1000 போட்டியாளர்கள் வரட்டும்… வனிதா ஒரு ஆள் போதும்… ட்விட்டரை தெறிக்கவிடும் ரசிகர்கள் !

சென்னை : பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் வனிதா விஜயகுமார் கலந்து கொள்வது கன்பார்மாகி உள்ளதால் வனிதாவின் தீவிர ரசிகர்கள் மீம்ஸ்களை போட்டு இணையத்தை தெறிக்கவிட்டு வருகின்றனர்.

பிக்பாஸ் அல்டிமேட் 24 மணி நேரமும் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ஜனவரி 30ந் தேதி முதல் சுடசுட ஒளிபரப்பாகவுள்ளது.

இதில் கவிஞர் சினேகன், ஜல்லிக்கட்டு போராட்டப்புகழ் ஜூலி கலந்து கொள்வது உறுதியாகி உள்ளது.

வனிதா விஜயகுமார்

வனிதா விஜயகுமார்

பிக் பாஸ் அல்டிமேட்டில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் குறித்து தினமும் ஒரு ப்ரோமோ வெளியாகி வருகிறது. இன்று வெளியான ப்ரோமோவில் தானைத்தலைவி வனிதா, திரும்ப வந்துட்டேனு சொல்லு சம்பவம் இனிமே தான் ஆரம்பம் என்று பிக் பாஸ் அல்டிமேட்டை அலறவிடும் பாணியில் ப்ரோமோ வெளியாகி உள்ளது. இதைப்பார்த்த ரசிகர்கள் வனிதாவை கொண்டாடி வருகின்றனர்.

வனிதா ஒரு ஆள் போதும்

வனிதா ஒரு ஆள் போதும்

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வனிதா வெட்டு ஒன்று துண்டு ரெண்டுனு பேசுவார். அந்த சீசனின் மிகப்பெரிய வெற்றிக்கு காரணமாக இருந்ததே வனிதா தான். இதனால் தான் இவர் வருகிறார் என்றதும் ரசிகர்கள் குஷியாகி கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். ஒரு நெட்டிசன்ஸ், 1000 போட்டியாளர் இருக்கலாம். ஆனால், வனிதா மாதிரி ஒருத்தங்க இருந்ததான் முகத்தில் கண்ணீருடன் மகிழ்ச்சியும் நிகழ்ச்சியும் ஹிட் ஆகும் என பதிவிட்டுள்ளார்.

தலைவி வாங்க

தலைவி வாங்க

வனிதா விஜயகுமார் பல திரைப்படங்களை கையில் வைத்துக்கொண்டு பிஸியாக இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் விஜய் டிவியுடன் கருத்துவேறுபாட்டில் இருந்தார். இதனால்,அவர் பிக் பாஸ் அல்டிமேட்டில் கலந்து கொள்ள மாட்டார் என்று நினைத்தவர்களுக்கு இந்த ப்ரோமோ மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தலைவி வாங்க என்றும், இனிமே தான் ஆட்டம் ஆரம்பம் என்றும் மீம்ஸ்களை பகிர்ந்து வருகின்றனர்.

Recommended Video

' பிக் பாஸ் பாத்தீங்களா? ' Rithvika Interview | Sila Nerangalil Sila Manithargal
தெய்வமே வாங்க

தெய்வமே வாங்க

வனிதாவின் வருகையால் ஏகத்திற்கும் குஷியா ஒரு பிக் பாஸ் ரசிகர், தெய்வமே உங்களுக்காக காத்திருக்கிறது, நாங்க வெறுத்த ஒரு போட்டியாளரை பழி வாங்குவதற்கு உங்கள தான் நம்பி இருக்கோம் என பதிவிட்டுள்ளார். இவரது வருகையால் குஷியான ரசிகர்கள் இணையத்தை தெறிக்கவிட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X