நான் எங்கடா போவேன்.. பாலாஜியை கட்டிப்பிடித்து கதறிய அர்ச்சனா.. கலங்க வைக்கும் புரமோ!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய மூன்றாவது புரமோ பயங்கர எமோஷனலாக உள்ளது.
Recommended Video
பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று முதலே அர்ச்சனாவுக்கும் பாலாஜிக்கும் இடையே மோதல் இருந்து வருகிறது. தன்னை உதாசீனப்படுத்தும் பாலாஜியை கார்னர் செய்கிறார் அர்ச்சனா.
தன்னை குழந்தை என்று கூறியதால் அர்ச்சனா மீது கடுப்பில் உள்ள பாலாஜி, அவர் ஒரு தலைபட்சமாக நடந்து கொள்வதாக குற்றம்சாட்டி வருகிறார்.

கடும் விமர்சனம்
இந்நிலையில் இன்று வெளியான முதல் புரமோ நேற்றைய கூத்தின் தொடர்ச்சியாக இருந்தது. இதில் அர்ச்சனா படு மோசமாக நடந்து கொண்டார். இதனால் சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்துக்கு ஆளானார். பிக்பாஸில் வீட்டில் குரூப்பிஸம் பச்சையாக தெரியுது என விளாசினர் நெட்டிசன்கள்.

காதல் ட்ராக்
இரண்டாவது புரமோவில் ஷிவானிக்கும் பாலாஜிக்கும் இடையே கெமிஸ்ட்ரி வொர்க்கவுட் ஆவதாகவும் இதனால் பாலாஜியை சம்யுக்தா கிண்டல் பண்ணுவதாகவும் இருந்தது. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது புரமோ தற்போது வெளியாகியுள்ளது.

நான் மிஸ் செய்த குழந்தை
இதில் பேசும் அர்ச்சனா, உனக்கு என்னை பிடிக்கலங்றது, இன்னைக்கு மட்டுமில்ல உனக்கு ஃபர்ஸ்ட்லேருந்தே என்னை பிடிக்கலன்னு தெரியும். எனக்குள்ள இருக்கும் ஒரு அம்மா, திரும்ப திரும்ப நான் மிஸ் செய்த ஒரு குழந்தையை உனக்குள் தேடிக்கொண்டே இருந்தேன்.

எங்கேடா போவேன்
ஆனா நீ, நான் அந்த குழந்தை இல்லை என்று நீ எனக்கு சொல்லியாச்சு. அதனால் நான் தள்ளி நிற்கிறேன். உனக்குள்ளே அது இல்லை என்று எனக்கு தெரிகிறது. என்னை வேண்டாம் வேண்டாம் என்று சொன்னால் நான் எங்கேடா போவேன் என தழுதழுத்த குரலில் பேசும் அர்ச்சனா, எனக்கு என் பிள்ளையா நீ வேணும்டா என்று கதறுகிறார்.

செம எமோஷனல்
அர்ச்சனா கதறுவதையும் பேசுதையும் கேட்டு உடைந்து போகும் பாலாஜி, கண்ணீருடன் அர்ச்சனாவுக்கு அருகில் சென்று அவரை கட்டியணைத்து அழுகிறார். இந்த எமோஷனலான தருணத்தில் பின்னணியில் ராம் படத்தில் இடம்பெற்ற ஆராரிராரோ பாடல் ஒலிக்கிறது. பார்க்கும்போதே கண்களில் நீரை வரவழைப்பதாக உள்ளது இந்த புரமோ.


Click it and Unblock the Notifications











