அலற போகுது பிக் பாஸ் அல்டிமேட்.... சம்பவம் இனிமேதான் ஆரம்பம்… டெரரா வந்த வனிதா!
சென்னை : திரும்ப வந்துட்டேனு சொல்லு... சம்பவம் இனிமேதான் ஆரம்பம் என்று தொடக்கமே அதிரடியாக பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் களமிறங்கி உள்ளார் வனிதா விஜயகுமார்.
முதல் போட்டியாளராக சினேகனும், இரண்டாவது போட்டியாளராக ஜூலி உறுதியாகி உள்ள நிலையில், தற்போது வெளியாகி உள்ள புதிய புரோமோவில் வனிதா விஜயகுமார் பங்கேற்பது உறுதியாகி உள்ளது.
வனிதா கன்பார்மாகி உள்ளதால் அவரது ரசிகர்கள் தலைவி வனிதாவை கொண்டாடி வருகின்றனர்.

பிக்பாஸ் அல்டிமேட்
பிக்பாஸ் சீசன் 5 அண்மையில் முடிவடைந்த நிலையில், சுடச்சுட களமிறக்கப்படுகிறது. பிக்பாஸ் அல்டிமேட். 24 மணி நேரமும் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகவுள்ள இந்த ஷோ ஜனவரி 30 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. கடந்த 5 சீசன்களில் போட்டியாளர்களாக கலந்து கொண்டவர்கள், இந்தப் போட்டியில் மீண்டும் களமிறங்கி வருகின்றனர்.

கவிஞர் சினேகன்
சீசன் ஒன்றில் கலந்து கொண்ட சினேகனை முதல் போட்டியாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். விஜய் டிவி புகழை வைத்து கலக்கலாக கவிஞர் சினேகனை பிக்பாஸ் அறிமுகப்படுத்தியுள்ளார். அவருக்கு அடுத்தபடியாக குறும்பட புகழ் ஜூலியை குறும்படத்தை வைத்தே ப்ரோமோவை தயாரித்து 2வது போட்டியாளராக களமிறங்கியுள்ளார் பிக் பாஸ்.

ஜக்கம்மா சொல்றா
இதையடுத்து, 3வது போராட்டியாளராக யார் வருவார் என்று எதிர்பார்த்து இருந்த ரசிகர்களுக்கு காலையிலேயே கலக்கலான ப்ரோமோ வெளியானது. அதில், ஜக்கம்மா சொல்றா... ஜக்கம்மா சொல்றா... கோபம் இருக்கும் இடத்தில் தான் குணம் இருக்கும் என்று சொல்லும் போதே தட்டு பறந்தது. இந்த ப்ரோமோவை பார்த்த நெட்டிசன்ஸ், அட இது நம்ம வனிதா அக்கா ஏகத்திற்கும் குஷியாகிவிட்டனர்.

வனிதா கன்பார்ம்
தற்போது வெளியாகி உள்ள ப்ரோமோவில் வெளியேறப் போகிறவர் வனிதா...வனிதா என கமல் கூறுவதை ரீவைண்டு செய்து பார்த்து வருகிறார். திரும்ப திரும்ப பார்த்தது போதும் பிக் பாஸ் அல்டிமேட்டுக்கு திரும்ப வாங்க என பிக் பாஸ் அழைக்க.. டெரரான வனிதா திரும்ப வந்துட்டேனு சொல்லு சம்பவம் இனிமே தான் ஆரம்பம் என்று மிரட்டலாக பேசியுள்ளார்.
Recommended Video

நாம ஜாலியாக இருக்கலாம்
பிக் பாஸ் அல்டிமேட்டில் சினேகன் இருக்காக... அழுமூஞ்சி ஜூலி இருக்காக... இப்போ வனிதா அக்கா மாஸ் என்ட்ரி கொடுத்து இருக்காக. அதையெல்லாம் வெச்சிபார்க்கும் போது தினமும் ஒரு சம்பவம் இருக்கும் போல, ரைட்டு நாம ஜாலியாக இருப்போம்.


Click it and Unblock the Notifications











