’கோட்’ படத்தில் பிக் பாஸ் பிரபலத்துடன் மோகன்.. கடைசி கட்ட படப்பிடிப்பில் என்னவொரு வில்லத்தனம்!

சென்னை: வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய், டாப் ஸ்டார் பிரசாந்த், நடனப் புயல் பிரபுதேவா உள்ளிட்டோருடன் வெள்ளி விழா நாயகன் மோகனும் நடித்து வருகிறார். கோட் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு புதுச்சேரியில் நடைபெற்று வரும் நிலையில், பிக் பாஸ் பிரபலத்துடன் மோகன் எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது ட்ரெண்டாகி வருகிறது.

80 களின் கனவு கண்ணனாக வலம் வந்த மோகன் சுட்ட பழம் படத்திற்கு பிறகு எந்த ஒரு படத்திலும் நடிக்காமல் பல ஆண்டுகளாக சினிமாவில் இருந்து விலகி இருந்த நிலையில் தற்போது ஹரா படத்தில் ஹீரோவாகவும் கோட் படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார்.

Vijay Mohan Goat Bigg Boss Yugendran

விஜய்யின் மாமா சுரேந்திரன் பல படங்களில் மோகனுக்கு டப்பிங் பேசிய நிலையில், தற்போது விஜய்யுடன் இணைந்து மோகன் நடிப்பதை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ரசிகர்களுக்கு செம ட்ரீட்: வெங்கட் பிரபு இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் தளபதி விஜய் நடித்து வரும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படம் படத்தின் பெயரைப் போலவே பிரம்மாண்ட படமாக வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த படம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கான சரியான ட்ரீட்டாக உருவாகி வருகிறது. பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, மோகன், ஜெயராம், சிவகார்த்திகேயன் மற்றும் விஜயகாந்த்தின் ஏஐ கேமியோ என வெங்கட் பிரபு வேற லெவல் ட்ரீட் கொடுக்க காத்துக் கொண்டிருக்கிறார்.

மல்டி ஸ்டார் தான் ஜெயிக்கும்: பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும் என்றால் ஒரே ஒரு நடிகரை நம்பி இனிமேல் படம் எடுத்தால் வேலைக்கு ஆகாது என்பதை தமிழ் சினிமா புரிந்துகொண்ட நிலையில் ரஜினிகாந்த், விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களே மல்டி ஸ்டார் படங்களில் நடித்த தொடங்கியுள்ளனர். ஏகப்பட்ட நட்சத்திரங்கள் ஒரு படத்தில் இருந்தால் அதைப் பார்க்க பல்வேறு ரசிகர்கள் திரையரங்கிற்கு வருவார்கள் என்பதால் தான் இப்படி மல்டி ஸ்டாரர் படங்கள் சமீபகாலமாக அதிகரித்துள்ளன.

மோகனுடன் பிக்பாஸ் பிரபலம்: விஜய் நடித்த யூத் படத்தில் வில்லனாக நடித்த யுகேந்திரன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற நிலையில், தற்போது பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் விஜய்யுடன் கோட் படத்தில் நடித்து வருகிறார். நடிகர் மோகனின் வில்லன் டீமில் யுகேந்திரன் உள்ளார் என தெரிகிறது. இருவரும் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.

மலேசியா வாசுதேவனுடன்: நடிகர் விஜய் நடித்த பூவே உனக்காக, பத்ரி உள்ளிட்ட படங்களில் அவருடன் இணைந்து மலேசியா வாசுதேவன் நடித்துள்ளார். மலேசியா வாசுதேவனின் மகன் யுகேந்திரனுக்கும் தொடர்ந்து தனது படங்களில் நடிக்க விஜய் வாய்ப்புகளை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. கோட் படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகள் புதுச்சேரியில் படமாக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே விஜய் நடித்த போர்ஷன்கள் முடிந்த நிலையில், மோகன், ஜெயராம் மற்றும் யுகேந்திரன் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக கூறுகின்றனர். விரைவில் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் வெங்கட் பிரபு நிறைவு செய்ய உள்ளார். செப்டம்பர் 5ம் தேதி கோட் படம் திட்டமிட்டபடி ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X