என்னய்யா நியாயம்.. பிபி-5ல் டம்மி டாஸ்க்.. அல்டிமேட்டில் கடுமையான டாஸ்க்.. 2 முறை மயக்கமடைந்த ஜூலி!
சென்னை: பிக் பாஸ் சீசன் 5 போட்டியாளர்கள் செம ஜாலியாக செலிபிரேஷன் மோடிலேயே ஏகப்பட்ட கிஃப்ட்களை வாங்கிக் கொண்டு அந்த சீசனையும் வெற்றிகரமாக உப்பு சப்பு இல்லாமல் முடித்து விட்டனர்.
இந்நிலையில், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு கடுமையான பிசிக்கல் டாஸ்க் கொடுக்கப்பட்டு வருவது ரசிகர்களை கொந்தளிக்க செய்திருக்கிறது.
அதுவும் 3 நாட்கள் சோறு, தண்ணி இல்லாமல் ஜூலி விளையாடியதில் 2 முறை மயக்கமடைந்தது ரசிகர்களை பதைபதைக்க வைத்திருக்கிறது.

சீசன் 5
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 5க்கு ரசிகர்கள் மத்தியில் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. ஜீ தமிழில் அர்ஜுன் தொகுத்து வழங்க ஒளிபரப்பான சர்வைவர் தமிழ் நிகழ்ச்சியில் அவ்வளவு கஷ்டமான டாஸ்க்குகள் கொடுக்கிறாராங்க? நீங்க எல்லாரையுமே மிக்சர் தின்ன வைக்கிறீங்களே என திட்டித் தீர்த்தனர்.

கொடுமையான டாஸ்க்
அதே ரசிகர்கள் தற்போது பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள டஃப் ஆன டாஸ்க் ரொம்பவே கொடுமையா இருக்கே பிக் பாஸ் சீசன் 5 போட்டியாளர்களுக்கு ஒரு நியாயம், இவர்களுக்கு ஒரு நியாயமா என வரிந்து கட்டிக் கொண்டு சண்டை போட்டு வருகின்றனர்.

தூங்க விடாமல்
இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் நடந்து வரும் லக்சரி பட்ஜெட் டாஸ்க் மிகவும் கடுமையான முறையில் நடைபெற்று வருகிறது. தூங்கவே விடாமல் சரியான உணவு இல்லாமல் போட்டியாளர்கள் கோழி டாஸ்க்கை ரொம்பவே சிரமத்துடன் எதிர்கொண்டு வருகின்றனர். அதிலும், ஜூலியின் நிலமை ரொம்பவே மோசமாக உள்ளது.

மயங்கி விழுந்த ஜூலி
3 நாட்கள் தூக்கம் இல்லாமல் சரியான உணவு கிடைக்காமல் விளையாட்டை விளையாடி வருகிறார் ஜூலி. அதில், இரண்டு முறை அவர் மயங்கி விழுந்ததை பார்த்து ரசிகர்கள் ரொம்பவே பதறிப் போயுள்ளனர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களை அழைத்து வந்து இப்படியா கொடுமைப்படுத்துவீங்கனு சரமாரியாக கேள்விகளை கேட்டு விளாசி வருகின்றனர். போட்டிகள் ஒரு நாளைக்கு மேல் நீளக் கூடாது என்றும் சரியான உணவு மற்றும் தூக்கம் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்றும் #Julie ஹாஷ்டேக்கை போட்டு டிரெண்ட் செய்து வருகின்றனர்.

அசிங்கமாக திட்டிய நிரூப்
ஏற்கனவே இந்த வாரம் நிரூப் ஜூலியை பார்த்து ரொம்பவே அசிங்கமாக திட்டியது அவரையும் ரசிகர்களையும் பயங்கர அப்செட்டில் ஆழ்த்தியது. இந்நிலையில், தொடர்ந்து ஜூலியை டார்கெட் செய்வது போல கேம் சென்று கொண்டிருப்பதை பார்த்து ரசிகர்கள் கொதித்துப் போயுள்ளனர்.

யார் எவிக்ஷன்
நிரூப்புடன் சேர்ந்து கொண்டு ஜூலிக்கு எதிராக பேசி வரும் அனிதா சம்பத்தை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என ரசிகர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், அனிதா சம்பத் குறைவான ஓட்டுக்களுடன் கடைசி இடத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அனிதா சம்பத்துக்கு அடுத்தபடியாக டேஞ்சர் ஜோனில் சுருதி மற்றும் வைல்டு கார்டு என்ட்ரி சதீஷ் ஆகிய இருவர் உள்ளனர். இந்த மூவரில் இந்த வாரம் யார் வெளியேறுவார் என்பது விரைவில் தெரிந்துவிடும்.


Click it and Unblock the Notifications











