வனிதா இடத்தை தட்டிபறித்த தாமரை...அப்படி என்ன செய்தார் தெரியுமா ?
சென்னை : பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கடந்த இரண்டு நாட்களாக வனிதா விஜயக்குமார் பிடித்து வைத்திருந்த இடத்தை இன்று ஒரே நாளில் தாமரை பிடித்து விட்டார். அவர் செய்த காரியத்தால் ட்விட்டரில் #Thamarai ஹேஷ்டேக்கை அவரது ரசிகர்கள் டிரெண்டிங் ஆக்கி உள்ளனர். இதை பார்த்த பலரும் ஆச்சரியம் தெரிவித்து வருகிறார்கள்.
ஓடிடி வெர்சனான பிக்பாஸ் அல்டிமேட் துவங்கப்பட்டு இரண்டு நாட்கள் தான் ஆகிறது. 48 நாட்கள் கொண்ட இந்த நிகழ்ச்சியில் 14 பேர் போட்டியாளர்களாக கலந்து கொண்டுள்ளனர். நிகழ்ச்சி துவங்கிய அடத்த நாளே நாமினேஷன் நடத்தப்பட்டு, 8 பேர் நாமினேட் ஆகி உள்ளனர். இவர்களில் முதல் ஆளாக யார் வெளியேற போகிறார். முதல் வாரம் என்பதால் எவிக்ஷன் இருக்குமா என ரசிகர்கள் குழம்பிப் போய் உள்ளனர். வெளியேற வாய்ப்புள்ளதாக கூறப்படுபவர்கள் அனைவரும் தற்போது நடத்தப்பட்ட பிரஸ் மீட் டாஸ்க்கில் ஸ்மார்டாக பதில் சொல்லி, தப்பி விட்டார்கள்.

கடுப்பான ரசிகர்கள்
தற்போதைய நிலவரப்படி வனிதா தான் ஓட்டு சதவீதத்தில் கடைசியில் இருக்கிறார். ஆனால் அவரை வெளியேற்ற மாட்டார்கள் என அனைவருக்கும் தெரியும். பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி துவங்கிய இந்த இரண்டு நாட்களில் அனைத்து ப்ரோமோக்களிலும் வனிதா தான் இடம்பிடித்து வந்தார். இரண்டு நாட்களில் ப்ரோமோவிலேயே அவர் செய்த அலம்பல்களை பார்த்து பார்வையாளர்கள் கடுப்பாகி விட்டனர். அதிலும் நேற்று காஃபிக்காக காலையிலேயே அவர் கூட்டிய ஏழரை, இவர் எதற்காக பிக்பாசிற்கு வந்தார் என அனைவரையும் கேட்க வைத்து விட்டது.

அடக்கி வாசித்த வனிதா
வனிதாவின் ஹேட்டர்ஸ் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே போவதாலோ என்னவோ, இன்று வெளியிடப்பட்ட ப்ரோமோக்களில் வனிதாவின் வாய்ஸ் குறைவாகவே காட்டப்பட்டது. பிரஸ் மீட்டிற்கு இடையே நடந்த விவாதத்தின் போது வனிதா பேசியது போல் காட்டப்பட்டது. கடைசியாக வெளியிடப்பட்ட ப்ரோமோவில் மட்டும், வனிதாவின் குரல் ஒலிப்பதாக காட்டி, மொத்தம் எத்தனை பிரச்சனை என போட்டுள்ளனர். வனிதா- சுரேஷ் சக்கரவர்த்தியின் வாக்குவாத ப்ரோமோ கூட ஹைட் ஆகவில்லை.
Recommended Video

தட்டி தூக்கிய தாமரை
இன்று காலையில் இருந்து வெளியிடப்பட்ட ப்ரோமோக்களில் அபிராமி, அனிதா, பாலாஜி, சுரேஷ் சக்கரவர்த்தி என்ற பலரும் பேசினார்கள். இருந்தாலும் அவைகள் நொட்டிசன்கள் கண்டு கொள்ளவில்லை. ஆனால் ஒரே ப்ரோமோவிலேயே அத்தனை பேரும் தன்னை திரும்பி பார்க்கும் அளவிற்கு செய்து விட்டார் தாமரை. சுருதியை கேள்விக் கேட்டுக் கொண்டிருந்த தாமரை, திடீரென திரும்பி அபினய்யிடம் ஏன் கேவலமாக முழிக்கிறாய் என கேட்டார். அவருக்கு பதிலுக்கு நீங்க ஏன் என்னை பார்க்குறீர்கள், அங்கு பார்த்து கேள்வி கேளுங்கள் என்றார். தாமரையும், சாதாரணமாக பார்ப்பதற்கும், கேவலமாக பார்ப்பதற்கும் எனக்கு வித்தியாசம் தெரியும் என்கிறார்.

வனிதாவையே ஓரங்கட்டிட்டாரே
இந்த விவாதத்தில் மற்றவர்கள் சப்போர்டிற்கு வருவார்கள் என தாமரை எதிர்பார்த்தாரா என தெரியவில்லை. ஆனால் அது போல் யாரும் வரவில்லை. மாறாக ஷாரிக், விடுங்க என்ற போது, சுஜாவும் விடு அவர்கள் பார்த்துக் கொள்ளட்டும் என ஒதுங்கி விட்டார். இந்த ப்ரோமோவை பார்த்து விட்டு நெட்டிசன்கள் பலர் தாமரைக்கு ஆதரவாகவும், சிலர் எதிராகவும் கமெண்ட் செய்து வருகிறார்கள். சிலர் பிக்பாஸ் அல்டிமேட்டை தாமரை தான் வெல்ல வேண்டும் என கூறி வருகின்றனர். இருந்தாலும் ஒரே ப்ரோமோவிலேயே டிரெண்டில் வரும் அளவிற்கு தாமரை நடந்து கொண்டதை பார்த்து, வனிதாவையே இவர் ஓரங்கட்டி விட்டாரே என பலர் ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











