Bigg Boss 7 - பிரதீப்புக்கு ரெட் கார்டு.. கமலுக்கு விழும் பிளாக் மார்க்.. வைத்து செய்த யுகேந்திரன்

சென்னை: Pradeep Antony (பிரதீப் ஆண்டனி) பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டதை அடுத்து பிக்பாஸில் கலந்துகொண்ட யுகேந்திரன் கமல் மீது குற்றச்சாட்டை வைத்திருக்கிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் தொடங்கி நடந்துவருகிறது. இதுவரை விஜய் வர்மா, அனன்யா, யுகேந்திரன், வினுஷா, அன்னபாரதி உள்ளிட்டோர் எவிக்ட் செய்யப்பட்டிருக்கின்றனர். பவா செல்லதுரை தானாகவே வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். நிச்சயம் இந்த சீசனின் டஃப் போட்டியாளராக பிரதீப் திகழப்போகிறார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர்.

Bigg Boss Yugendran Criticized Kamal Haasan For Pradeep Red Card Issue

பிரதீப் ஆண்டனி: அதற்கேற்றபடிதான் அவரது கேமும் இருந்தது. ஆனால் அவருக்கு எதிராக திரும்பிய ஹவுஸ்மேட்ஸில் பலர் கமல் ஹாசனிடம் பிரதீப் குறித்து கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர். இதன் காரணமாக ஹவுஸ் மேட்ஸிடம் கருத்து கேட்கப்பட்டு பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டார். இது பெரும் அதிர்ச்சியையும் விமர்சனத்தையும் சந்தித்திருக்கிறது.

பிரதீப் ஆர்மி: குறிப்பாக பிரதீப் வெளியேற்றப்பட்டதெல்லாம் நியாயமே இல்லை. கமல் ஹாசன் தீர விசாரித்திருக்க வேண்டும் என்று ரசிகர்கள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் கூறிவருகின்றனர். அதேபோல் பிக்பாஸ் வீட்டுக்குள்ளும் விசித்திராவும், அர்ச்சனாவும் பிரதீப்புக்கு ஒரு வார்னிங் கொடுத்திருக்க வேண்டும் என தொடர்ந்து சொல்கின்றனர். இதன் காரணமாக அவர்களுக்கு எதிராக மாயா, பூர்ணிமா, ஜோவிகா, ஐஷு, நிக்சன் உள்ளிட்டோர் திரும்பியிருக்கின்றனர்.

மாயா அராஜகம்: சூழல் இப்படி இருக்க வீட்டை விட்டு வெளியேறிய பிரதீப் தன்னுடைய அடுத்த வேலையை பார்க்கப்போவதாகவும்; கமலுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து தீர விசாரிப்பதே மெய் என்றும் ட்வீட் செய்திருந்தார். இதற்கிடையே இந்த வார கேப்டனாக மாயா செயல்பட்டுவருகிறார். ஆனால் அவரது தலைமை பண்பை பலரும் கேள்வி எழுப்பிவருகின்றனர்.

அதற்கேற்றபடிதான் அவரது நடவடிக்கைகளும் இருக்கின்றன. உதாரணமாக அர்ச்சனா, விசித்திராவுக்கு டூத் பிரஷ் கொடுப்பதற்கு அவர் செய்த விஷயங்கள் எல்லாம் பலரையும் காண்டாக்கியது. எனவே பிரதீப்பிடம் காட்டின் கோபத்தை கமல் ஹாசன் மாயாவிடம் இந்த வாரம் காண்பிப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

யுகேந்திரன் குற்றச்சாட்டு: இந்நிலையில் பிக்பாஸ் 7ல் கலந்துகொண்ட யுகேந்திரன் பிரதீப் விஷயம் குறித்து பேசுகையில், "பிக்பாஸில் மாயா, பூர்ணிமா உள்ளிட்ட சிலருக்கு மட்டும்தான் கமல் ஹாசன் முக்கியத்துவத்தையும், முன்னுரிமையையும் தருகிறார். பிரதீப் விஷயத்தை கமல் ஹாசன் வேறு மாதிரி கையாண்டிருக்கலாம்.

பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்ற காரணத்துக்காக பிரதீப்பை வெளியேற்றும் முன்னர் கமல் ஹாசன் தன் முகத்தை கண்ணாடியில் ஒருமுறை பார்த்து நிதானமாக யோசித்திருக்க வேண்டும். பிக்பாஸ் மேடையை கமல் அரசியல் மேடையாக பயன்படுத்துகிறார். பிரதீப் விஷயத்திலும் அரசியல் செய்து வெளியேற்றிவிட்டார்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X