புது கார் வாங்கிய பாலாஜி முருகதாஸ்..பிக் பாஸ் அல்டிமேட் சம்பளத்தில் வாங்கியதா?
சென்னை : பிக் பாஸ் சீசன் 4 போட்டியாளரான பாலாஜி முருகதாஸ் புதிதாக கார் வாங்கி உள்ளார். காரை அறிமுகப்படுத்தும் வீடியோவைப் பகிர்ந்துள்ள அவர், இது தனது வாழ்க்கையின் மகிழ்ச்சியான நாட்களில் ஒன்று என குறிப்பிட்டுள்ளார்.
Recommended Video
பல பிரபலங்கள் கமெண்ட் பாக்ஸில் பதிலளித்து பாலாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தொலைக்காட்சி தொகுப்பாளர் அர்ச்சனா, வாழ்த்துகள் பாலா.. உன்னை நினைத்து பெருமை அடைகிறேன்.. எப்போதும் பாதுகாப்பாக வாகனம் ஓட்டு என தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார்.

பாலாஜி முருகதாஸ்
கட்டுமஸ்தான உடல்வாகு... பார்த்தவுடன் வாவ் வாட் ஏ ஹேன்சம் பாய் என சொல்லக்கூடியவர் பாலாஜி முருகதாஸ். தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்று மிகவும் பிரபலமானார். மாடலிங் துறையை சேர்ந்த பாலாஜி முருகன், பிக்பாஸ் சீசன் 4ன் காதல் மன்னன், பயில்வான், தைரியசாலி, என பல பெயர்களால் அழைக்கப்பட்டு வந்தார். பிக் பாஸ் சீசன் 4 ல் தன்னை தானே செத்துக்கியவன் என்று பாடல் பாடாத குறைக்கு பறைசாற்றிக் கொண்டார்.

ஷிவானியுடன் தனி ட்ராக்
ஆரியுடன் சண்டையிட்டு மண்டையை முட்டிக்கொண்ட நேரத்திலும், ஷிவானியுடன் தனி ட்ராக்கை ஓட்டிக்கொண்டு இருந்தார் பாலாஜி. இந்த வீட்டில் ஷிவானியுடன் மிகவும் நெருங்கி பழகி வந்தனர். இருவருக்கும் இடையே காதல் மலர்ந்ததாக ரசிகர்கள் கூறி வந்த நிலையில், ஷிவானியின் அம்மா பிக் பாஸ் வீட்டுக்குள் விசிட்டடித்து, பாலாஜிக்கு எடுபுடி வேலை செய்யத்தான் இங்க வந்தியா? என ஷிவானியை கண்டமேனிக்கு திட்டித்தீர்த்துவிட்டு வெளியேறினார்.

டைட்டில் வின்னர்
என்னத்தான் பாலாஜி முருகதாஸ் மேல் பல்வேறு சர்ச்சைகளை எழுந்தாலும், தன்னுடைய ஹேன்சம் லுக்கால் ஏராளமான பெண் ரசிகர்களை தன் வசப்படுத்தி வைத்திருந்தார். ஏராளமான பெண்களின் ஆதரவால் பிக் பாஸ் வீட்டில் 105 நாட்கள் இருந்து 2வது இடத்தை பிடித்தார். இதையடுத்து, டிஸ்னி பிளாஸ் ஹாட் ஸ்டாரில் வெளியான பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டைட்டில் வின்னர் ஆனார்.

புதிய கார்
இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் பாலாஜி முருகதாஸ் புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார். இது குறித்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து அதில் அவர் கேப்ஷனாக 'புதுசா மாடு வாங்கியிருக்கோம்' என்று குறிப்பிட்டுள்ளார். இந்த கார் குறித்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications