Don't Miss!
- News
மாஜி ரவுடி- மாட்டு தலை மூலம் மத கலவர முயற்சி-சென்னையில் கொல்லப்பட்ட பாஜக பாலச்சந்தரின் ஷாக் பின்னணி
- Finance
ஏறிய வேகத்தில் இறங்க போகிறது சமையல் எண்ணெய் விலை: மத்திய அரசு எடுத்த முடிவு என்ன தெரியுமா?
- Lifestyle
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் சொத்துக்களை விற்பதில் கவனமாக முடிவெடுக்கவும்...
- Automobiles
சொன்னதை செஞ்சுட்டாங்க... டாடா நிறுவனம் செய்த நல்ல காரியம்... என்னனு தெரிஞ்சா பெருமைப்படுவீங்க!
- Sports
வழுக்கி விழுந்த ஹர்திக் பாண்ட்யா.. முதுகில் பலத்த அடியா.. குஜராத் vs ராஜஸ்தான் போட்டி பரபர சம்பவம்!!
- Technology
86-இன்ச் சியோமி ஸ்மார்ட் டிவி அறிமுகம்.! என்ன விலை? என்னென்ன அம்சங்கள்?
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
Bigboss Ultimate: வனிதா, ஜூலி, ஓவியா, பாலாஜி முருகதாஸ் அடடா அடிதடிக்கு பஞ்சமே இருக்காதே!
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒவ்வொரு சீசனிலும் அட்ராசிட்டி பண்ணிட்டு இருந்த மொத்த பேரையும் ஒரே வீட்டில் அடைத்து வைத்து அதகளப்படுத்த காத்திருக்கிறது பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி.
ஓவியா, ஜூலி, வனிதா விஜயகுமார், சினேகன், பாலாஜி முருகதாஸ், நிரூப், தாமரை செல்வி என ரசிகர்களின் ஃபேவரைட் போட்டியாளர்கள் பலரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதில், சினேகன், ஜூலி மற்றும் வனிதா விஜயகுமாருக்கு புரமோவே போட்டு விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
54 வயதில் 5 முறை விவாகரத்து செய்த பிரபல நடிகை... ஷாக்கான ரசிகர்கள்

அல்டிமேட்டா வருது
இந்தியில் பிக் பாஸ் ஒடிடி என 24 மணி நேரமும் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழில் பிக் பாஸ் அல்டிமேட் எனும் பெயரில் வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் ஆரம்பமாக உள்ளது. பாலிவுட்டில் சல்மான் கானுக்கு பதில் கரண் ஜோஹர் தொகுத்து வழங்கி இருந்தார். ஆனால், தமிழில் பிக் பாஸ் அல்டிமேட்டையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்கப் போகிறார்.

வனிதா வராங்க
பிக் பாஸ் தமிழ் சீசன் 3ல் போட்டியாளராக கலந்து கொண்ட வனிதா விஜயகுமார் வெளியேற்றப்பட்ட நிலையில், மீண்டும் அந்த சீசனிலேயே வைல்டு கார்டு என்ட்ரியாக வந்து வேறலெவல் கேம் விளையாடினார். இந்நிலையில், பிக் பாஸ் அல்டிமேட்டில் வனிதா விஜயகுமார் மற்ற சீசன் போட்டியாளர்களுடன் எப்படி அசத்த போறாங்க என்றும் கன்டென்ட் குயின் 24 மணி நேரத்தில் ஏகப்பட்ட கன்டென்ட்டுகளை கொடுத்துட்டே இருப்பாங்களே என்றும் ரசிகர்கள் பெரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

அவுட் ஆஃப் தி பாக்ஸ் பாலா
தொகுப்பாளினி அர்ச்சனாவையே பிக் பாஸ் வீட்டில் அலற வைத்த பாலாஜி முருகதாஸும் இந்த பிக் பாஸ் அல்டிமேட்டில் போட்டியாளராக பங்கேற்க போகிறார் என்று கூறப்படுகிறது. வனிதா விஜயகுமாருக்கும் பாலாவுக்கும் இடையே பேய்க்கும் பேய்க்கும் சண்டை போல தினமும் பஞ்சாயத்து வெடிக்குமா? என்றும் பாலாவை கன்ட்ரோல் பண்ண ஆரி கூட இல்லையே என ரசிகர்கள் பாலாவின் பர்ஃபார்மன்ஸை காண காத்திருக்கின்றனர்.

ஓவியாவுடன் ரொமான்ஸ் இருக்குமா
ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் ஓவியா இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார் எனக் கூறப்படும் நிலையில், பாலாவுக்கும் ஓவியாவுக்கும் இடையே ரொமான்டிக் டிராக் இருக்குமா? என்கிற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. முதல் சீசனில் ஓவியா மற்றும் ஆரவ் இடையே ஏற்பட்ட லவ் டிராக் வொர்க்கவுட் ஆகாத நிலையில், பாலாவுடன் சின்க் ஆவாரா? ஓவியா என ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

டெரர் தாமரை
வனிதா விஜயகுமார், பாலா எப்படியோ அதே அளவுக்கு டெரர் ஆன போட்டியாளர் தான் தாமரைச் செல்வி என்றும் அவரும் இந்த பிக் பாஸ் அல்டிமேட்டில் கலந்து கொள்ளப் போவதாக உறுதியான தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், இந்த முறை தாமரை ஃபைனல்ஸ் வரை செல்ல வேண்டும் என ஏகப்பட்ட ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.

நிரூப் நந்தகுமார்
பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசன் முதல் 4வது சீசன் வரை கரைத்து குடித்து விட்டு 5வது சீசனில் கலந்து கொண்ட நிரூப் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் பங்கேற்க போகிறார் என கூறப்படுகிறது. நிரூப் கரைத்துக் குடித்த அந்த 4 சீசன் போட்டியாளர்களுடன் இப்போ நிரூப் எப்படி மோதப் போகிறார் என்பதை காணவும் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

5 செகண்ட் ஜூலியும்
இவங்க மட்டுமில்லாம நம்ம 5 செகண்ட் குறும்பட ஜூலியும் இந்த பிக் பாஸ் அல்டிமேட்டில் போட்டியாளராக கலந்துக்கிறாங்க.. சினேகன், சுருதி, சுஜா வருணி என மேலும், பல போட்டியாளர்கள் பங்கேற்க போகும் இந்த பிக் பாஸ் அல்டிமேட்டில் அடிதடிக்கு பஞ்சமே இருக்காது என்றும் 5வது சீசன் போல மொக்கையாக இல்லாமல் பிசிக்கல் டாஸ்க்குகளுடன் விறுவிறுப்பாக நகரும் என்பது கன்ஃபார்ம்.

கமலுக்கு வேலை இருக்கும்
பிக் பாஸ் தமிழ் சீசன் 5ல் கடைசி வரைக்கும் கமல்ஹாசனுக்கு பெரிய வேலையே இல்லாமல் பிரியங்காவும் ராஜூவும் செய்து விட்டனர். பாவனி மட்டுமே கொஞ்சம் வேலையை கமலுக்கு கொடுத்திருந்தார். ஆனால், பிக் பாஸ் அல்டிமேட்டில் வார வாரம் கமல் சாருக்கு ஏகப்பட்ட பஞ்சாயத்துக்கள் நிச்சயம் காத்திருக்கும் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.