இந்தா அடுத்த ப்ரொமோ.. அவரு ட்ரிகர் பண்றாரு.. அவருக்கு ப்ரொமோல வரனும்.. புலம்ப ஆரம்பித்த அனிதா!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த புரமோ வெளியாகியுள்ள நிலையில் அதுவும் செய்தி வாசிப்பாளர் அனிதாவை மையப்படுத்தியே உள்ளது.
Recommended Video
நேற்றைய எபிசோடில் செய்தி வாசித்ததால் ஏற்பட்ட பிரச்சனை பிக்பாஸ் வீட்டில் இன்னும் ஓயவில்லை.
சுரேஷ் சக்கரவர்த்தி சொல்லாத ஒன்றை ஊதி பெருசாக்கி நேற்று முதல் அதையே பிடித்து தொங்கிக் கொண்டிருக்கிறார் அனிதா.

குறும்படம்
சிலர் வணக்கம் சொல்லும் போது எச்சில் தெறிக்கும் என சாதாரணமாய் சுரேஷ் சொன்னதை, செய்தி வாசிப்பாளர்களைதான் சொன்னார் என பூதாகரமாக்கினார் அனிதா. மேலும் குறும்படமும் கேட்டார். அதனை பார்த்து கடுப்பான நெட்டிசன்கள், இதற்கு குறும்பட வேறு வேண்டுமா என நக்கலடித்தனர்.

கேலி சிரிப்பு
இந்நிலையில் இன்று வெளியான இரண்டாவது புரமோவிலும் அதே விஷயத்திற்காக சுரேஷிடம் மல்லுக்கட்டினார் அனிதா. மேலும் பாலா எரும மாடுக்கு எத்தனை சூடு என சுரேஷை கிண்டல் செய்யும் விதமாக கேட்டதை பார்த்து கேலியாக சிரித்தார் அனிதா. இந்த விஷயங்கள் ரசிகர்களை எரிச்சல் படுத்தியுள்ளது.

அப்படிதான் இருந்துச்சு
தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான மூன்றாவது புரமோ வெளியாகியுள்ளது. அதிலும் அனிதாவே முன்னிலைப் படுத்தப்பட்டுள்ளார். அதில் சோமுவிடம் பேசும் அனிதா, ஒரு வார்த்தை எக்ஸ்ட்ரா சொல்லிவிட்டேனாம், அவர் வேற கூட சொல்லட்டும் எனக்கு அர்த்தம் அப்படிதான் இருந்துச்சு.

அதுதான் நியாபகம் இருக்கும்
உடனே அவர் அதை பிடித்துக்கொண்டார். எஸ்கேப் ஆக எனக்கு அந்த நியூஸ் ரீடர் வார்த்தை போதும். நான் நியூஸ் ரீடர்னு சொல்லல குறும்படம் போடனும். சரி நியூஸ் ரீடர்னு சொல்லல.. ஆனா எச்சில் தெறிக்கும்னு சொன்னீங்கள்ல. மக்கள் அதையெல்லாம் மறந்துடுவாங்க.. நியூஸ் ரீடர்னு நான் எக்ஸ்ட்ரா வோர்டு போட்டதைதான் நியாபகம் வச்சிப்பாங்க.

ட்ரிகர் பண்றாரு
எனக்கு இது தேவையில்லாத கெட்டப் பேரு. அவரு இதை கிரயேட் பண்ண பார்க்குறாரு.. அவரு என்ன ட்ரிகர் பண்ணதான் ட்ரை பண்ணிக்கிட்டு இருக்காரு.. அவருக்கு புரமோல வரனும்.. நீங்க அவருக்கு நியை புரமோ போடுங்க.. இவ்வாறு கேமராவிடம் சோமுவிடமும் மாறி மாறி புலம்பி தீர்த்திருக்கிறார் அனிதா சம்பத்.

வாய் கொஞ்சம் ஓவர்
இதனை பார்த்த நெட்டிசன்கள், இந்த அனிதாவுக்கு வாய் கொஞ்சம் ஓவர்தான் போல.. என கூறியுள்ளனர். இன்னும் சிலர், புரமோவ பத்தி பேசுறதையும் நடந்துக்குறதையும் பார்த்தா உங்களுக்குதான் அப்படி ஒரு எண்ணம் இருப்பதாக தெரிகிறது என விளாசியிருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











