பெண் போட்டியாளர் குளிக்கும் போது தாழ்பாளை உடைத்த நடிகர்.. பிக்பாஸ் வீட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

மும்பை: பிக்பாஸ் வீட்டில் பெண் போட்டியாளர் குளிக்கும் போது நடிகர் ஒருவர் தாழ்பாளை உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சி 15வது சீசனை எட்டியுள்ளது.

இம்மாதம் இரண்டாம் தேதி முதல் பிக்பாஸ் சீசன் 15 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.

16 போட்டியாளர்கள்

16 போட்டியாளர்கள்

இந்த சீசனையும் பிரபல பாலிவுட் நடிகரான சல்மான் கானே தொகுத்து வழங்கி வருகிறார். இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சி கலர்ஸ் இந்தி சேனலில் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் மொத்தம் 16 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் வாரத்திலேயே எவிக்ஷன் நடைபெற்றது.

பகீர் கிளப்பும் பிக்பாஸ்

பகீர் கிளப்பும் பிக்பாஸ்

இதில் பங்கேற்ற நடிகர் சஹில் ஷெராஃப் 8வது நாளே பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் 15 போட்டியாளர்களுடன் நிகழ்ச்சி சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள புரமோ பகீர் கிளப்பியுள்ளது.

நடிகை குளிக்கும் போது தாழ்பாளை உடைத்த நடிகர்

நடிகை குளிக்கும் போது தாழ்பாளை உடைத்த நடிகர்

அதாவது பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள டிவி நடிகையான வித்தி பாண்டியா குளித்துக் கொண்டிருந்தார். அப்போது டிவி நடிகரும் மாடலுமான பிரதிக் சேஹாஜ்பால் பாத்ரூமின் தாழ்பாளை உடைத்தார். இதனால் பெரும் அதிர்ச்சி அடைந்தி வித்தி, இந்த சம்பவத்திற்காக ப்ரதிக்கை விளாசியுள்ளார்.

ஏன் தாழ்பாளை உடைத்தீர்கள்?

ஏன் தாழ்பாளை உடைத்தீர்கள்?

மேலும் பாத்ரூம் தாழ்பாள் உடைக்கப்பட்டது குறித்து அவர் வீட்டில் உள்ள அனைவருக்கும் தெரிவிக்கிறார். மேலும் பிரதிக்கிடமும், "ஒரவர் குளிக்கும்போது ஏன் தாழ்பாளை உடைத்தீர்கள்?" என்றும் வித்தி கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் ஒரு ஆண் போட்டியாளராக இருந்தாலும், அவர் குளிக்கும்போது இது போன்ற செயலை செய்யாதீர்கள் என்றும் பிரதிக்கிற்கு அறிவுரை கூறியுள்ளார் வித்தி.

கூலாக பதில் கூறிய நடிகர்

கூலாக பதில் கூறிய நடிகர்

அதேநேரத்தில் வித்தி, பிரதிக் மீது எந்தக் குற்றச்சாட்டையும் சுமத்தவில்லை. ஆனால் மற்ற போட்டியாளர்கள் நடிகர் பிரதிக்கிற்கு எதிராகவும் நடிகை வித்திக்கு ஆதரவாகவும் கோதாவில் குதித்தனர். ஆனால் பிரதிக் இது அவரது விளையாட்டு என்று கூலாக கூறியதோடு தான் செய்த காரியத்திற்காக சிறிதும் கவலைப்படவில்லை. இதனால் சக போட்டியாளர்கள் மேலும் கோபம் அடைந்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X