ஜூலிக்கு ஜல்லிக்கட்டு ஞாபகம் வந்துடுச்சு.. போலீஸ் கெட்டப்பில் கலக்கும் வனிதா, அனிதா, சுருதி!

சென்னை: பிக் பாஸ் அல்டிமேட்டின் 9வது நாளுக்கான முதல் புரமோ தற்போது வெளியாகி உள்ளது.

Recommended Video

Julie -ஐ Target செய்கிறாரா Balaji?? | Bigg Boss Ultimate Tamil

பிக் பாஸ் அல்டிமேட்டில் முதல் வாரம் பிரஸ் மீட் டாஸ்க் சூடு பறந்த நிலையில், இரண்டாவது வாரத்திற்கான லக்சரி பட்ஜெட் டாஸ்க்காக காவல்துறையும் களவாணிகளும் டாஸ்க் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

போலீஸ் அதிகாரிகளாக வனிதா விஜயகுமார், தாமரை, அனிதா சம்பத், சுருதி உள்ளிட்ட பெண் போட்டியாளர்கள் கச்சிதமாக அந்த கதாபாத்திரமாகவே மாறியுள்ளதை பார்த்த ரசிகர்கள் ஆச்சர்யத்தில் கமெண்ட்டுகளை தெறிக்கவிட்டு வருகின்றனர்.

காவலாளியும் களவாணியும்

காவலாளியும் களவாணியும்

பிக் பாஸ் முதல் சீசனில் ஓவியாவை போலீஸ் உடையில் பார்த்து ரசிகர்கள் ரசித்த நிலையில், மூன்றாவது சீசனில் போலீஸ் உடையில் கவின் கலக்கலாக தோன்றி ரசிகர்களை கவர்ந்தார். இந்நிலையில், பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் அதே கடை அதே வாடகை என்பது போல போலீஸ் ஸ்டேஷன் செட்டை பிக் பாஸ் வீட்டுக்குள் இறக்கி உள்ளனர்.

கெத்து போலீஸ் வனிதா

கெத்து போலீஸ் வனிதா

வனிதா விஜயகுமார் சும்மாவே மிரட்டுவார். இந்நிலையில், தற்போது போலீஸ் அதிகாரியாக கெட்டப் போட்டுள்ள நிலையில், அவரது ஆட்டம் வேற லெவலில் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஒவ்வொரு ஃபிரேமிலும் நிஜ போலீஸ் மாதிரியே கெத்துக் காட்டுகிறார் வனிதா.

பாலாவையே இழுத்துப் போட்ட சுருதி

பாலாவையே இழுத்துப் போட்ட சுருதி

லேடி சிங்கம் போல திருடனாக நடித்த பாலாஜி முருகதாஸ் தப்பித்து ஓடும் போது சுருதி பிடித்து இழுத்துப் போடும் காட்சியும், பாலா கீழே விழுவதையும் பார்த்து ரசிகர்கள் இது வேற லெவல் கேமாக இருக்கே என கமெண்ட் செய்து வருகின்றனர். அனிதா சம்பத் மற்றும் தாமரையும் போலீஸ் கதாபாத்திரத்தில் நச்சென பொருந்தி உள்ளனர்.

ஐடியா அபிநய்

ஐடியா அபிநய்

முதல் வாரமே வெளியேறுவார் என எதிர்பார்க்கப்பட்ட அபிநய் தாத்தாவுக்கு டாட்டா காட்டியுள்ளார். இப்போ க்ரூப் சேர்ந்து திருடர்களுக்கு அட்வைஸ் சொல்லும் அபிநயை பார்த்தால் இன்னும் எத்தனை வாரம் யாருக்கெல்லாம் டாட்டா காட்டப் போறாரோ என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். பிக் பாஸ் சீசன் 5ல் சரியாக விளையாடாத அபிநய் இங்கே விளையாடுவது சிறப்பான விஷயம் தான் என்றும் சில ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

ஜெயிலுக்குள் பாலா

ஜெயிலுக்குள் பாலா

திருடனாக பாலா போலீஸ் டீமையே அலறவிட்டு வருவது புரமோவிலேயே தெரிகிறது. அதற்காகவே அவரை அரெஸ்ட் செய்து பாதாள சிறைக்குள் அடைக்கின்றனர். ஆனால், சிறைக்குள் செல்லும் போதும் ஏதோ ஒரு பொருளை மற்ற திருடர்களுக்கு பாஸ் செய்து விட்டு போலீசாருடன் கண்ணாமூச்சி ஆடி அசத்துகிறார் பாலா.

போலீஸ் அராஜகம் ஒழிக

போலீஸ் அராஜகம் ஒழிக

ஜல்லிக்கட்டு போராட்டத்தை இன்னமும் ஜூலி மறக்கவில்லை போல, டீ வேண்டும் என போராடுகிறார். தற்போது திருடர்கள் கும்பலில் உள்ள ஜூலியை தாமரை செல்வி போலீஸ் பிடித்து முட்டிப் போட வைத்துள்ள நிலையில், போலீஸ் அராஜகம் ஒழிக என கோஷம் போட்டு போராடி வருகிறார். நிச்சயம் இந்த வாரமும் பிக் பாஸ் அல்டிமேட் ரசிகர்களை என்டர்டெயின் செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X