பிக் பாஸ் அல்டிமெட் : வெல்லப் போவது வேகமா?... வியூகமா ?... இன்னும் இரண்டே நாளில்!
சென்னை : பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் ஆர்வத்தை தூண்டுவது வகையில், புதிய ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது.
பிக்பாஸ் அலட்டிமேட் நிகழ்ச்சி ஹாட்ஸ்டாரில் 30ம் தேதி மாலை 6.30 மணிக்கு பிரம்மாண்டமாக ஒளிபரப்பாக உள்ளது.
24 மணி நேரம் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியினை ஹாட்ஸ்டாரில் மக்கள் கண்டுகழிக்கலாம். இதில் போட்டியாளர்களாக இதுவரை பிக்பாஸ் சீசன்களில் பங்கேற்ற பிரபலங்கள் பங்கேற்க உள்ளனர்.

பிக்பாஸ் அல்டிமேட்
பிக்பாஸ் சீசன் 5 அண்மையில் முடிவடைந்த நிலையில், சுடச்சுட களமிறக்கப்படுகிறது பிக்பாஸ் அல்டிமேட். பழைய சீசனில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் இதில் கலந்து கொள்வார்கள் என்றதும் இந்த நிகழ்ச்சி மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து. அதுவும் போட்டியாளரை அறிமுகம் செய்யும் ப்ரோமோ சும்மா டாப் டக்கரா இருக்கு.

6 போட்டியாளர்கள்
இதுவரை பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பங்கேற்கும் 6 போட்டியாளர்கள் உறுதியாகி உள்ளார்கள். அதில் கவிஞர் சினேகன், குறும்பட புகழ் ஜூலி, வனிதா விஜயகுமார், அபிராமி, சுரேஷ் சக்கரவர்த்தி, தாடி பாலாஜி தற்போது கன்பார்மாகி உள்ளனர்.

தினமும் பஞ்சாயத்து
வானிதா இந்த நிகழ்ச்சியில் வருகிறார் என்றதுமே அது தூள் இனி தினமும் பஞ்சாயத்தை பார்க்கலாம் என்று குஷியாகிப்போனார்கள். அதே போல அமைதியா இருந்து கொளுத்திப்போட்டு வேடிக்கை பார்க்கும் சுரேஷ் சக்கரவர்த்தி வேற இருக்காரு ஸோ என்டர்டைன்மண்ட் கன்பார்ம் ஆனால் கமலின் பாடுதான் திண்ட்டாட்டமாக இருக்கும் பொறுத்து இருக்கலாம் இன்னும் இரண்டே இரண்டு நாளு தானே.

வெல்லப் போவது வேகமா, வியூகமா?
பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோ வெளியாகி உள்ளது. இதில் வெல்லப் போவது வேகமா...வியூகமா.. இன்னும் இரண்டு நாளில் என ஆர்வத்தை தூண்டுவது போல இந்த ப்ரோமோ உள்ளது. பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின்க ஓபனிங் விஜய் டிவிலும் ஒளிபரப்பாக உள்ளதாம். மேலும் ஸ்பெஷல் ஹைலைட்ஸ் தினமும் 9 மணிக்கு ஹாட்ஸ்டாரில் டெய்லி எபிசோடாகவும் ஒளிபரப்பாக உள்ளது.


Click it and Unblock the Notifications











