என் கண்ணியமான காதலன் விக்ரமனுக்கு.. கிருபா முனுசாமி எழுதிய கடிதத்தை வெளியிட்டு விக்ரமன் விளக்கம்!

சென்னை: பிக் பாஸ் பிரபலமான விக்ரமன் மீது கிருபா முனுசாமி எனும் பெண் அடுக்கிய குற்றச்சாட்டு பூதாகரமாக வெடித்துள்ளது. விக்ரமன் தன்னிடம் பணம் வாங்கியதாகவும், திருமணம் செய்துக் கொள்கிறேன் எனக் கூறி தன்னை ஏமாற்றியதாகவும் புகார்களை அடுக்கி உள்ளார்.

சமீபத்தில், விக்ரமனுக்கு காசு கொடுத்தது பற்றியும், அவர் ஐ லவ்யூ சொன்னது போன்றும் ஒரு ஸ்க்ரீன் ஷாட்டை கிருபா வெளியிட்டது பரபரப்பை கிளப்பியது.

Bigg Boss Vikraman shares love letter from Kiruba and gives full explanation over the accusation

இந்நிலையில், தன் மீது சுமத்தப்பட்ட குற்ற்ச்சாட்டுகளுக்கு எதிராக விக்ரமன் ஒரு பெரிய விளக்கத்தை கொடுத்து, கிருபா தனக்கு எழுதிய காதல் கடிதத்தையும் வெளியிட்டுள்ளார்.

குற்றச்சாட்டுக்களை மறுக்கிறேன்: என் மீது கிருபா முனுசாமி என்பவர் கிளப்பி உள்ள அத்தனை குற்றச்சாட்டுக்களையும் மறுக்கிறேன். ஒரு நாணயம் என்றிருந்தால் அதற்கு இரண்டு பக்கம் இருக்கும். எனது பக்கத்தையும் கேளுங்கள், இதில், பாதிக்கப்பட்டவன் என்றால் அது நான் மட்டும் தான். என் மீது பழி சுமத்த வேண்டும் என்றே கிருபா இப்படியெல்லாம் செய்கிறார் என விக்ரமன் தனது தரப்பு வாதத்தை சமூக வலைதளத்தில் முன் வைத்துள்ளார்.

2020ல் நாங்கள் இருவரும் பழகினோம். அவர் பிஎச்டி படிப்புக்காக இங்கிலாந்து சென்று இருந்தார். அப்போது அவரிடம் எனது தேவைகளுக்காக பணம் வாங்கியது உண்மை தான். ஆனால், அவருக்கு வாக்கு கொடுத்ததை போலவே பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்ததும் அதில், கிடைத்த பணத்தையும் திருப்பி தந்து விட்டேன். அதற்கான ஸ்க்ரீன் ஷாட்டும் இதே இணைத்திருக்கிறேன்.

கிருபா எழுதிய காதல் கடிதம்: மேலும், இதில், 2022ம் ஆண்டு ஜூன் 15ம் தேதி லண்டனில் இருந்து கிருபா எனக்கு எழுதிய காதல் கடிதத்தையும் இணைத்துள்ளேன். நீங்களே இந்த காதல் கடிதத்தை படித்துப் பாருங்கள், மோசடி செய்பவனை பார்த்து எந்த பெண்ணாவது இப்படி ஒரு காதல் கடிதத்தை எழுதுவாரா? என விக்ரம் அந்த கடிதத்தையும் கிருபாவுக்கு பணத்தை திருப்பிக் கொடுத்த செக்கின் ஸ்க்ரீன் ஷாட்டையும் இணைத்து பதிவிட்டு தனது விளக்கத்தை கொடுத்துள்ளார்.

கண்ணியமான காதலன் விக்ரமனுக்கு: அந்த கடிதத்தில் கிருபா, கண்ணியமான காதலன் விக்ரமனுக்கு எனத் தொடங்கி தனது மனதில் ஆசைகளையும் தனது காதலுக்கு விக்ரமன் ஓகே சொல்லாமல், அரசியல் மீதே முழு ஆர்வமாக இருப்பது உள்ளிட்ட பல அந்தரங்க விஷயங்கள் இடம்பெற்றுள்ளன.

விக்ரமன் திருமணம் செய்துக் கொள்ள முடியாது என மறுத்த நிலையில், தான் விக்ரமன் பற்றி இப்படி அவதூறு கருத்துக்களை கிருபா அடுக்கி உள்ளார் என்றும் தன் மீது தப்பான குற்றச்சாட்டுகளை முன் வைத்து தனது அரசியல் மற்றும் சொந்த வாழ்க்கைக்கு பாதகம் விளைவிக்கும் அந்த பெண் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க தான் தயாராக உள்ளதாகவும் விக்ரமன் தனது விளக்க பதிவில் கூறியுள்ளார்.

Bigg Boss Vikraman shares love letter from Kiruba and gives full explanation over the accusation

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X