆனால் காரிகளில் இல்லாத விஷயங்கள் இந்த பைக்கில் இருக்கிறது...
- Lifestyle
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் சொத்துக்களை விற்பதில் கவனமாக முடிவெடுக்கவும்...
- Technology
86-இன்ச் சியோமி ஸ்மார்ட் டிவி அறிமுகம்.! என்ன விலை? என்னென்ன அம்சங்கள்?
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பிக் பாஸையே ஜெர்க் ஆக்குற போட்டியாளர் வரப்போறாங்களாம்.. ஜக்கம்மா சொல்றது யாருன்னு ஊருக்கே தெரியுமே!
சென்னை: சினேகனை தொடர்ந்து வனிதா விஜயகுமாருக்கும் கெஸ்ஸிங் புரமோவை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் வெளியிட்டுள்ளது.
ஜூலிக்கும் வெறும் ஒரு போட்டோ போதும் என பிக் பாஸ் அல்டிமேட் டீம் நினைத்து விட்டது என்பது இதில் இருந்தே தெரிகிறது.
தினமும் ஒரு போட்டியாளர் அறிவித்து வந்தால் வரும் ஞாயிற்றுக்கிழமைக்குள் வெறும் 6 போட்டியாளர்களை மட்டும் தானே அறிமுகப்படுத்த முடியும் என்றும் தினமும் 3 போட்டியாளர்களை அறிமுகப்படுத்துங்க என்றும் கோரிக்கைகள் கிளம்பி உள்ளன.
ராஜமெளலியை தவிர பாகுபலியை இயக்க சரியான இயக்குநர் பிறக்கவில்லை போல.. கைவிடப்பட்ட பாகுபலி வெப்தொடர்?

டிஸ்னி ஹாட்ஸ்டாரில்
விஜய் டிவி மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் இதுவரை ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி இனிமேல் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் 24 மணிநேர நிகழ்ச்சியாக ஒளிபரப்பாக உள்ளது. வரும் ஞாயிற்றுக் கிழமை 6.30 மணி முதல் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ஆரம்பமாக உள்ளது. பழைய போட்டியாளர்கள் அனைவரும் மீண்டும் ரசிகர்களை உற்சாகப்படுத்த வருகிறார்கள்.

முதல் புரமோவில்
பிக் பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டு கட்டிப்பிடி வைத்தியர் என பெயர் வாங்கிய சினேகன் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொள்கிறார். அவருக்கு நடிகர் புகழை வைத்து கெஸ்சிங் புரமோவும் சினேகனின் புரமோவும் வெளியிடப்பட்டது. மீண்டும் சினேகனின் அலப்பறைகளை காண ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

வெறும் போட்டோ மட்டுமே
இரண்டாவது போட்டியாளராக ஜூலி நேற்று அறிமுகப்படுத்தப்பட்டார். ஜூலியின் அதிகாரப்பூர்வ புரமோ வீடியோ வருவதற்கு முன்னதாக யாரு அந்த போட்டியாளர் என கெஸ் பண்ணும் வீடியோவுக்கு பதில் வெறும் போட்டோவை மட்டுமே போட்டு பிக் பாஸ் டீம் பாரபட்சம் காட்டியதாக ஜூலியின் ரசிகர்கள் இப்பவே அழுது புலம்ப ஆரம்பித்து விட்டனர்.

அடுத்த போட்டியாளர் யார்
இந்நிலையில், தற்போது ஜக்கம்மா சொல்றா என குடுகுடுப்பைக்காரன் வீடியோவுடன் மூன்றாவது போட்டியாளரை கண்டுபிடிக்க சொல்லும் புரமோ வெளியாகி உள்ளது. இவங்க இருந்தா வீட்டில் சண்டைக்கே பஞ்சம் இருக்காது என்றும் போட்டியாளர்களின் பசியையும் ஆற்றிவிடுவார் என்றும் சூப்பரான இன்ட்ரோவுடன் இந்த புரமோ அமைந்துள்ளது.

பிக் பாஸே ஜெர்க் ஆவாரா
மேலும், இந்த போட்டியாளரை பார்த்தால் சில சமயங்களில் பிக் பாஸே ஜெர்க் ஆகிவிடுவார் என்றும் காற்றுக்கு என்ன வேலி என்றும் க்ளூ கொடுக்க ரசிகர்கள் அட நம்ம வனிதா அக்காவை தான் சொல்றாங்க என கமெண்ட் செய்து வருகின்றனர். விரைவில் வனிதா விஜயகுமார் பிக் பாஸிடம் சண்டை போடுவது போல புரமோ வரும் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

ஓவியா புரமோ போடுங்க
கமல் சார் புரமோவிலேயே வனிதா விஜயகுமார் வராங்க என்பது தெளிவாக தெரிந்து விட்டது. தனியா ஒரு கெஸ்ஸிங் புரமோ எதற்கு என்றும் மேலும், ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் நடிகை ஓவியாவின் புரமோவை போடுங்க என ஏகப்பட்ட ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.