VJ Paaru: மாலையும் கழுத்துமாக பார்வதி - கமருதீன்.. கல்யாண பாட்டு ஜோடியாக ஆட்டம்.. என்னங்க நடக்குது?
சென்னை: பிக்பாஸ் தமிழ் சீசன் 9 முடிந்து ஒரு வாரம் ஆனாலும் அதில் போட்டியாளர்களாக களமிறங்கியவர்கள் குறித்த தகவல்கள் தொடர்ந்து வந்து கொண்டே உள்ளது. அதுவும் அவர்கள் எங்கு செல்கிறார்கள், யாருடன் செல்கிறார்கள், என்ன செய்கிறார்கள் என்பது உள்ளிட்ட பலவும் ரசிகர்களால் கவனிக்கப்படுகிறது. இந்த சீசனில் டைட்டிலை வென்ற திவ்யா கணேஷ் உள்ளிட்ட மற்ற போட்டியாளர்களை விட அதிகம் மக்களால் கவனிப்படுபவர்கள் என்றால் அது விஜே பார்வதியும் கமருதீனும் தான். இவர்கள் இருவரும் தங்களது ரசிகர்களை சந்திக்கும் நிகழ்ச்சியில் ஒரே மேடையில் மாலையும் கழுத்துமாக ஜோடி சேர்ந்து ஆடினர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
இருவரும் ரெட் கார்டு பெற்று வெளியே வந்த போது பெரும்பாலான ரசிகர்கள் மத்தியில் வெறுப்பை சம்பாதித்து இருந்தாலும், அவர்களுக்கு என்று ஆதரவுக் குரல்கள் இணையத்தில் தொடர்ந்து ஒலித்துக் கொண்டே தான் இருந்தது.

இப்படி இருக்கையில், பார்வதி தனது ரசிகர்களை சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கலந்து கொள்ள காரில் வந்த பார்வதிக்கு அவரது ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இது மட்டும் இல்லாமல், காருக்குள் இருந்த படி பார்வதியும் உற்சாகமாக ஆடிக் கொண்டே வந்தார். மேலும் ரசிகர்களும் ஆடிக் கொண்டே, அவருக்கு வரவேற்பு அளித்தனர். இது மட்டும் இல்லாமல் மேள தாளத்துடன் ரசிகர்கள் அவருக்கு வரவேற்பு அளித்தனர்.
கமருதீன் - பார்வதி: இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இதைப் பார்த்த பலரும் டைட்டில் வின்னர் திவ்யா கணேஷ்க்குக்கு கூட இந்த அளவுக்கு வரவேற்பு கொடுக்கபடவில்லையேப்பா என்று பதிவிட்டு வருகிறார்கள். அதேபோல், கமருதீன் தனது ரசிகர்களை சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது அவர் பேசுகையில், " ரசிகர்கள் அவரது மனைவி எப்படி இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டீர்கள் என்று கேள்வி எழுப்பினர். அதற்கு, நான் மிகவும் ஜாலியான ஒருவன். எனக்கு எப்போதும் அன்பைப் பொழிந்து கொண்டு இருக்கும் படியான, எதற்கு எடுத்தாலும் என்னங்க என்னங்க என்றும் மாமா மாமா என்றும் அழைத்துக் கொண்டு இருக்கும்படியான அமைதியான மனைவி அமைய வேண்டும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் தைரியமான சிங்கம் போன்ற பெண் மனைவியாக கிடைக்கவுள்ளார் என்று தெரிவித்தார். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
மாலையும் கழுத்துமாக: இது ஒரு புறம் இருக்க, இருவரும் ரசிகர்கள் சந்திப்பில், மாலையும் கழுத்துமாக, பாக்கு வெத்தல மாத்தி இப்போ பொண்ணு வந்தாச்சு என்ற பாடலுக்கு நடனம் ஆடியுள்ளனர். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இதைப் பார்த்த பலரும் திருமணமே செய்து கொண்டார்கள் போலயே என்று சந்தேகத்தை எழுப்பி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











