5வது சீசனுக்கு ரெடியாகிட்டியா குருநாதா.. வேட்டி சட்டையில் மாப்பிள்ளை போல மின்னும் ரியல் பிக் பாஸ்!
சென்னை: பிக் பாஸ் தமிழ் குரலுக்கு சொந்தக்காரரான சதீஷ் சாரதி சாஷோ வேட்டி சட்டையில் கலக்கும் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இப்போதான் பிக் பாஸ் தமிழ் சீசன் 4 முடிந்தது போல இருக்கிறது. அதற்குள் அடுத்த சீசனுக்கான வேலைகள் தொடங்கி விட்டன.
அடுத்த சீசனிலும் தனது கம்பீரக் குரலால் போட்டியாளர்களை பெண்டு நிமிர்த்த ரெடியாகிட்டீங்களா என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

முகத்தை காட்டாமல்
பிக் பாஸ் கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சியில் கூட முகத்தை காட்டாமல் வெறும் குரலாகவே அந்த நிகழ்ச்சியில் ஒலித்து வருபவர் நடிகர் சதீஷ் சாரதி சாஷோ தான். இவர் தான் பிக் பாஸ் குரலுக்கு சொந்தக்காரர் என்பதை ரசிகர்கள் சமூக வலைதளம் வாயிலாக தேடி அடையாளம் கண்டு கொண்டனர். சாஷோவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தையும் தொடர்ந்து பலர் ஃபாலோ செய்து வருகின்றனர்.

பாலிவுட் படங்களில்
பாலிவுட்டில் கடந்த 2014ம் ஆண்டு வெளியான மஞ்சுநாத் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் சாஷோ. தொடர்ந்து, பி.ஏ. பாஸ் 2 மற்றும் கஹானிபாஸ் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். பின்னர், எண்ட்மோல் ஷைன் இந்தியாவில் இணைந்து பிக் பாஸ் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்.

சீசன் 5
பிக் பாஸ் தமிழ் சீசன் 4 கடந்த ஆண்டு அக்டோபர் 4ம் தேதி தொடங்கி, இந்த ஆண்டு ஜனவரி 17ம் தேதி கிராண்ட் ஃபினாலேவுடன் நிறைவுற்றது. இந்நிலையில், பிக் பாஸ் தமிழ் சீசன் 5க்கான ஆரம்ப வேலைகள் மற்றும் போட்டியாளர்களை தேர்வு செய்தல் உள்ளிட்ட பணிகள் தொடங்கி உள்ளன.

பிக் பாஸ் சிம்பு
சட்டசபை தேர்தல் களத்தில் கமல்ஹாசன் மும்முரமாக ஈடுபட்டு வரும் நிலையில், பிக் பாஸ் தமிழ் சீசன் 5ஐ அவர் தொகுத்து வழங்க மாட்டார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், கமல்ஹாசனுக்கு பதிலாக நடிகர் சிம்பு நிகழ்ச்சியை தொகுத்து வழங்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

குக் வித் கோமாளி பிரபலங்கள்
வழக்கம் போல அடுத்த சீசனுக்கும் விஜய் டிவி ஆட்களையே தேர்வு செய்து வருகின்றனர் என்றும், குக் வித் கோமாளி சீசன் 2 பிரபலங்களான ஷகீலா, கனி, பாபா பாஸ்கர், கேபிஒய் பாலா உள்ளிட்ட பிரபலங்களை களமிறக்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

நடிகர் ஆனந்த் ராஜ்
பாட்ஷா படத்தில் வில்லனாக மிரட்டிய ஆனந்த் ராஜ், நானும் ரவுடி தான் உள்ளிட்ட பல படங்களில் தற்போது காமெடி நடிகராக மாறியுள்ளார். அவரை அடுத்த சீசனில் போட்டியாளராக உள்ளே கொண்டு வரவும் பேச்சு வார்த்தைகள் நடக்கின்றதாம். நடிகர் நகுலும் கலந்து கொள்வார் என்றும் கூறப்படுகிறது.

வேட்டி சட்டை
பிக் பாஸ் சீசன் 5க்கான ஆரம்ப வேலைகள் ஒரு பக்கம் நடக்க, பிக் பாஸ் குரலுக்கு சொந்தக்காரரான சாஷோ வேட்டி சட்டை அணிந்து மாப்பிள்ளை போல கெத்தாக போஸ் கொடுத்து இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது பதிவிட்டு வைரலாக்கி வருகிறார்.

ரெடியா குருநாதா
பிக் பாஸை சாண்டி மாஸ்டர், ஆரி அர்ஜுனா உள்ளிட்ட போட்டியாளர்கள் குருநாதா என்று அழைப்பது வழக்கம். இந்நிலையில், இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள், அடுத்த சீசனுக்கு ரெடியா குருநாதா என்றும், தொகுத்து வழங்கப் போவது கமலா? இல்லை சிம்புவா? சொல்லுங்க என்றும் நச்சரித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











