வச்சு செய்யுங்க...நல்லா திட்டுங்க...ஆரம்பமே அமர்க்களப்படுத்திய வனிதா விஜயக்குமார்
சென்னை : பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் முதல் போட்டியாளராக வந்தார் வனிதா விஜயக்குமார். மேடையில் தோன்றியது முதல் வீட்டிற்குள் போகும் வரை அதிரடியாக, அமர்க்களப்படுத்தினார். ஆரம்பமே அதிரடியா இருக்கா என அனைவரும் மிரண்டு போய் உள்ளனர்.
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி 24 மணி நேர நிகழ்ச்சியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. இதன் பிரம்மாண்டதுவக்க விழா இன்று நடைபெற்றது. போட்டியாளர்கள் ஒவ்வொருவராக அறிமுகம் செய்து வைத்து, அவர்களை பற்றிய ஏவி காட்டி, அவர்களுக்கு ஒவ்வொரு விதமாக வித்தியாசமான பரிசையும் கொடுத்து வீட்டிற்குள் அனுப்பி வைத்தார் கமல்.

அதிரடி என்ட்ரி
முதல் போட்டியாளராக வந்த வனிதா விஜயக்குமார், வழக்கம் போல் போல் அதிரடி என்ட்ரி கொடுத்தார். கமல் இவரைப் பற்றி கூறுகையில், வீட்டில் சண்டை என்றாலும் சரி, சமாதானம் என்றாலும் சரி முதல் ஆளாக இருப்பவர் இவர் தான், வனிதா விஜயக்குமார் என்றார். பிக்பாஸ் அல்டிமேடிற்கு வந்ததற்கு என்ன காரணம், நீங்க விட்டாலும் பிக்பாஸ் வீடு உங்களை விட மாட்டேன் என்கிறார் என்றார் கமல்.

விட்டத பிடிக்க போறேன்
அதற்கு பதிலளித்த வனிதா, ஏதோ விட்ட குறை, தொட்ட குறை போல. மூன்றாவது முறையாக பிக்பாஸ் வீட்டிற்கு வருகிறேன். முதல் முறை வந்த போது என்ன இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள வந்தேன். இரண்டாவது முறை கொஞ்சம் புரிந்து கொண்டு வந்தேன். இப்போது வந்திருப்பது பெண்கள் பல துறைகளில் முன்னேறி உள்ளனர். ஆனால் கலாச்சாரம், கட்டுப்பாடு என சில வார்த்தைகளை சொல்லி பெண்களை கட்டுப்படுத்தி வைத்துள்ளனர். எல்லோருடைய வாழ்க்கையும் வெவ்வேறு விதமாக இருக்கும். அதைத் தாண்டி பெண்களுக்கென ஒரு வாழ்க்கை உள்ளது. அதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

நல்லா வச்சு செய்யுங்க
அத்தனை தடைகளை தாண்டி நான் நானாக வாழ்த்து கொண்டிருக்கிறேன். நான் யார் என்பதை காட்டி, விட்டதை பிடிப்பதற்காக வந்துள்ளேன் என்றார். அவரை பற்றிய ஏவி காட்டும் போதும், 40 நிமிடம் வனிதா பேசினாலே தாங்க முடியாது. இதில் 24 மணி நேரமும் இவர் பார்க்க வேண்டும் என பலர் நினைக்கலாம். கமெண்ட்ஸ் போடுவார்கள். போடட்டும். வச்சு செய்யுங்க. நல்லா திட்டுங்க. இஷ்டம் போல் என்ஜாய் பண்ணுங்க. ஒருவரை பற்றிய முழுவதுமாக தெரியாமல் அவரை பற்றி எந்த முடிவுக்கும் வராதீர்கள் என்றார்.

கலக்கல் டான்ஸ்
வீட்டிற்குள் செல்வதற்கு முன் வனிதா விஜயக்குமாருக்கு தேன் பாட்டிலை பரிசாக கொடுத்தனுப்பினார் கமல். இதற்குள் ஒரு உட்கருத்தும் இருக்கு. அது போக போக உங்களுக்கு தெரியும் என்றார். வனிதா விஜயக்குமார் கெத்து காட்டும்படி போடப்பட்ட பாடல்களுக்கு அவர் செமயாக டான்சும் பெர்ஃபாமன்சும் கொடுத்தார். சாண்டி மாஸ்டர் அவரை கலாய்த்த போதும், அதற்கும் மாஸாக பதில் கொடுத்தார். புஷ்பா படத்தில் வரும் ஊ சொல்றியா மாமா பாடல் முதல், இசைவாணியில் கானா பாடல் வரை செம ஆட்டம் போட்டார் வனிதா.


Click it and Unblock the Notifications











