ரீல்ஸ் வார்த்தை யூஸ் பண்ணா தப்பா?தனலட்சுமியை வெளுத்துவாங்கிய வனிதா!

சென்னை: பிக்பாஸ் வீட்டிற்குள் நேற்று நடத்த சம்பவங்கள் குறித்து, பிரபல ஊடகம் ஒன்றுக்கு பிக்பாஸ் வனிதா ரிவ்யூ கொடுத்துள்ளார்.

தனலட்சுமி ஜிபி முத்துவை நடிக்காதீங்க என்று சொன்னதால் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. ஜாலியாக சிரித்து ஆடிப்பாடிக்கொண்டிருந்த ஜிபி முத்து நான் நடிக்கவில்லை என அழுதார்.

இதையடுத்து அனைவரும், அவரை சமாதானம் செய்தனர். ஜிபிமுத்து கண்ணீர் விட்டதை பார்த்த ரசிகர்கள் தனலட்சுமியை கண்டபடி திட்டித்தீர்த்து வருகின்றனர்.

தனலட்சுமி ஸ்வாப்

தனலட்சுமி ஸ்வாப்

இதையடுத்து,நேற்றைய எபிசோடில், ஜிபி முத்துவிடம் தனலட்சுமி சண்டை போட்டது குறித்து பேசிய வெஷல் கிளீனிங் டீம் லீடர் ஜனனி, பெரியவர்கள் வயதானவர்கள் அனைவரும் இந்த வீட்டில் இருக்கிறார்கள். இதில் வயதில் பெரியவர்கள் வா.. போ என்று பேசுவது தப்பான விஷயம் இல்லை. இதை பற்றி பெரிதாக நாம் எடுத்துக் கொள்ளவும் தேவையில்லை. இது ஒன்றும் ரீல்ஸ் இல்லை இதனால், தனலட்சுமியை ஸ்வாப் செய்வதாக ஜனனி கூறினார்.

ஜனனி

ஜனனி

ஜனனியின் பேச்சால் கடுப்பான தனலட்சுமி,மற்ற போட்டியாளர்களிடம் ரீல்ஸ் போடுவதைப் பற்றி ஜனனி ஏன் பேசவேண்டும் என பஞ்சாயத்தை கூட்டினார். இதையடுத்து, ஆயிஷா, விக்ரம் என அனைவரும் ரில்ஸ் பற்றி நீங்கள் எப்படி தவறுதலாக பேசலாம் என ஜனனியிடம் சண்டைக்கு நிற்க ஜனனி என்ன சொல்வது என்று தெரியாமல் திணறினார்.

ஜிபி முத்து தெளிவாக இருக்கிறார்

ஜிபி முத்து தெளிவாக இருக்கிறார்

இந்நிலையில், நேற்யை நிகழ்ச்சி குறித்து பேசிய வனிதா விஜயகுமார், ஜிபி முத்துக்கு பிக் பாஸ் வீட்டிற்குள் நுழையும் அளவுக்கு அவருக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் அதுவே மிகப்பெரிய விஷயம். அது மட்டுமில்லாமல் ஜிபி முத்து காமெடியனாக மட்டும் இல்லை, புத்திசாலியாகவும் இருக்கிறார். தாமரை மாதிரி எனக்கு ஒன்னும் தெரியாது, தெரியாதுனு சொல்லாமல் தெளிவாக இருக்கிறார்.

இவ்வளவு கலாட்டா எதுக்கு

இவ்வளவு கலாட்டா எதுக்கு

தனலட்சுமி குறித்து ஜனனி ரொம்ப தெளிவாக பேசியிருந்தார். அவள் பேசிய விதம் எனக்கு பிடித்து இருந்தது. இது ரீல் இல்லை பிக் பாஸ் வீடு என்று சொன்னதில் எந்தவிதமான தப்பும் இல்லை, நானா இருந்தாலும் அப்படித்தான் பேசியிருப்பேன். இந்த விஷயத்திற்கு போய் தனலட்சுமி இவ்வளவு கலாட்டா பண்றது, அழுவது எல்லாமே நாடகம். ரீல்ஸ் வார்த்தை யூஸ் பண்ணது தப்பான விஷயமே இல்லை என நடிகை வனிதா கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X