அடேங்கப்பா.. ரூ. 8 லட்சம் வரை உயர்த்தப்பட்ட பரிசுத் தொகை.. இந்த சீசனில் யாருமே அறிவாளி இல்லையா?
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியே இன்னும் ஒரு வாரத்தில் முடிந்து விடும் நிலையில், ரூ. 8 லட்சம் வரை பரிசுத் தொகை உயர்த்தப்பட்டும் போட்டியாளர்கள் அதை பொருட்படுத்தாது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.
முதல் புரமோவில் 7 லட்சம் ரூபாய் வரை காட்டப்பட்ட நிலையில், அன்சீன் புரமோவில் ரூ. 8 லட்சம் இருக்கும் பணப்பெட்டி கண்ணை பறிக்கிறது.
ஆனால், ராஜுவும் அமீரும் அதை கண்டு கொள்ளாமல் பாட்டுப் பாடி தாளம் போடும் காட்சிகள் இந்த அன்சீன் புரமோவில் இடம்பெற்றுள்ளன.

கேபி ஷாக் ஆகிருப்பாங்க
கடந்த சீசனில் 5 லட்சம் ரூபாய் பணப்பெட்டி வந்ததுமே அதை ரியோ எடுப்பதற்குள் முந்திக் கொண்டு படு ஸ்மார்ட்டாக விளையாடிய கேபி இப்போ ரூ. 8 லட்சம் வரை பணப்பெட்டி வந்திருப்பதை பார்த்தால் என்ன எல்லாம் சொல்லி உள்ளே இருக்கும் போட்டியாளர்களை திட்டி இருப்பாங்க என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

அடேங்கப்பா 8 லட்சமா
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரன்னர் அப் ஆனால் கூட ஒரு வெங்கலக் கின்னம் கூட கிடைக்காது. 8 லட்சம் வரை பெட்டி வந்துள்ள நிலையில், புத்திசாலித்தனமாக யாராவது யோசித்து எடுத்துட்டு வீட்டுக்கு போங்கப்பா என தாமரை, நிரூப், பாவனி மற்றும் அமீரின் ஆர்மியினர் கமெண்ட்டுகளை தெறிக்க விட்டு வருகின்றனர்.

கெளரவம் படமா ஓடுது
சிவாஜி நடிச்ச கெளரவம் படமா உள்ள ஓடுது. பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு வெளியேறினால் என் கெளரவம் என்ன ஆகிறது என தாமரை ஒரு கோடி கொடுத்தாலும் வெளியேற மாட்டேன் என விளையாடி வருகிறார். பிக் பாஸ் டைட்டில் வின்னருக்கே ரூ. 50 லட்சம் தான் பரிசு என யாராவது அவருக்கு சொல்லுங்கப்பா என ரசிகர்கள் கெஞ்சி வருகின்றனர்.

அமீர் ஏன் தாளம் போடுறாரு
இரண்டாவது புரமோவில் மீண்டும் 6 லட்ச பெட்டியை காட்டியதற்கு பதிலாக அதை அன்சீனில் வைத்து விட்டு இதை 2வது புரமோவாக போட்டிருக்கலாம் என பிக் பாஸ் எடிட்டரையும் ரசிகர்கள் கழுவி ஊற்றி வருகின்றனர். ராஜு தாளம் போடுகிறார் சரி கூடவே அமீரும் ஏன் தாளம் போட்டு பாட்டு பாடுகிறார் என அமீரின் ரசிகர்களே அப்செட்டாகி திட்டி வருகின்றனர்.

நாளை அதிகரிக்குமா
நேற்று 3 லட்சம் வைத்த நிலையில், பணம் இன்னும் அதிகமாகட்டும் என விட்டு வைத்த பிக் பாஸ் போட்டியாளர்கள் இன்று 5 லட்சம் முதல் 8 லட்சம் வரை அதிகரித்தும் எடுத்துக் கொண்டு செல்லாத நிலையில், நாளை 10 லட்சம் வரை அதிகரிக்கும் என போட்டியாளர்கள் காத்திருக்கிறார்களா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

யாருக்கும் இல்லை
ரூ. 8 லட்சம் வரை பணம் வைத்து யாரும் எடுக்காத நிலையில், இந்த சீசனில் பணப்பெட்டி யாருக்கும் இல்லை என பிக் பாஸ் கதற விட போகிறார் அது தான் ஸ்க்ரிப்ட்டு என்றும் சில நெட்டிசன்கள் பிக் பாஸ் அன்சீன் புரமோவை பார்த்து கமெண்ட்டுகளை பறக்க விட்டு வருகின்றனர். பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











