Vanitha: தடபுடலாக நடக்கும் கல்யாணம்.. யாருமே கூப்பிடல.. வனிதா போட்ட போஸ்ட்!
சென்னை: விஜயகுமாரின் பேத்தியும் அனிதாவின் மகளுமான தியாவின் திருமணம் நாளை கோலாகலமாக நடைபெற உள்ளது. ஒட்டுமொத்த குடும்பமும் ஒன்று ஓடி திருமணத்தை கொண்டாடி வருகின்றனர். இதில் வனிதா விஜயகுமார் கல்யாணத்திற்கு அழைக்கப்படாத நிலையில், இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டுள்ள பதிவு இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
விஜயகுமார் மஞ்சுளா தம்பதியினரின் மூத்த மகளான வனிதாவிற்கு பெரிய அளவில் அறிமுகம் தேவை இல்லை. இவர், தளபதி விஜய்யோடு சந்திரலேகா என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகம் ஆனார். அதை தொடர்ந்து சில திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வந்த நேரத்தில் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார்.

வனிதா விஜயகுமார்: ஆனால் வனிதாவின் திருமண வாழ்க்கை நிலைக்கவில்லை. மாறாக தொடர்ந்து 2 திருமணங்கள் செய்தார். அதுவும் பிரிவில் முடிந்தது. கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்த வனிதா, பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக பெரிய அளவில் பிரபலமானார். வனிதாவிற்கு அவருடைய அப்பா விஜயகுமாருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, இப்போது வரை வனிதாவை யாரும் கண்டுகொள்ளவில்லை. நடிகை வனிதா தனது இரண்டு மகள்களுடன் தனியாக வசித்து வருகிறார்.
வீட்டில் விசேஷம்: இந்நிலையில், விஜயகுமார் முத்துக்கண்ணு தம்பதியினரின் மகளான அனிதா விஜயகுமாரின் மகள் தியாவிற்கு நாளை மகாபலிபுரத்தில் திருமணம் நடைபெற உள்ளது. திருமண விழா களைகட்டி வரும் நிலையில், நேற்று அனிதா விஜயகுமார் வீட்டில் பந்தகால் நடும் நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது. மேலும், சங்கீத் மற்றும் மெஹத்தி பங்ஷனும் கோலாகலமாக நடைபெற்றது. இதில் விஜயகுமார், கவிதா விஜயகுமார், அருண் விஜய், ப்ரீத்தா, ஸ்ரீதேவி என ஒட்டுமொத்த குடும்பத்தினரும் கலந்து கொண்டனர். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வனிதா போட்ட பதிவு: இந்த திருமணத்தில் வனிதாவை யாரும் அழைக்காத நிலையில், அவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், சிங்கம் நடந்து வருவது போன்ற வீடியோவை வெளியிட்டு, ஒட்டுமொத்த கூட்டமும் ஒரு இடத்தில் சேரும் போது, நீங்க சிங்கம் போல தனியாக இருந்தால், நீங்க எவ்வளவு பவர் புல் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று பதிவிட்டுள்ளார். இதன் மூலம், ஒட்டுமொத்த குடும்பமும் என்னை ஒதுக்கினாலும் சிங்கம் போல நான் தனியாக இருப்பேன் என்பதை வனிதா அந்த பதிவில் போட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











