பிக் பாஸ் அல்டிமேட்டில் முதல் வாரத்தில் எலிமினேட் ஆனது யார் தெரியுமா? கேப்டனாக்கியதே தூக்கத்தானோ!
சென்னை: பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் முதல் வாரம் எவிக்ஷன் இருக்காது என எதிர்பார்த்த நிலையில், 70 நாட்கள் மட்டுமே என்பதால் ஒவ்வொரு வாரமும் ஒருவர் வெளியேற வேண்டும் என்பது கட்டாயமாகி உள்ளது.
சனிக்கிழமை நிகழ்ச்சிக்கான ஷூட்டிங் சற்றுமுன் நிறைவடைந்த நிலையில், எலிமினேட் ஆனது யார் என்கிற தகவல் வெளியாகி உள்ளது.
அன் அஃபிஷியல் ஓட்டிங்கில் கடைசி இடத்தில் இருந்த அந்த பெரிய இடத்து பிள்ளை மீண்டும் காப்பாற்றப்பட்டுள்ளார்.

எலிமினேஷன் இருக்கு
பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் மொத்தம் 14 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். ரசிகர்களுக்கு மிகவும் பரீட்சையமான போட்டியாளர்கள் என்பதால் நிகழ்ச்சி சுவாரஸ்யமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. முதல் வாரத்தில் 8 பேர் நாமினேட் செய்யப்பட்டனர். அதில், ஒருவர் கூட முதல் வாரத்தில் வெளியேற மாட்டார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், தற்போது ஒருவர் வெளியேறி உள்ளார் என்கிற தகவல் வெளியாகி உள்ளது.

அபிநய் எஸ்கேப்
பிக் பாஸ் சீசன் 5ல் கடைசி வரைக்கும் அன் அஃபிஷியல் போலிங் அப்படியே சரியாக அமைந்தது. கடைசி நாள் வரை அபிநய் குறைவான ஓட்டுக்களுடன் எவிக்ட் ஆகும் சூழலில் இருந்த நிலையில், அவர் எலிமினேட் ஆகாமல் தப்பித்துக் கொண்டார் அவருக்கு பதில் எலிமினேட் ஆனது யார் என்பது தான் இதில் ஆச்சர்யமான விஷயமே..

தாத்தா அவுட்
பிக் பாஸ் சீசன் 4ல் திடீரென வெளியேறிய சுரேஷ் சக்கரவர்த்தி தாத்தா இந்த பிக் பாஸ் அல்டிமேட்டில் முதல் நபராக எலிமினேட் ஆகி உள்ளார் என்கிற தகவல் தற்போது கிடைத்திருக்கிறது. அன் அஃபிஷியல் ஓட்டிங்கில் அவருக்கும் அபிநய்க்கும் பெரிய வித்தியாசம் ஏதும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருவரும் 6 சதவீத ஓட்டுக்களை மட்டுமே பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கேப்டனாக்கியதே தூக்கத்தானோ
இந்த வாரம் நடந்த கேப்டன் டாஸ்க்கில் பாலாஜி முருகதாஸ் பல்லக்கில் இருந்து இறங்கிய நிலையில், சுரேஷ் தாத்தா கேப்டன் ஆனார் என்பதை பிக் பாஸே அறிவித்த காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலான நிலையில், தற்போது அவர் எவிக்ட் ஆகி இருப்பது மீண்டும் அடுத்த வார கேப்டனுக்கான போட்டியை உருவாக்கும் என தெரிகிறது.

பாலா சூடாகிவிடுவார்
ஏற்கனவே சுரேஷ் தாத்தா இந்த வாரம் எவிக்ட் ஆகி வெளியேறினால் கேப்டன் டாஸ்க் விளையாட்டு வீணாக போய்விடும் என நினைத்த பாலாஜி முருகதாஸ் தான் கேப்டனாக வேண்டும் என பெரும் பிரயத்தனம் செய்தார். ஆனால், கடைசி நேரத்தில் அவரே கடுப்பாகி இறங்கி சுரேஷ் தாத்தாவிற்கு விட்டுக் கொடுத்த நிலையில், அடுத்த வாரமும் இது பிக் பாஸ் அல்டிமேட் வீட்டில் பெரிய பிரச்சனையை உண்டாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Recommended Video

ரசிகர்கள் அதிர்ச்சி
பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கொளுத்திப் போட்டுக் கொண்டு வனிதா விஜயகுமாரையே அன்பால் அடக்கி கேம் ஆடி வந்த சுரேஷ் தாத்தாவை முதல் நபராக வெளியேற்றி விட்டு சில போட்டியாளர்களை காப்பாற்ற பிக் பாஸ் அல்டிமேட் குழு முயற்சி செய்துள்ளது தெளிவாக தெரிவதாக ரசிகர்கள் தங்களின் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











