நேத்தே பாத்தாச்சு.. இத போடத்தான் எக்ஸ்ட்ரா 5 நிமிஷமா.. பிக்பாஸ் புரமோவை வெளுக்கும் நெட்டிசன்ஸ்!
சென்னை: பிக்பாஸ் புரமோவை பார்த்த ரசிகர்கள் இதைத்தான் நேத்தே பார்த்தாச்சே என பதிலடி கொடுத்துள்ளனர்.
Recommended Video
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாம் நாள் எபிசோட் இன்று இரவு ஒளிபரபப்பாக உள்ளது. இதற்கான முதல் புரமோ வெளியாகியுள்ளது.
ஆனால் இந்த புரமோவை நேத்தே பார்த்தாகிவிட்டது என விஜய் டிவியின் டிவிட்டர் அட்மினை வச்சு செய்து வருகின்றனர்.

உடனடியாக நீக்கம்
நேற்று மாலையே புரமோவை வெளியிட்டு அதனை உடனடியாக நீக்கியது விஜய் டிவி. இருந்த போதும் ரசிகர்கள் அதனை பார்த்து விட்டனர். சிலர் அதனை டவுன்லோட் செய்து சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வந்தனர்.

புரோக்கன் ஹார்ட்
அந்த புரமோவில் நேற்றைய எபிசோடில் ஷிவானி நாராயணனுக்கு சக ஹவுஸ்மேட்ஸ்கள் புரோக்கன் ஹார்ட் கொடுக்கப்பட்ட காட்சிகள் காட்டப்படுவதும், அதனால் ஷிவானி நொந்து போய், ஜிம்மில் இருக்கும் பாலா மற்றும் சோமசேகரிடம் பேசுவதாகவும் உள்ளது.

கேம் பிளான்
அவருக்கு ஆறுதல் கூறும் வகையில் நீங்கள் நீங்களாக இருங்கள் என்றும், இன்ஸ்டாகிராமில் உங்களுக்கு எவ்ளோ ஃபேன்ஸ் இருக்காங்க இதுக்கு போய் கவலைப்பறீங்க என்றும் அவரை சமாதானம் செய்கின்றனர். இதனை தொடர்ந்து கார்டன் ஏரியாவில் ஆரியிடம் பேசும் ஷிவானி, எனக்கு எந்த கேம் பிளானும் இல்லை என்று கூறுகிறார்.

என்ன ஆகனும்?
அதற்கு ஆரி, நீங்கள் இன்ஸ்டாகிராமில் தினமும் ஒரு வீடியோ போடுறீங்களே.. என்ன ஆகனும்ங்கிறதுக்காக அதை போட்றீங்க என கேட்கிறார். இப்படியாக முடிகிறது அந்த புரமோ. ஆரிக்கு ஷிவானி என்ன பதில் சொல்ல போகிறார் என்பது இன்றைய எபிசோடில் தெரிய வரும்.

ரொம்ப மோசம்டா
இந்த புரமோவைதான் நேத்தே போட்டுவிட்டு டெலிட் செய்தார்கள். இதனை பார்த்த நெட்டிசன்கள், அடேய் நேத்தே பாத்தாச்சு... இத போடத்தான் எக்ஸ்ட்ரா 5 நிமிஷம் எடுத்துகிட்டயாடா... ரொம்ப மோசம்டா டேய் என பங்கம் செய்துள்ளனர்.

தூக்கத்துல
மற்றொரு நெட்டிசனான இவர் அடேய் எடிட்டர் இந்த கருமத்த நேத்து இருந்து கட் பண்ணிட்டு இருந்தீயா என தூள் படத்தில் பரவை முனியா செய்யும் வேலையின் போட்டோவை போட்டு கேட்டுள்ளார். இந்த நெட்டிசன், நேத்து தூக்கத்துல தெரியாம போட்டுட்டான் போல என கூறியுள்ளார்.

கன்பியூஸ் ஆயிட்டார போல
மற்றொரு நெட்டிசனான இவர் என்னடா இது.. நேத்து போட்ட புரமோஷன இன்னைக்கு போடுறீங்க.. பாவம் பிக்பாஸ் கன்பியூஸ் ஆயிட்டாரு போல என பதிவிட்டு வடிவேலுவின் சூப்பர் ரியாக்ஷனை ஷேர் செய்துள்ளனர்.

என்ன கேள்வி இது?
இன்னும் சில நெட்டிசன்கள், ஷிவானியிடம் அப்படி ஒரு கேள்வியை கேட்ட ஆரியை விளாசியுள்ளனர். இது என்ன முட்டாள் தனமான கேள்வி ஆரி? எதுக்கு இன்ஸ்டால போஸ்ட் போட்டோ போடுவாங்க? பாப்புலர் ஆகனும்னு தானே? என கேட்டுள்ளார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











