பாட்டியின் சேலை அணிந்து, தாலி கட்டாமல் காதலரை மணந்த பிக் பாஸ் வைஷ்ணவி

By Siva

Recommended Video

பாட்டியின் சேலை அணிந்து திருமணம் செய்து கொண்ட வைஷ்ணவி

சென்னை: பிக் பாஸ் பிரபலம் வைஷ்ணவி தனது காதலரை பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.

பிக் பாஸ் 2 நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் வைஷ்ணவி. அவர் விமானியான அஞ்சனை காதலித்து வந்தார். அவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பிறகு தான் தனது காதலை சமூக வலைதளங்களில் ஒப்புக் கொண்டார்.

3 ஆண்டுகள் காதலித்து வந்த நிலையில் அஞ்சனை வைஷ்ணவி திருமணம் செய்து கொண்டார்.

திருமணம்

வைஷ்ணவி, அஞ்சனின் திருமணம் குடும்பத்தார், நண்பர்கள் முன்னிலையில் சென்னை பெசன்ட் நகரில் உள்ள அஷ்டலட்சுமி கோவிலில் எளிமையாக நடைபெற்றது. வைஷ்ணவியும் சரி, அஞ்சனும் சரி மிக எளிமையாக உடை அணிந்திருந்தனர்.

நகைகள்

வைஷ்ணவி தனது பாட்டியின் சேலையை உடுத்தி திருமணம் செய்து கொண்டார். மேக்கப் போட கூட ஆள் அழைத்து வரவில்லை. அவரே மேக்கப் போட்டுக் கொண்டார். மேலும் திருமணத்திற்காக தங்க, வைர நகைகள் வாங்கவில்லை. கவரிங் நகைகள் அணிந்து தான் திருமணம் செய்து கொண்டார். நகைகள் வாங்க காசு இல்லாமல் இல்லை. ஒரு நாள் விஷயத்திற்காக ஆடம்பர செலவு செய்ய விரும்பவில்லையாம். நல்ல முடிவு வைஷுமா.

மாலை

திருமணத்தின்போது அஞ்சன் வைஷ்ணவிக்கு தாலி கட்டவில்லை. மாறாக இருவரும் மாலை மட்டும் மாற்றிக் கொண்டுள்ளனர். 10 நிமிடத்தில் திருமணம் முடிந்து வீட்டிற்கு சென்று தென்னிந்திய உணவு சாப்பிட்டுள்ளனர். திருமணத்திற்கு வந்தவர்கள் தான் புகைப்படம் எடுத்துள்ளனர். போட்டோகிராபரை அழைத்து வந்து அவர் செய்யும் டார்சரை எல்லாம் வைஷ்ணவி சந்திக்காமல் தப்பித்துவிட்டார்.

வீண்

வைஷ்ணவிக்கும், அஞ்சனுக்கும் திருமணம் மீது நம்பிக்கை இல்லை. இருப்பினும் பெற்றோர் வலியுறுத்தியதால் திருமணம் செய்து கொண்டுள்ளனர். திருமணத்தை எங்கள் விருப்பப்படி எளிமையாக நடத்த வேண்டும் என்று வைஷ்ணவியும், அஞ்சனும் சேர்ந்து விடுத்த கோரிக்கையை இருவீட்டாரும் ஏற்றுக் கொண்டனர்.

விருந்தினர்

திருமணம் முடிந்த பிறகு உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு பார்ட்டி கொடுத்துள்ளார் வைஷ்ணவி. அழகான மற்றும் சுவையான கேக் வெட்டியுள்ளனர். மேலும் வைஷ்ணவியும், அஞ்சனும் சேர்ந்து டான்ஸ் ஆடியுள்ளனர். பார்ட்டியிலும் பிரமாண்டம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X