வந்தாச்சு.. ஆரம்பிக்கலாமா.. சிம்புவை பார்த்ததும் திருஷ்டி உடைத்த ரசிகை.. செம ஷோ காத்திருக்கு!
சென்னை: இதுவரை பிக் பாஸ் நிகழ்ச்சியையே பார்க்காத பல சிம்பு ரசிகர்களும் இன்று மாலை சிம்புவிற்காகவே அந்த நிகழ்ச்சியை பார்க்க ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.
Recommended Video
பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து கமல் விலகிய நிலையில், புதிய ஹோஸ்ட்டாக அதகளம் பண்ண காத்திருக்கிறார் சிம்பு.
இன்று மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ள வீக்கெண்ட் எபிசோட் வேற லெவலில் ஹிட் அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிம்பு புரமோ
பிக் பாஸ் அல்டிமேட்டின் வீக்கெண்ட் புரமோவில் இதுவரை கமல்ஹாசன் தான் அதிரடியாக கோட்சூட் அணிந்து கொண்டும், டிசர்ட்டில் கலக்கலாக வந்தும் ரசிகர்களை உற்சாகப்படுத்துவார். இந்நிலையில், இந்த வாரம் முதல் கமலுக்கு பதிலாக சிம்பு அசத்தப் போகிறார். அவரது முதல் பிக் பாஸ் புரமோ தற்போது கலக்கலாக வெளியாகி உள்ளது.

கோட்சூட்டில் கெத்தாக
ஹாஃப் ஒயிட் கலர் கோட்சூட்டில் செம கெத்தாக பிக் பாஸ் மேடையை அலங்கரித்துள்ளார் நடிகர் சிம்பு. மாநாடு படத்தின் வெற்றிக்கு பிறகு சிம்பு வெந்து தணிந்தது காடு, பத்து தல என ஏகப்பட்ட படங்களில் நடித்து வரும் நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியையும் இனி கூடுதலாக சேர்த்து கவனிக்க போகிறார்.

விடிவி பற்றி பேசுவாரா
சனிக்கிழமை தான் சிம்புவின் வீக்கெண்ட் ஷூட்டிங் படமாக்கப்பட்டது. அதே நாளில் தான் விண்ணைத் தாண்டி வருவாயா திரைப்படம் வெளியாகி 12 ஆண்டுகள் ஆனது. இந்நிலையில், விண்ணைத் தாண்டி வருவாயா படம் குறித்து சிம்பு பேசுவாரா? என ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். மேலும், தனது வாழ்வில் நடந்த பல சுவாரஸ்யங்களை சிம்பு இனி பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஷேர் பண்ணுவார் என்பதால் அந்த நிகழ்ச்சியை காண ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கின்றனர்.

வந்தாச்சு ஆரம்பிக்கலாமா
கமல்ஹாசன் விக்ரம் படத்தில் ஆரம்பிக்கலாமா என பேசிய வசனத்தை பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் பலமுறை பயன்படுத்தி உள்ளார். இந்நிலையில், முதல் புரமோவில் நடிகர் சிம்பு, "வந்தாச்சு.. ஆரம்பிக்கலாமா" என செம ஸ்டைலாக பேசி ரசிகர்களை கவர்ந்துள்ளார். செம க்யூட்டாகவும் யங்காகவும் ஒரு ஹோஸ்ட் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சிக்கு கிடைத்திருக்கும் நிலையில், பெண் ரசிகைகளின் கூட்டம் மேலும், அதிகரிக்கும் என தெரிகிறது.

திருஷ்டி உடைத்த ரசிகை
சிம்பு என்றாலே ரசிகைகள் இல்லாமலா? என்பது போல சிம்புவின் முதல் புரமோவிலேயே, அவரை பார்த்ததும் பெண் ரசிகை ஒருவர் தனது கையால் திருஷ்டி உடைக்கும் காட்சியையும் முதல் புரமோவில் எடிட்டர் வைத்துள்ளார். ஏற்கனவே சிம்புவின் எபிசோடு செம ரகளையாக இருந்தது என தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், இந்த வார எபிசோடு செம டிரெண்டாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த வருத்தம்
ஆனால், இன்றைய நிகழ்ச்சியில் யாரையுமே சிம்பு எவிக்ட் செய்யப் போவதில்லை என்கிற வருத்தம் மட்டுமே ரசிகர்களுக்கு உள்ளது. மேலும், சுரேஷ் சக்கரவர்த்தி மீண்டும் என்ட்ரி கொடுக்கப் போகிறார் என்றும், இதுவரை பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளராக இல்லாத கலக்கப் போவது யாரு சதீஷ் பிக் பாஸ் போட்டியாளராக நுழைய போகிறார் என ஏகப்பட்ட தகவல்களும் கசிந்துள்ளன.


Click it and Unblock the Notifications











