Bigg Boss Vichithra -பிக்பாஸ் விசித்திராவை நைட் ரூமுக்கு அழைத்த டாப் ஹீரோ இவரா?.. பூகம்பம் ஏற்படுத்திய கதை

சென்னை: Bigg Boss Vichithra (பிக்பாஸ் விசித்திரா) பிக்பாஸ் சீசன் 7ல் விசித்திரா சொன்ன கதை பலரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தி கலங்க செய்திருக்கிறது.

நடிகை விசித்திரா 90களில் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர். கவுண்டமணி, வடிவேலு உள்ளிட்டோருடன் நடித்திருக்கிறார். காமெடி வேடங்களில் மட்டுமின்றி கிளாமர் வேடங்களிலும் நடித்திருக்கும் அவருக்கு அப்போது பலரும் ரசிகர்களாக இருந்தனர். பெரிய ரவுண்டு வந்துகொண்டிருந்த அவர் திடீரென நடிப்பிலிருந்து ஒதுங்கி திருமணம் செய்துகொண்டு செட்டிலானார்.

Bigg Boss Vichithra shares her worst experience in cinema

ரீ என்ட்ரி: சூழல் இப்படி இருக்க பல வருடங்களுக்கு பிறகு சின்னத்திரை மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். அதன்படி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பலரது கவனத்தை ஈர்த்த அவர் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசனில் கலந்துகொண்டிருக்கிறார். வயது மூப்பு காரணமாக விரைவிலேயே வீட்டிலிருந்து வெளியேறிவிடுவார் என்றுதான் பலரும் எதிர்பார்த்தார்கள்.

டஃப் போட்டியாளர்: ஆனால் எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்று பிக்பாஸ் சொல்வது போல் இளம் போட்டியாளர்களுக்கு பெரும் சவால் அளித்துவருகிறார் விசித்திரா. ஹவுஸ் மேட்ஸ் மீது அவர் வைத்திருந்த அக்கறையை அவர்களே கிண்டல் செய்த பிறகு வேறு மோடுக்கு மாறினார் விச்சு. அதிலும் டூத் பிரஷ் கொடுக்க மறுத்த மாயாவுக்கு எதிராக விசித்திரா செய்த வெளியிருப்பு போராட்டம் பலரையும் கவர்ந்தது. அதுமட்டுமின்றி பிரதீப் விவகாரத்தில் விசித்திராவின் கருத்து பெரும்பாலானோரால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதேபோல் கமல்ஹாசனிடமும் தைரியமாக பல கருத்துக்களை பேசினார் விசித்திரா.

விசித்திரா சொன்ன கதை: இந்நிலையில் பிக்பாஸில் நேற்று பூகம்பம் என்ற டாஸ்க் வழங்கப்பட்டது. அதன்படி ஒவ்வொரு போட்டியாளரும் தங்களது வாழ்வில் பூகம்பத்தை ஏற்படுத்திய சம்பவத்தை பகிர்ந்துகொள்ள வேண்டும். அதில் பேசிய விசித்திரா, "முன்னணி நடிகர் ஒருவருடன் நடிக்கும் வாய்ய்ப்பு கிடைத்தது. அந்த படத்தின் ஷூட்டிங்கின் முதல் நாள் அவரிடம் என்னை அறிமுகம் செய்துகொள்வதற்காக சென்றேன்.

ரூமுக்கு வந்துடு: என்னை பார்த்த அவர் என் பெயரை கூட கேட்காமல், இந்தப் படத்தில் நீ நடிக்கிறியா? நடிக்கிறனா நைட் என் ரூமுக்கு வந்துடு என்று சொன்னார். எனக்கு ஒரே அதிர்ச்சி. பிறகு அன்று இரவு என் ரூமை தாழ்ப்பாள் போட்டுக்கொண்டு தூங்கிவிட்டேன். நான் ரூமுக்கு செல்லாதது அந்த ஹீரோவுக்கு கோபம். அடுத்த நாள் அவர் ஆட்களை அனுப்பி என்னுடைய ரூமை தட்ட சொன்னார். அவர்களும் முழுக்க மது அருந்திவிட்டு எனது ரூமை தட்டிக்கொண்டே இருந்தார்கள்.

இப்போது என்னுடைய கணவராக இருப்பவர் அந்த சம்பவத்தின்போது நான் தங்கியிருந்த ஹோட்டலின் மேலாளராக இருந்தார். அவர் எனக்கு உதவ முன் வந்தார். அதன்படி ஒவ்வொரு நாளும் எனக்கு ஒவ்வொரு ரூமை ஒதுக்கிக்கொடுத்தார். நான் எந்த ரூமில் இருக்கிறேன் என்று ஹீரோவுக்கும், அவருடைய ஆட்களுக்கும் தெரியாது. இது மேற்கொண்டு அவரை கோபப்படுத்தியது. அப்படி ஒருநாள் அந்த ஷூட்டிங்கில் ஆக்‌ஷன் காட்சி எடுத்தார்கள். அப்போது சண்டை கலைஞர் என்னை தவறான முறையில் தொட்டார்.

இரண்டு முறை அப்படி செய்தார். மூன்றாவது முறை கையும் களவுமாக பிடித்து சண்டை பயிற்சியாளரிடம் சென்று முறையிட்டேன். ஆனால் அவரோ என்னை அறைந்துவிட்டார். பிறகு அப்போதைய நடிகர் சங்க தலைவரிடம் முறையிட்டேன். அவரோ இதையெல்லாம் மறந்துவிட்டு வேலையை பாரு ம்மா என்று சொன்னார். அந்த சம்பவத்தில் எனக்கு திரைத்துறையிலிருந்து யாருமே சப்போர்ட் செய்யவில்லை. பிறகுதான் சினிமாவிலிருந்து விலகினேன்" என்றார்.

யார் அந்த ஹீரோ?: விசித்திரா சொன்ன இந்தக் கதை பெரும் பூகம்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதனையடுத்து விசித்திரா சொன்ன அந்த ஹீரோ யார் என்றும் பலர் பல கருத்துக்களை தெரிவித்துவருகின்றனர். அதன்படி பெரும்பாலான நெட்டிசன்கள், அது ஒரு தெலுங்கு படம் என்று பலான காட்சிகளுக்கு பெயர் பெற்ற மூத்த நடிகர்தான் அவர் என்றும் தெரிவித்துவருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X