பிக்பாஸ் அல்டிமேட்...முதல் நாளே நாமினேட் ஆன 8 பேர் இவங்க தான்
சென்னை : பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி துவங்கி இன்னும் முழுவதுமாக 24 மணி நேரம் கூட ஆகவில்லை. அதற்குள் இந்த வாரம் வெளியேற்றப் பட்டியலுக்கான நாமினேஷன் நடத்தப்பட்டுள்ளது. இதில் 8 பேர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி 24 மணி நேர நேரடி நிகழ்ச்சியாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. ஓடிடி வெர்சனான பிக்பாஸ் அல்டிமேட், டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது. இதன் ஒரு மணி நேர நிகழ்ச்சி தினமும் இரவு 9 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. மொத்தம் 14 பேர் கலந்து கொண்டுள்ள இந்த போட்டியில் இந்த வார தலைவராக ஷாரிக் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

குழப்பத்தில் போட்டியாளர்கள்
கேப்டனான ஷாரிக்கை நாமினேட் செய்ய முடியாது. நிகழ்ச்சி துவங்கிய அடுத்த நாளே நாமினேஷன் நடத்தப்பட்டதால் யாரை நாமினேட் செய்வது என தெரியாமல் பெரும்பாலானவர்கள் மிகவும் யோசித்தும், யாருடைய பெயரையாவது சொல்ல வேண்டுமே என்பதற்காகவும் மற்றவர்களின் பெயர்களை சொன்னார்கள். இரண்டு பேரை நாமினேட் செய்ய வேண்டும் என பிக்பாஸ் கூறியதால் அனைவரும் மிகவும் குழம்பிப் போயினர்.

யார் யாரை நாமினேட் செய்தார்கள்
கன்ஃபஷன் ரூமிற்குள் சென்றதும் அனைத்து போட்டியாளர்களை அதன் செட் அப்பை பார்த்து பிரமித்து போயினர். முதல் ஆளாக நாமினேஷனை துவங்கிய நிரூப், அபிராமி மற்றும் சுரேஷ் சக்கரவர்த்தியை நாமினேட் செய்தார். ஜுலி, சுரேஷ் மற்றும் சுருதியின் பெயரை நாமினேட் செய்தார். அபிராமி, அனிதா மற்றும் நிரூப்பை நாமினேட் செய்தார். பாலாஜி முருகதாஸ், சிநேகன் மற்றும் வனிதாவை நாமினேட் செய்தார். சுரேஷ் சக்கரவர்த்தி, ஜுலி மற்றும் அபினய்யை நாமினேட் செய்தார். வனிதா விஜயக்குமார், அனிதா மற்றும் சினேகனை நாளினேட் செய்தார். சுஜா வருணி, அபினய் மற்றும் சுருதியை நாமினேட் செய்தார். அனிதா சம்பத், வனிதா மற்றும் ஜுலியை நாமினேட் செய்தார். தாடி பாலாஜி, சுரேஷ் மற்றும் தாமரையை நாமினேட் செய்தார். சினேகன், பாலாஜி முருகதாஸ் மற்றும் நிரூப்பை நாமினேட் செய்தார்.

பெயரை மாற்றி சொன்ன தாமரை
தாமரை, முதலில் ஜுலி மற்றும் வானிதாவின் பெயரை கூறினார். ஆனால் ஜுலியை நாமினேட் செய்வதற்கான காரணத்தை தெளிவாக சொல்லும்படி பிக்பாஸ் கேட்டதால், திடீரென மாற்றி வனிதா மற்றும் அபினய்யை நாமினேட் செய்வதாக கூறினார். சுருதி, வனிதா மற்றும் ஜுலியை நாமினேட் செய்தார். அபினய், சுரேஷ் மற்றும் வனிதாவை நாமினேட் செய்தார். ஷாரிக், சுரேஷ் மற்றும் வனிதாவை நாமினேட் செய்தார்.

நாமினேட் ஆன 8 பேர்
இந்த வார எவிக்ஷனுக்காக வனிதா, சுரேஷ் சக்கரவர்த்தி, ஜுலி, அபினய், அனிதா, சினேகன், சுருதி, நிரூப் ஆகிய 8 பேர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். முதல் ஆளாக வனிதாவின் பெயரை சொன்னதும், தலைவியை மறுபடியும் கதற விடுறீங்களேடா என பாலாஜி முருகதாஸ் சொல்கிறார். சுரேஷ் பெயரை கூறியதும் அவர், யாருடா பார்த்த வேலை இது என நக்கலாம் கேட்கிறார்.

நிரூப், அபினய்யை கலாய்த்த பிக்பாஸ்
இன்று நடந்த நாமினேஷனின் போது நிரூப் மற்றும் அபினய்யிடம், அடுத்த முறை ஆங்கிலம் இல்லாமல் தமிழில் பேச பயிற்சி எடுத்து வரும் படி சொல்லி கலாய்த்தார் பிக்பாஸ். இவர்களிடம் பிக்பாஸ் இப்படி சொன்னதால், நாமினேஷன் முடிந்ததும் இனி அனைவரும் தமிழில் தான் பேச வேண்டும். ஆங்கிலத்தில் பேசினார் எத்தனை முறை பேசுகிறார்களோ அத்தனை முறை குளிக்க வேண்டும் என்றார் கேப்டன் ஷாரிக். அதற்கு தண்ணீரை வேஸ்ட் செய்யக் கூடாது என மற்றவர்கள் சொன்னதால், தலையில் தண்ணீர் ஊற்றிக் கொள்ளும் தண்டனை கொடுக்கப்படும் என்றார்.


Click it and Unblock the Notifications











