ஆண்களின் பின்னால் ஓடி ஓடி சோர்ந்துவிட்டேன்.. அந்த தப்பை இனி செய்ய மாட்டேன்.. வனிதா பளீச் பதில்!
சென்னை: தமிழ் திரையுலகின் முக்கிய நட்சத்திர குடும்பத்தை சேர்ந்தவர் நடிகை வனிதா விஜயகுமார். இவர் விஜய்க்கு ஜோடியாக சந்திரலேகா படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகம் ஆனார். அதன்பிறகு தேவி என்ற தெலுங்கு படத்தின் மூலம் தெலுங்கு பக்கம் சென்ற இவர் திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து ஒதுக்கினார். சினிமாவில் ஒரு ரவுண்டு வரும் வனிதா, இன்ஸ்டாகிராமில் தனது ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்துள்ளார்.
விஜயகுமாரின் மகளான வனிதா, நடிகர் ஆகாஷை 2000ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டு படங்களில் இருந்து ஒதுங்கினார். ஆகாஷ், வனிதா தம்பதிக்கு ஸ்ரீஹரி மற்றும் ஜோவிகா என இரண்டு குழந்தைகள் பிறந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்தார். இதையடுத்து இரண்டாவது கணவரிடமிருந்து ஜெயனிதா என்ற மகளும் உள்ளார். ஆனால், மகன் ஸ்ரீஹரியை தந்தையுடன் தங்க நீதிமன்றம் அனுமதித்தது. அதனால் வனிதாவிடம் இருந்து விலகி தந்தையுடன் வளர்ந்து வருகிறார் ஸ்ரீஹரி .

மிகவும் சோர்ந்துவிட்டேன்: பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் சினிமாவில் மீண்டும் தலைகாட்டி உள்ள வனிதா, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ளார். அதில், ரசிகர் ஒருவர், உங்களுக்கு யாராவது ஒருத்தர் தான் சூஸ் பண்ணனும் அப்படின்னு வாய்ப்பு இருந்தா உங்களோட அப்பாவை தேர்ந்தெடுப்பீங்களா? அல்லது உங்களோட மகனையா என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ள வனிதா, யார் என்னை தேர்ந்தெடுக்குறாங்களோ, அவங்கள தான் நான் தேர்ந்தெடுப்பேன். ஆண்களின் பின்னாடி ஓடி ஓடி ரொம்ப சோர்ந்து போயிட்டேன். இனி ஒருபோதும் அந்த தப்பை செய்யவே மாட்டேன் என்றார்.

ஜோவிகாவின் தெளிவான பதில்: மற்றொரு ரசிகர் ஜோவிகாவிடம், ஸ்ரீஹரி அண்ணாவ உங்களுக்கு எவ்வளவு பிடிக்கும்? அவர் மறுபடியும் உங்ககிட்ட வருவாரா? என்ற கேள்வி கேட்க, நீங்க யாரையாவது உண்மையா நேசிச்சா அதை அப்படியே ஃப்ரீயா விட்டுடுங்க அது உங்களை தேடி வந்தா அது உங்களுடையது, உங்களுக்கு சொந்தமானது. அப்படி இல்லன்னா எப்பவுமே அது உங்களோடது கிடையாது என்று ஜோவிகா மிகவும் பக்குவமாக பதில் அளித்துள்ளார். ஜோவிகா சின்ன பெண்ணாக இருந்தாலும், அவர் எடுக்கும் முடிவில் தெளிவாகவே இருக்கிறார்.

ஒதுக்கிய குடும்பம்: கடந்த மாதம் விஜய்குமாரின் பேத்தி அனிதாவின் மகள் தியாவுக்கு திருமணம் நடந்து முடிந்தது. தமிழ் திரையுலகமே ஒட்டுமொத்தமாக திரண்டு வந்த இந்த திருமணத்தில் வனிதா கலந்து கொள்ளவில்லை. அவருக்கு அழைப்பிதழ் கொடுக்கவில்லை. வனிதா குடும்பத்தோடு சேர்ந்துவிட வேண்டும் என்று எவ்வளவு முயற்சி செய்தும் வனிதாவை அவரது குடும்பத்தினர் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை என்பது, இந்த திருமணத்தின் மூலம் தெளிவாக தெரிந்துவிட்டது. ஆனால், வனிதாவின் மகன் ஸ்ரீஹரி திருமணத்தில் கலந்துகொண்டு டான்ஸ் ஆடிய வீடியோவை இணையத்தில் காண முடிந்தது.
வாழ்க்கையே போச்சு: சமீபத்தில் வனிதா யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், அப்பா சொல்வதைக் கேட்டு நடக்கும் ஒரே பெண் நான் தான். ஆனால் என் தந்தை என் வாழ்க்கையை மோசமாக்கினார். என் விருப்பப்படி நடந்திருந்தால் என் வாழ்க்கை இப்படி இருந்து இருக்காது.. அப்பாவின் பேச்சைக் கேட்டு என் வாழ்க்கையே மாறிவிட்டது. எல்லாத்துக்கும் காரணம் என் அப்பா என வனிதா அந்த பேட்டியில் கூறியிருந்தார்.


Click it and Unblock the Notifications











