கொளுத்திப் போடுவது தான் ஒரே வேலை… சுரேஷ் தாத்தாவை வச்சு செஞ்ச வனிதா.. அல்டிமேட் ரணகளம்!

சென்னை : பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் இன்றை எபிசோடுக்கான 2வது ப்ரோமோ வெளியாகி உள்ளது. இதில் சுத்தியலை கையில் கொடுத்து "நீ இதுக்கு சரிப்பட்டு வரமாட்ட" என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.

நேற்றைய எபிசோடில் சுரேஷ் பொண்ணுனா அடக்கம் வேணும்னு பேசியதற்கு, பழிதீர்க்கும் விதமாக இன்று, வனிதா அக்கா சுரேஷ் தாத்தாவை வச்சு செய்துள்ளார்.

இதில் 14 போட்டியாளர்கள் இருந்தாலும் ஒவ்வொரு போட்டியாளர்களும் புத்திசாலித்தனமாக விளையாடி வருகிறார்கள்.

பிக் பாஸ் அல்டிமேட்

பிக் பாஸ் அல்டிமேட்

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ஆரம்பித்து 5 நாட்கள் தான் ஆகிறது. அதற்குள் வீட்டிற்குள் சண்டை உச்சகட்டத்தை எட்டி உள்ளது. பழைய சீசனில் போட்டியாளர்கள் புதியவர்களாக இருப்பதால் சண்டைகள் வர கொஞ்சம் தாமதமாகும் ஆனால், இப்போது அனைவரும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பழக்கமானவர்கள் என்பதால், இப்போதே சண்டைகள் வரத்தொடங்கி விட்டன.

நீ இதுக்கு சரிபட்டு வரமாட்ட

நீ இதுக்கு சரிபட்டு வரமாட்ட

நீ இதுக்கு சரிபட்டு வரமாட்ட என்ற டாஸ்க் கொடுக்கப்படுகிறது. பாலாஜி முருகதாஸ், அனிதா சம்பத், சுரேஷ் மற்றும் அபிராமி ஆகியோரின் புகைப்படங்கள் ஒட்டப்பட்டுள்ளன. இதில், தலைவராக இருக்க தகுதி இல்லாதவர் யார் என்பதை மற்ற போட்டியாளர்கள் காரணத்தோடு கூறி சுத்தியலால் அவர்களின் புகைப்படத்தை உடைக்க வேண்டும். அதிகம் யாருடைய புகைப்படம் உடையாமல் இருக்கிறதோ அவரே ஜெயிப்பார்.

2வது ப்ரோமோ

2வது ப்ரோமோ

இதையடுத்து, இன்றை எபிசோடுக்கான 2வது ப்ரோமோ வெளியாகி உள்ளது. இதில், நிரூப், அபிராமியிடம் கேப்டன் ஆன புதுசா என்ன ரூல்போடுவீங்கனு கேட்கிறார். அதற்கு அபிராமி நான் கேப்டனா ஆன பின்புதான் அதைப்பற்றி யோசிக்க முடியும் என்கிறார். நிரூப்பின் முன்னாள் காதலி அபிராமி என்பதால் நிச்சயமாக அபிராமியின் புகைப்படத்தை உடைக்கமாட்டார் என்றே தோன்றுகிறது.

Recommended Video

Yashika WILDCARD Entry in Bigg Boss Ultimate | உண்மை உடைத்த Vanitha, Abhi Vs Niroop Vs Yashika
கொளுத்திப்போடுவது தான்

கொளுத்திப்போடுவது தான்

அடுத்ததாக சுத்தியலை எடுத்துக்கொண்டு வந்த வனிதா, சுரேஷ் அண்ணாவுக்கு கொளுத்திப்போடுவது மட்டும்தான் அவருடைய வேலை அவருக்கு கேப்டனாகும் தகுதி இல்லை என்று கூறி அவர் முகத்தை உடைக்கிறார். அதேபோல, பாலாவுக்கும் அனிதாவுக்கும் இந்த டாஸ்கின் போது முட்டிக்கொள்கின்றனர். வழக்கமாக பாலா சின்ன சின்ன விஷயத்திற்கு எல்லாம் கோவப்படுவார். இந்த சீசனில் பக்குவத்துடன் விளையாடுவார் என்று பார்த்தால் இப்போதும் அதேபோல கோவத்துடனே இருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X