Vichithra - விசித்திராவை படுக்கைக்கு அழைத்த டாப் ஹீரோ.. இதுதான் அந்த சீனா?.. ஆதாரத்தை அடுக்கும் நெட்டிசன்ஸ்
சென்னை: Bigg Boss Vichithra (பிக்பாஸ் விசித்திரா) டாப் ஹீரோ ஒருவர் தன்னை படுக்கைக்கு அழைத்ததாக பிக்பாஸ் விசித்திரா தெரிவித்ததை அடுத்து நெட்டிசன்கள் ஆதாரத்தை அடுக்க ஆரம்பித்திருக்கின்றனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் தொடங்கி நடந்துவருகிறது. இதுவரை அனன்யா, பவா செல்லதுரை, விஜய் வர்மா, வினுஷா, அன்னபாரதி, யுகேந்திரன், பிரதீப், கானா பாலா, ஐஷு உள்ளிட்டோர் வீட்டிலிருந்து வெளியே சென்றிருக்கின்றனர். இவர்களில் பவா செல்லதுரை தானாக வெளியேற பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்ட் கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கலக்கும் விசித்திரா: பிரதீப் ஆண்டனி வீட்டிலிருந்து வெளியே அனுப்பப்பட்ட பிறகு விசித்திராவுக்கு அதிகம் ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர் பிரதீப் விஷயத்தில் பேசிய விதமும்; கமல்ஹாசனிடம் தைரியமாக பேசிய சில விஷயங்களும் ரசிகர்களை ஈர்த்தன. அதுமட்டுமின்றி தனக்கு எதிராக செயல்படும் ஹவுஸ் மேட்ஸுகளை அவர் டீல் செய்யும் விதமும் அப்ளாஸை அள்ளி வருவது குறிப்பிடத்தக்கது.
பூகம்பம் டாஸ்க்: இந்த சூழலில் நேற்று பிக்பாஸில் பூகம்பம் என்ற டாஸ்க் வழங்கப்பட்டது. அதில் ஒவ்வொரு போட்டியாளரும் தன்னுடைய வாழ்க்கையில் பூகம்பத்தை ஏற்படுத்திய சம்பவங்களை சொல்ல வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. அதன்படி பேசிய விசித்திரா, "2001ஆம் ஆண்டு நான் பெரிய ஹீரோ ஒருவரின் படத்தில் கமிட்டானேன். ஷூட்டிங்கின் முதல் நாளில் என்னை அவரிடம் அறிமுகம் செய்துகொள்வதற்காக சென்றேன். அவரோ எனது பெயரைக்கூட கேட்காமல் நைட் என் ரூமுக்கு வந்துடு என்றார்.
அறைந்த சண்டை பயிற்சியாளர்: ஆனால் நான் அவர் ரூமுக்கு செல்லாமல் எனது ரூமுக்கு சென்று அன்று இரவு தூங்கிவிட்டேன். அதனையடுத்து அவரது ஆட்கள் அடுத்தடுத்த நாட்களில் மது அருந்திவிட்டு எனது ரூமை தட்டிக்கொண்டே இருந்தார்கள். அந்த சமயத்தில் ஹோட்டலின் மேனேஜர் (இப்போது விசித்திராவின் கணவர்) எனக்கு உதவி செய்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ரூமில் என்னை தங்க வைத்தார்.
அதனால் நான் எந்த ரூமில் இருக்கிறேன் என்று ஹீரோவுக்கு தெரியவில்லை. அதுவும் அவருக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து ஒரு கிராமத்தில் சண்டை நடப்பது போல் காட்சி படமாக்கப்பட்டது. அந்த சமயத்தில் என்னை சண்டை கலைஞர் ஒருவர் தவறான அர்த்தத்தில் தொட்டார். நான் உடனே சண்டை பயிற்சியாளரிடம் சென்று முறையிட்டேன். அவரோ என்னை அறைந்துவிட்டார். அந்த சம்பவத்தில் திரைத்துறையிலிருந்து யாருமே எனக்கு சப்போர்ட் செய்ய வரவில்லை. பிறகுதான் சினிமாவிலிருந்து ஒதுங்கினேன்” என்றார்.
பூகம்பம்: விசித்திரா சொன்ன இந்த விஷயம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக யார் அந்த டாப் ஹீரோ என்ற தேடலில் இறங்கினர் நெட்டிசன்ஸ். அதன்படி 2001ஆம் ஆண்டு விசித்திரா நடிப்பில் வெளியான படங்களின் லிஸ்ட்டை ஆராய்ந்து; அந்த ஹீரோ தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாதான் என்கின்றனர்.
குறிப்பாக அந்த சம்பவம் நடந்தது தெலுங்கு படத்தில் என்று விசித்திரா கூறியிருந்ததால் 2001ஆம் ஆண்டு வெளியான பலேவடிவி பாசு படத்தில்தான் விசித்திரா சொன்னது நடந்திருக்கிறது என்று கூறும் சமூக வலைதளவாசிகள் தற்போது விசித்திரா சொன்ன சீன் வீடியோவையே ட்விட்டரில் ஷேர் செய்துவருகின்றனர். அதில் விசித்திரா சொன்னது மாதிரியே ஒரு சண்டை காட்சி இருக்கிறது. அந்தக் கூட்டத்துக்குள் விசித்திரா செல்லும்படியும் காட்சிகள் இருக்கின்றன. எனவே இதுதான் பிக்பாஸ் விச்சு சொன்ன சம்பவம் நடந்த சீன் என உறுதியோடு சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்.. அந்த வீடியோ இப்போது ட்ரெண்டாகியிருக்கிறது.


Click it and Unblock the Notifications











